……………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………..
பாரதப் போர் நிகழ்ந்து முடியும் நிலை…
பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே பல நீதிகளை தருமருக்கு எடுத்துரைத்தார்.
இவை பெரும்பாலும் நீதிக்கதைகள் …..
தருமர், நன்றி பற்றிக் கேட்க பீஷ்மர் சொல்லலானார் –
அவற்றில் ஒன்று கீழே –
………………………………….
வேடன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.
விஷம் தோய்ந்த அம்பு ஒன்றை விலங்கின் மீது அவன் செலுத்த அது குறிதவறி, ஒரு பெரிய ஆலமரத்தை அடிப்பாகத்தைத் தைத்தது….
அம்பில் இருந்த விஷத்தினால் மரம் பட்டுப் போனது.இலைகள் உதிர்ந்து காட்சியளித்தது.
மரம் பட்டுப்போனாலும், அம்மரத்தில் வாழ்ந்திருந்த கிளி ஒன்று அங்கேயே தங்கி இருந்தது.இது கண்டு இந்திரன் அங்கு வந்து கிளியைப் பார்த்து, “காட்டில் எவ்வளவோ மரங்கள் இருக்கின்றன.அங்கு செல்லாமல் பட்டுப்போன இம்மரத்திலேயே ஏன் இருக்கிறாய் ” என்றான்.
கிளி சொல்லியது……
“இம்மரத்தில் தான் நான் பிறந்து,பறந்து, ஒடியாடி மகிழ்ந்து வளர்ந்தேன்.இம்மரம் பூத்துக் குலுங்கி எனக்கு, காய்களும், கனிகளையும் தந்தது.அவற்றை உண்டு நான் வளர்ந்தேன்.
என் வளர்ச்சிக்கு பெரிய உதவி செய்த இம்மரத்தை விட்டு விட்டு என்னால் செல்ல முடியாது. இம்மரம் நல்ல நிலையில் இருந்த போது அதன் பலன்களை அனுபவித்த நான்..இம்மரத்திற்கு கஷ்டநிலை ஏற்பட்டபோது அதை விட்டு பிரிவது நியாயமில்லை.அது செய் நன்றி மறப்பதற்கு ஒப்பாகும்’ என்றது.
கிளியின் வார்த்தைகளைக் கேட்ட இந்திரன் மனம் மகிழ்ந்து, கிளிக்கு வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னான்.
கிளி உடனே..”பட்டுப்போன் இம்மரம் மீண்டும் தழைக்க வேண்டும்…. பசுமையோடு……காய், கனிகளுடன் இருக்க வேண்டும்” என்றது.
இந்திரனும் அது போல வரமளிக்க, ஆலமரம் மீண்டும் துளிர்த்து பசுமையுடன் காட்சி தந்தது….
பீஷ்மர் சொன்னார் –
எந்த ஒரு செயலை நாம் மறந்தாலும்…
ஒருவர் நமக்குச் செய்த உதவியை மட்டும் என்றும் மறக்கலாகாது….
எப்போதும், அவருக்கு நன்றியுடன் இருப்பதுடன்….. வாய்ப்பு வரும்போது, உதவி செய்தவருக்கு, நம்மாலான சேவைகளையும் செய்ய வேண்டும்….!!!
……………………………………………………………………………………………………………………………………………………



// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…