மெடிகல் சீட் – முதல்வர் கோட்டா… கொடுக்கப்பட்ட விதம்…..!!!


ஒரு குறு வீடியோ… பின்னணியில் ஒலிப்பது
திரு.சுகி சிவம் அவர்களின் குரல்…

அவர் சொல்வது திரு.காமராஜ் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக
இருந்தபோது, முதலமைச்சருக்கான மெடிகல் சீட் கோட்டாவை
எப்படி பயன்படுத்தினார் என்பது குறித்து…

என்ன சொல்கிறார் …?? … ஒன்றரை நிமிடம் தானே – நீங்களே கேளுங்களேன்…!!!

———————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மெடிகல் சீட் – முதல்வர் கோட்டா… கொடுக்கப்பட்ட விதம்…..!!!

  1. Nalini's avatar Nalini சொல்கிறார்:

    No wonder, Kamaraajar is “perunthalaivar:

  2. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    எந்த குடும்பத்திலெல்லாம் கல்லாமை என்னும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத் தான் நாம் முதலில் விளக்கேற்ற வேண்டும் என்று ” கூறிய மாபெரும் தலைவர் திரு . காமராஜர் ….. ! . இப்படிப்பட்ட தலைவர்களும் நம் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்துள்ளனர் என்பதில் பெருமிதம் கொள்வோம்…. அதே வேளையில் எப்படியெல்லாம் ஊழல் செய்து மக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கலாம் என்பவர்களையும் — ” கொடுங்கோண்மை ” என்பதின் மூலம் சர்வாதிகார போக்கில் மக்களை வாட்டி – வதைக்கின்றவர்களையும் பார்த்து ” வெட்கி தலை குனிவோம் “….!!!

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்… காமராஜரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் மிகவும் ரசமானவை. நிறையபேருக்குத் தெரிந்திருக்கும். அவர் படிக்காதவர், அதனால் ஒரு சூது வாதும் இல்லாமல் தீர்மானம் எடுக்க அவரால் முடிந்தது.

    ‘உங்க வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வருகிறார்களே.. அவர்களெல்லாம் என்ன கேட்பார்கள்?’

    “சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை எளிய மக்கள் கேட்பதெல்லாம் சுலபமான உதவியாக இருக்கும். உடனே செய்துடுவேன். படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க கேட்கறதெல்லாம் சிக்கல் நிறைஞ்சதா இருக்கும். அவங்களே வக்கீலோட வந்து வழிமுறைகளையும் சொல்லுவாங்க. நான் ஆகட்டும் பார்க்கலாம்னு சொல்லிடுவேன். ஓரிருவருக்குச் செய்து மற்றவர்களுக்குச் செய்யவில்லைனாதானே கோபம் வரும்? யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். அவனிடம், ‘உன்னைவிட குறைந்த மார்க் எடுத்தவனுக்கு அட்மிஷன் போட்டிருக்காங்களா’ன்னு கேட்பேன். பெரும்பாலும் இருக்காது. அப்படி ஏதேனும் இருந்தால், ‘ஆமாம் ‘நீ சொன்னது உண்மைதான்’ என்று சொல்லிடுவேன். அதிலேயே அவன் திருப்தி அடைஞ்சுடுவான்”

    ‘பத்திரிகைல அரசியல் செய்திகள் எல்லாம் படிச்சுடுவீங்களா’

    ‘பொதுமக்கள் செய்திகள் எல்லாம் படிப்பேன். தண்ணி இல்லைன்னு எழுதியிருந்தா அதுவும் அரசியல் சம்பந்தப்பட்டதுதானே.”

    அவரைமாதிரி ஒரு நல்ல அரசியல்வாதி அவருக்குப்பின்பு நமக்கு இல்லை. அதற்கு பெரிய காரணம், மக்கள் தரம் தாழ்ந்ததுதான். காமராஜர் என்ற பெரும் தலைவரை, நாடார் என்ற குறுகிய பார்வை பார்த்த அரசியல்வாதிகளும், அவரைத் தோற்கடித்த விருதுனகர் மக்களும்தான் வெட்கப்படவேண்டும்.

    காமராஜரின் தாயாரிடம் (சிவகாமி அம்மையார்) சாவி கேட்கிறார், நாடே உங்க மகனைப் பத்திப் பெருமைப்படுதே.. உங்களுக்கு சந்தோஷமா அல்லது அவர்ட்ட குறை இருக்கா?

    இங்க வந்தா ஒரு நிமிஷம் நிக்கமாட்டான்யா. உள்ள வந்து, ‘என்ன சௌக்கியமா’ந்னு கேட்டுக்கிட்டே அப்படியே வெளிவாசலைப் பாத்துத் திரும்பி தெருப் பக்கமா இறங்கிட்டே ‘நான் வரேம்மா’ன்னுடுவான். என் செலவுக்கு நூறு ரூபாய், தனுஷ்கோடி நாடார் மூலமா அனுப்புவான். இங்க நாலுபேர் உட்கார்ந்து சாப்பிடணுமே இந்த விலைவாசில நூறு ரூபாய் பத்துமா? நீங்களே சொல்லுங்க. அவனோட போக நினைச்சாலும், நல்லா இருக்க விடுவானே. ஆவடி காங்கிரஸ் கூட்டத்தப்போ போனேன். ரெண்டு நாள் ஊரைச் சுத்திக்காட்ட ஆட்கள் ஏற்பாடு பண்ணினான். அப்புறம் ‘புறப்படு விருதுனகருக்கு’ ந்னு ரயில் ஏற்றிவிட்டுட்டான். அவனைத்தான் நாட்டுக்கு தத்தம் பண்ணியாச்சே.

    காமை சார்-நீங்கள் இதனை இங்கு வெளியிட்ட காரணத்தையும் அறிவேன். அற்பப் பதர் அரசியல்வாதிகள் தங்கள் மகள், மகன் ஆகியோருக்காக சுய நலமாக மருத்துவ சீட்டைத் திருடி, இன்னொரு ஏழையின் கனவை நிறைவேறவிடாமல் செய்துவிடுகிறார்கள். இவர்கள் பிச்சைக்காரர்களைவிட கேவலமானவர்கள் என்பதில் சந்தேகமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.