…
…
சன் டிவி பற்றிய செய்தி விமரிசனம் ஒன்று, இந்த தளத்தில் 4 நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது…
அதையொட்டி, திரு. Don Ashok என்கிற நண்பர் அதற்கான ஆதாரம் தர முடியுமா என்று கேட்டிருந்தார்… மேலும் அவர்,
———————-
” சண் கலாநிதிமாறன் அவர்கள் என்றுமே முறைகேடுகளில் ஈடுபடுவதில்லை என்பது உறுதியாக எனக்கு தெரியும் .அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.” என்றும் கூறி இருக்கிறார்.
———————–
ஆதாரம் இல்லாமல் எந்த செய்தியையும் வெளியிடும் வழக்கம் இந்த விமரிசனம் தளத்திற்கு கிடையாது என்று அந்த நண்பருக்கு சொல்லிக்கொள்ளும் அதே வேளையில், அந்த ஆதாரத்தையும், அதில் வெளிவந்த முழுசெய்தியையும்
அவருக்கும், அவரோடு சேர்த்து விமரிசனம் தள வாசக நண்பர்கள் அனைவரின் பார்வைக்காகவும் கீழே தருகிறேன்.
—————————————————————————————————————————

…
…
சன் குழுமத்தின் சார்பில் பல நூறு கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கி இருக்கும் தனியார் ஜெட் விமானத்தில் கலாநிதிமாறன் மட்டுமே பயணிப்பது ஏன் என்று Stakeholders Empowerment Services என்ற பங்கு முதலீட்டாளர்களுக்கான
சேவை அமைப்பு கேள்வி எழுப்பி உள்ளதாக தி எகானமிக் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பங்குமுதலீட்டாளர்களுக்கான சேவை அமைப்பு, சன் குழும நிறுவனத்தின் பங்குதாரர்கள் நலன் சார்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. தனிப்பட்ட நபர்களுக்காக பயன்படுத்தப்படும் விமானத்தை பல நூறு கோடி ரூபாய் செலவழித்து சன் குழுமம் வாங்கி இருப்பதாக எஸ்இஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான ஜெட் விமானம் சேதமடைந்ததாக கூறி, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து 260 கோடி ரூபாய் சன் குழுமம் பெற்றிருப்பதை SES என்ற அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதே நேரத்தில், மேலும் ஒரு புதிய விமானத்தை 365 கோடி ரூபாய் கொடுத்து சன் குழுமம் வாங்கி இருப்பதாகவும் பங்கு முதலீட்டாளர்கள் ஆலோசனை அமைப்பான எஸ்இஎஸ் தெரவித்துள்ளது. இந்த விமானத்தில், சன் டிவியின் அதிபரான
கலாநிதிமாறன் மட்டும் பயணிக்கிறாரா, அல்லது நிறுவனத்தின் ஊழியர்கள் யாரேனும் பயணிக்கிறார்களா என்றும் எஸ்இஎஸ் அமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது.
விமானத்தை வாங்க இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்திருக்கும் சன் குழுமம், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது வருவாயில் 2 சதவீதத்தை சமூக நலப்பணிகளுக்காக செலவிட வேண்டும் என்ற விதிமுறையை கடைப்பிடிக்காதது ஏன்
என்றும் எஸ்இஎஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த ஆண்டு சன் குழுமத்தின் லாபத்தில் 23.55 கோடி ரூபாயை சமூக நலப்பணிகளுக்காக செலவிட வேண்டிய நிலையில், 15.67 கோடி ரூபாயை மட்டுமே சன் குழுமம் செலவிட்டிருப்பதாகவும் எம்இஎஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
காப்பரேட் நிறுவனங்களுக்கான விதிமுறைப்படி சமூக நலப் பணிகளுக்கென செலவழிக்க வேண்டிய நிதியைச் செலவழிக்காத சன்குழுமம், தனி நபர்கள் பயன்படுத்துவதற்கான ஜெட் விமானத்தை பலநூறு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி
இருப்பதாகவும் எஸ்இஎஸ் அமைப்பு கூறியுள்ளது.
