சீனாவைக் கண்டு இந்தியா அஞ்ச வேண்டுமா… ஏன் …? (பகுதி-1)


134 கோடி மக்கள் தொகையுடன் உலகின் 2-வது பெரிய நாடாக திகழ்கிறது இந்தியா. இது உலக மக்கள் தொகையில் 17.74 சதவீதம்.

141 கோடி மக்கள் தொகையுடன் உலகின் முதலாவது பெரிய நாடாக திகழ்கிறது சீனா. இது உலக மக்கள் தொகையில் 18.67 சதவீதம்.

மக்கள் தொகை காரணமாக சீனா எந்த விதத்திலும் நமக்கு அச்சுறுத்தலாக இல்லை… இருக்கவும் முடியாது.

இந்தியாவின் மக்கள் தொகையை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்…

20 வயதிற்கு உட்பட்டவர்கள் – 39 %
20-லிருந்து 60 வயதிற்குட்பட்டவர்கள் – 50 %
60-வயதிற்கு மேற்பட்டவர்கள் – 11 %

சீன மக்களின் வயது வகை பிரிவு –

14 வயதுக்கு உட்பட்டவர்கள் – 16.5% (2015 est.)
15 முதல் 64 வயது வரை – 73.0% (2015 est.)
65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் – 10.5% (2015 est.)

எதிர்காலத்தில் உழைக்கும் சக்தியுடைய இளைஞர்களின் தொகை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே போகும். அதே சமயத்தில், சீனாவில் குறைந்துகொண்டே போகும்.

இந்தியாவை அதன் அண்டை நாடுகளுடன் இணைக்கும் எல்லைகளின் அளவு –

பங்களா தேஷ் :4,096.7 கிலோ மீட்டர்.
சீனா :3,488 கி.மீ.
பாகிஸ்தான் :3,323 கி.மீ.
நேபாளம் :1,751 கி.மீ.
மயம்மர் (பர்மா):1,643 கி.மீ.
பூடான் : 699 கி.மீ.
ஆப்கானிஸ்தான் : 106 கி.மீ.

மிகப்பெரிய எல்லையை கொண்ட பங்களா தேஷுடன் நமக்கு நல்ல உறவு இருக்கிறது…. எந்தவித எல்லை பிரச்சினையும் இல்லை.

இதில் நமக்கு எல்லையில் பிரச்சினையாக இருப்பது பாகிஸ்தானும், சீனாவும் மட்டும் தான்.

இப்போதைக்கு சீனாவை மட்டும் கொஞ்சம் விவரமாக பார்க்கலாமே…

முதலில் சீனாவின் பிரமிக்க வைக்கும் சில கட்டுமானங்களும், சாதனைகளும், பற்றிய விவரங்கள் கீழே –

—————-
உலகின் மிகப்பெரிய மூன்று மேம்பாலங்கள்
( நீளத்திலும், உயரத்திலும் ) பற்றிய தகவல்கள்
கீழே –

1) Danyang–Kunshan Grand Bridge –
உலகிலேயே மிக நீளமான பிரிட்ஜ் இது.
இதன் நீளம் 164.8 கிலோ மீட்டர் (சென்னையிலிருந்து-
விழுப்புரத்திற்கு செல்லும் தூரத்தை விடவும் சிறிது அதிகம் !)

2006-ல் கட்டுமானப்பணி துவக்கப்பட்டு நான்கே
ஆண்டுகளில் -2010-ல் பாலம் கட்டி முடிக்கப்பட்டு
விட்டது. இதற்கான செலவு – 8.5 பில்லியன்
அமெரிக்க டாலர்கள். இந்த பாலம் கட்டும் வேலையில்
சுமார் 10,000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன் பிரமிப்பூட்டும் சில புகைப்படங்கள் கீழே –

danyan kunshan bridge-1

danyan kunshan bridge-2

danyan kunshan bridge-3

danyan kunshan-4

danyan

2)Tianjin Grand Bridge –

உலகின் இரண்டாவது மிக நீளமான பாலம் இது.
இதன் நீளம் 113.7 கிலோ மீட்டர்.
2006 -ல் துவக்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி,
நான்கே ஆண்டுகளில், அதாவது 2010-ல்
முடிவடைந்து விட்டது.
இதன் கண்கவர் புகைப்படங்கள் சில கீழே –

Tianjin-Grand-Bridge.(second)-1

Tianjin-Grand-Bridge.(second)-2

3)Weinan Weihe Grand Bridge –

உலகின் மூன்றாவது மிக நீளமான பாலம் இது.
இதன் நீளம் 79.7 கிலோ மீட்டர்.
2008-ல் இது கட்டி முடிக்கப்பட்டபோது, இது தான்
உலகின் மிக நீண்ட பாலமாக இருந்தது.
இதற்குப் பிறகு மேலே உள்ள 2 பாலங்களும்
கட்டப்பட்டதால், இது 3வது பெரிய பாலமாகி விட்டது.
இந்த ஒரே மேம்பாலம் பல ஆறுகளையும்,
வெய் நதியை இரண்டு முறையும் கடந்து செல்கிறது.
இதன் அற்புதமான புகைப்படங்கள் சில கீழே –

 

Weinan Weihe Grand Bridge -2

Weinan Weihe Grand Bridge -3

γεφυρες (6)

γεφυρες (24)

( – தொடர்வோம் – பகுதி-2-ல் … !)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சீனாவைக் கண்டு இந்தியா அஞ்ச வேண்டுமா… ஏன் …? (பகுதி-1)

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    ஐயா,

    நீங்கள் சீன பாலங்கள் பற்றி எழுதி என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை ஒருவாரு ஊகிக்க முடிகிறது.

    அதாவது இவ்வளவு அருமையான பாலங்களையும் இன்னபிற நல்ல கட்டிடங்கள், இடங்களையும் கொண்டிருக்கும் சீனா, யுத்தம் என்று வந்தால் எல்லாம் நாசமாகும் என்பதை கருத்தில் கொண்டு யுத்தத்தை தவிர்க்கும் என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

    அப்படி அது யுத்தத்தை தவிர்த்தால் நம் நாட்டிற்கும் நல்லது தான்.

    நல்லதே நடக்கட்டும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அறிவழகு,

      இந்த தொடர், 4 பகுதிகளாவது தொடரும் என்று நினைக்கிறேன்…
      நீங்கள் சொல்லும் விஷயம் குறித்தும் பேசும் வாய்ப்பு கிடைக்கும்… விவாதிக்கலாம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.