— அப்படியென்ன தொடமுடியாதவர்களா இவர்கள் ….???

…………………………………

…………………………………

மலைக்க வைக்கின்றன, நூலக முறைகேடுகள்!

அகல் விளக்கு பதிப்பகம் 33,661 நூல்களும் , பீனிக்ஸ் பதிப்பகம் 39,2241 நூல்களும் கடந்த மூன்றாண்டுகளில் நூலகங்களுக்கு தந்துள்ளனர்…!

இதை எண்ணிப் பார்க்கும் போது, எவ்வளவு துரித கதியில் இத்தனை நூல்களை தயார் செய்து புத்தகங்கள் தந்திருப்பார்கள்! இதற்கு பின்னணியில் எத்தனை பேர் பங்கெடுத்து இயங்கி இருப்பார்கள். தொடர்ந்து இவ்வளவு மோசமான நூல்களை நூலகங்களுக்கு கொள் முதல் செய்தும் யாரும் பொருட்படுத்தாமல் இந்த மோசடிகள் எப்படி தொடர்ந்தன…? என்ற கேள்விகள் எழுகின்றன!

கொள்முதலான நூல்கள் பெரும்பாலும் வாசகர் பார்வைக்கு வைக்கப்படாமலே அட்டை பெட்டியிலோ அல்லது நூலகத்தின் ஒரு மூலையில் அடுக்கபடாமலோ தான் இருந்து வருகின்றன. தகுதியான சில நூல்களை மாத்திரம் வாசகர்கள் பார்வைக்கு வைத்து மற்றவற்றை ரிசிவ் பண்ணி பணம் தந்துவிட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடித்துள்ளனர்.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் நூலகத் துறைக்குள் இருக்கும் யாரேனும் ஒரு ஊழியர் இப்படி மோசடி நூல்களை அடுக்கி வைத்ததாலோ, எப்படியோ… ஒரு வகையில் இது பார்வைக்கு வந்து வெளிப்பட்டுவிட்டது.

நூல்கள் அனைத்தும் திமுக ஆட்சி காலத்தில் பிப்ரவரியில் தான் ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. மார்ச்சில் கொள்முதலும் நடந்துள்ளன. அட்டை பெட்டியில் இருந்து வெளியில் எடுத்து வைத்தது ஜூன், ஜூலை மாதங்கள் அவ்வளவே! அப்போது போடப்பட்ட சீல்களை வைத்து தவெக அரசு மேல் சந்தேகம் வந்துள்ளது. இந்த புதிய அரசு எந்த ஒரு நூலையும் இது வரை நூலகங்களுக்கு வாங்க யார் ஒருவருக்கும் ஆர்டர் போடவில்லை என்பது நீதிமன்றத்தில் தரப்பட்டுள்ள தகவல்களில் நிருபணமாகியுள்ளது.

அகல் விளக்கு பதிப்பக மோகன் அவர்களை காலதாமதமாக கைது செய்துள்ளனர்.

5 நூலக அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சிறிய முன்னேற்றம் கூட நீதிமன்றம் அரசை நிர்பந்தத்தினால் தான் நடந்துள்ளது. இதில் தலைமை பொறுப்பில் இருந்த ஜெயந்தி ஐ.ஏ.எஸ் நிச்சயம் சம்பந்தப்பட்டு இருப்பார். அடுத்த நிலையில் இருந்த ராமேஸ்வர முருகன் 100 சதவிதம் சம்பந்தப்பட்டு இருப்பார். இவர்களைக் கூட இன்னும் நெருங்கவில்லை.

இவர்களையும் விட செல்வாக்கான ஒருவர் திட்டக் குழு உறுப்பினராக இருந்த – பொருளாதார அறிஞராக அறியப்பட்ட – ஜெயரஞ்சன்! இவரை விசாரணை வளையத்தில் கொண்டு வராமல் இந்த நூலக முறைகேடுகளின் முழு பரிமாணம் வெளிவர வாய்ப்பில்லை.

இத்தனை நகர்வுகளையும் தீர்மானிக்கும் பிக் பாஸாக இருந்தவர் – நிழல் முதலமைச்சராக வலம் வந்த – உதய சந்திரன். இவரையும் அச்சமின்றி அணுகி விசாரிக்க முடிந்தால், மிகத் துல்லியமாக நூலக முறைகேடுகள் மட்டுமல்ல, அதற்கும் மேல் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

பெரிய அளவு பல கோடிகள் மோசடி நடந்திருப்பதை முற்றிலும் அறியாத நிலையில் சென்ற ஆட்சியாளர்கள் இருந்துள்ளார்கள் என்றால், இந்த லட்சணத்தில் தான் படுமோசமாக ஆட்சி நிர்வாகம் செய்துள்ளனர்….!

