…

…
நீர் வழிப்போக்குவரத்தில், 1980-வரை இந்தியாவைப்போல், சீனாவும் சுணங்கித்தான் இருந்தது. எந்தவிதமான, ஒழுங்கான திட்டமிடலும் இல்லாமல், ஏனோதானோவென்று இருந்தது.
80-களுக்கு அப்பால் விழித்துக் கொண்ட சீன அரசு நாடு முழுவதும், நீர்வழி போக்குவரத்தை – முக்கியமாக சரக்கு போக்குவரத்தை – பன்மடங்கு அதிகரிக்க பல திட்டங்களை உருவாக்கி மடமடவென்று செயல்படத்துவங்கியது….
அடுத்த பத்தாண்டுகளில், இத்துறையில் ஒரு மிகப்பெரிய வளர்ச்சி உருவானது.
சரக்கு போக்குவரத்தோடு, பயணிகள் போக்குவரத்தும் பலமடங்கு அதிகரித்தது. தரை வழி போக்குவரத்தை விட மிகவும் செலவு குறைவானது என்பதால், இது சீன பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியது. பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியது.


2012-ல் சீனாவில் 1,25,000 கிலோமீட்டர் தூரத்திற்கு நீர் வழிச்சாலைகள் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விட்டன.
2015-ஆம் ஆண்டில் 271 மில்லியன் பயணிகள் இதை பயன்படுத்திக் கொண்டனர். ஆண்டுக்கு சுமார் 1.331 ட்ரில்லியன் tkm.கார்கோ கையாளப்பட்டது.
சாம்பிளுக்காக – சீன நீர்வழிச்சாலைகள்
சிலவற்றின் புகைப்படங்கள் கீழே –







( அடுத்து பகுதி-3-ல் தொடர்வோம்…)



அய்யா … ! பதிவும் … படங்களும் அருமை … ! இறுதியில் சீனாவில் உள்ள ” தொங்கும் சவப்பெட்டிகளை ” பற்றியும் குறிப்பிடுங்கள் — இதுவும் ஒரு அதிசய அற்புதம் தானே …?
சீனர்கள் கடும் உழைப்பாளிகள் என்பதை படங்கள காட்டுகின்றன!
எனக்கு நல்ல நினைவில் உள்ளது. 1958-59. அப்போதெல்லாம் பக்கிங்ஹாம் கெனாலில படகுப்போக்குவரத்து நடக்கும். மைலையில பாலத்திற்கு மேலே பள்ளிக்குச செல்லும் போது கீழே படகுகளில் சரக்குகளை வைத்துத் தள்ளிக கொண்டு ஓட்டுவார்கள். ஒரு நீண்ட சவுக்கு கழியை ஆற்றுக்கு உள்ளே விட்டு படகை நெம்பி தள்ளி பயணம் தொடரும். மதராஸ் (அன்று பெயர் ) சுற்றியுள்ள இடங்களில் இருந்து சரக்குகள் டவுனுக்கு போகும். குமுதம் ஆசிரியர் ரா.கி.ர 2 நாடகள அதில பயணம் செய்தது பற்றி கட்டுரை எழுதியுள்ளார். தி மு க அரசு வந்தவுடன் அடித்த புயலில் அது மூடப்பட்டது. அரசு அதைப்பற்றி கவலைப்படவில்லை.