மேலும், விமானங்களுக்காக சன் குழுமம் செலவழித்துள்ள பணத்தின் மதிப்பு, அந்த நிறுவனத்தின் மற்ற திட்டங்களுக்கு செலவிடப்படுவதை விட 4 மடங்கு அதிகம் எனவும் எஸ்இஎஸ் அமைப்பு கூறியுள்ளது. சன்குழுமத்தின் ஒட்டு மொத்த ஊதியச் செலவில் 60 சதவீதத்தை கலாநிதிமாறன் ஊதியமாக பெற்று வருவதாகவும் எஸ்இஎஸ்
அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சன் குழுமத்தின் தலைவரான கலாநிதிமாறனும், நிர்வாக இயக்குனரான காவேரி கலாநிதிமாறனும் ஆண்டுக்கு தலா 78 கோடி ரூபாயை ஊதியமாக பெற்று வருவதாகவும் பங்கு முதலீட்டாளர்களுக்கான சேவை மையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2016 – 2017 நிதியாண்டில் மட்டும் 2 ஆயிரத்து 703 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும், அதில் 979 கோடி ரூபாய் லாபம் என்றும் சன் குழுமம் தனது வரவு செலவு அறிக்கையில் கூறியிருப்பதை எஸ்இஎஸ் சுட்டிக்காட்டி உள்ளது. இதனிடையே, கேபிள் டிவி நிறுவனத்தையும் நடத்தி வரும் சன் குழுமம், மாநில அரசு நடத்தி வரும் அரசு கேபிளுக்கு நிகரான வருவாயை ஈட்டி வருவதாகவும் எஸ்இஎஸ் தெரிவித்துள்ளது.
சன் குழுமத்தின் இத்தகைய நடவடிக்கைகளை வேறு வழியின்றி அதில் முதலீடு செய்திருக்கும் பங்குதாரர்கள் சகித்துக் கொண்டிருப்பதாகவும் Stakeholders Empowerment Services என்ற எஸ்இஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
—————————————————————————————————–



// சன் குழுமம் மீது தொழிற்துறை ஆராய்ச்சி அமைப்பு புகார் // … http://www.puthiyathalaimurai.com/news/finance/29785-ses-accussed-sun-network.html — இது பற்றிய இடுகை வந்த அன்றே ” கூகுளில் ” தமிழில் தேடிய போது — பாலிமர் மற்றும் புதிய தலைமுறை இரண்டிலும் செய்திகள் வந்து இருந்தன … 260 கோடி காப்பீடு தொகை பெற்ற நிலையில் 365 கோடி செலவு செய்து ” புதிய விமானம் ” ஒன்று வாங்கியதாகவும் — இது தேவையா .என்றும் அந்த தொழிற்துறை ஆராய்ச்சி நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது … மேலும் சன் குழுமத்திற்கு வாங்கப்பட்ட இந்த விமானம் கலாநிதி மாறன் குடும்பத்தினர் செல்ல பயன் படுகிறதா ? என்றும் அந்த நிறுவனம் கேட்டுள்ளது …
சன் குழுமத்தின் கடந்தாண்டு நிகர லாபம் 979 கோடி — அதில் விதி முறைப்படி சமூக நலத்திட்டங்களுக்கு 23 கோடியே 55 லட்சம் செலவழிக்க வேண்டியதில் — வெறும் 15 கோடியே 67 லட்சம் மட்டுமே செலவழித்து இருப்பதாகவும் எஸ் இ எஸ் குறிப்பிட்டுள்ளது …. !!!
கே.எம்.சார்,
உங்களிடம் சன் சார்பாக வாதாடி இப்போது ” ஆதாரம்” கேட்டிருப்பவர்,
முன்பு “செம்பரம்பாக்கம்” வெள்ளம் சம்பந்தமாக பெரும் புரளியை உருவாக்கிய
திமுக உறுப்பினர் திரு. Don Ashok தானே ?
விமரிசனம் வலைத்தளத்தில் கூட வேண்டுமென்றே திமுக பிரமுகரால் கிளப்பிவிடப்பட்ட அந்த புரளி பற்றி அப்போதே ஒரு இடுகை வந்திருந்ததாக
நினைவு.