பொதுவாக முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு பைலை வாசித்து பார்க்கத் தெரியாது. விருப்பமும் காட்டமாட்டார். அதிகாரிகள் விளக்கிச் சொல்ல வந்தாலும் காது கொடுத்து கேட்க மாட்டார். இந்த யதார்த்த நிலை அரசுத் துறை செயலாளர்கள் அனைவருக்கும் தெரியும். ஆகவே அவர்கள் அனைத்துக்கும் உயதசந்திரன் அவர்களையே சார்ந்து இயங்கினர்.

உதயசந்திரன் அளவுக்கு மிக உயரத்தில் இருந்த – தலைமை செயலாளர், முதலமைச்சர் என்ற இரட்டை கதாபாத்திரமாகவும் சென்ற ஆட்சியில் உச்சபட்ச செல்வாக்கில் இருந்த ஒருவரை – நெருங்கும் நிர்வாகத் துணிவு இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்குமா? தெரியவில்லை. ஏனென்றால், உதய சந்திரனுக்கு நல்ல டெல்லி மேலிடத் தொடர்புகள் வலுவாக உண்டு.

திமுக தலைவர் ஸ்டாலின் வேறு அடிக்கடி, ’’இந்த ஆட்சி விரைவில் கவிழும்’’ எனச் சொல்லி வருகிறார். இதன் மூலம் மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சியில் இருக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு தங்கள் ஆட்சியை தக்க வைக்கும் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டார். பாஜக தலைவர்களின் அறிக்கைகள் முரசொலியின் முதல் பக்கத்தை அலங்கரிக்கின்றன….! டெல்லியில் திமுக எம்.பிக்களுக்கும் பாஜக தலைவர்களுக்குமான நெருக்கம் அதிகரித்து வருகிறது. இந்த மாற்றங்கள் தவெகவை மேலும் தடுமாற வைக்கும்.

ஆகவே, மேற்படியானவர்களைத் தொடாமல் அடுத்தடுத்த கீழ் நிலையில் இருக்கும் சில அதிகாரிகளை பலி கொடுத்து அதிகார வர்க்கத்துக்கு அனுசரணை காட்டி கடந்து விடுவார்களா? இல்லை, தைரியமாக குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவார்களா? என்பதை ஒட்டு மொத்த தமிழகமும் உற்று நோக்குகிறது. ( நன்றி – அறம் வலைத்தளம் … )

………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to — அப்படியென்ன தொடமுடியாதவர்களா இவர்கள் ….???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஏகப்பட்ட போலி எழுத்தாளர்கள் பெயர்களில் புத்தகங்கள். கையெழுத்து போட்டவர் ஜெயரஞ்சன். இவர்தான் பொருளாதாரப் புளி, திட்டக்குழுத் தலைவர் என்ற பதவிகளில் கொள்ளையடித்தவர் அல்லது கொள்ளைக்குத் துணை போனவர்.

    நூலகர்களையும் (அதாவது க்வாலிஃபைட்) சஸ்பெண்ட் பண்ணவேண்டும். நூலகத் துறை தலைவர், துணைத் தலைவர் மற்றும் அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் அனைவரையும் சஸ்பெண்ட் செய்வது மட்டுமல்ல டிஸ்மிஸ் செய்யவேண்டும். உதயசந்திரன் மற்றும் ஐபிஎஸ் அருண் மீது ஏகப்பட்ட புகார்கள் இருந்துள்ளன.

    இது வெளியே வந்ததன் முதல் காரணம், எழுத்தாளர் பெயர் விஜய், திருஷா, விஜய் திருஷா என்ற பெயர்கள். அதை வைத்து அந்தப் புத்தகங்களை அடுக்கவும் இது வெளியே வந்தது. பெருமாள் முருகனும் ஒரு காரணம் (அவரும் கையெழுத்துப் போட்டார் என்று புதிய பூதம் கிளம்புகிறது)

    பணம் நிச்சயம் தலைமைக்குச் சென்றிருக்கும். யாரையெல்லாம் கைது செய்யும்போது தலைமை பயப்பட்டு அவர்களைப் போய்ப் பார்க்கிறார்களோ, அவர்களெல்லாம் தலைமைக்குக் கப்பம் கட்டியிருக்கிறார்கள் என்று பொருள்.

மறுமொழியொன்றை இடுங்கள்