…
…
திரு.கமல்ஹாசன் அவர்களின் தனிப்பட்ட இல்லற வாழ்வைப்பற்றி ஆராய்வது நமது நோக்கம் அல்ல… ஆனால் ” நான் தமிழ்நாட்டின் முதல்வராக விரும்புகிறேன் ” – என்று துடித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் குணாதிசயங்கள் பற்றி, தமிழக வாக்காளர்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்….
இது அவர்களது உரிமையும் கூட…
நமக்கு ஏற்கெனவே தெரிந்த உண்மைகளை எவ்வளவு தான் பொதுவெளியில் எடுத்து வைத்தாலும். மீண்டும் மீண்டும் சிலர் அவருக்காக வக்காலத்து வாங்குவது, நம்மை மேலும் மேலும் இது குறித்த செய்திகளை தேடியெடுத்து இங்கே
சொல்ல வைக்கிறது…..
எனவே, நம்மைத்தூண்டி விட்டு, உண்மைகளை வெளிவரச்செய்யும் பெருமை அவர்களையே சாரும். இவற்றை வெறும் gossip என்று ஒதுக்கி விட்டு போய் விட முடியாது. 12 வருடங்கள் கூட இருந்து வாழ்ந்த ஒருவர் சொல்லுவதை அலட்சியப்படுத்தி விடவும் முடியாது.
இந்த முன்னுரையுடன், திரு.கமல்ஹாசன் அவர்களிடமிருந்து விவாகரத்து கேட்டுப் பெற்ற, அவரது முதல் மனைவி திருமதி வாணி கணபதி அவர்கள் ஜூலை 2015-ல் பங்களூருவிலிருந்து வெளிவரும் டெக்கன் க்ரானிகல்
ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியை, ஒரு அப்படியே கீழே தந்திருக்கிறேன். தமிழில் மொழிமாற்றம் செய்தால், சொற்களில் எங்காவது பொருள்-பிழை நேர்ந்து விடப்போகிறதே என்று நினைத்து தான், அந்த ஆங்கில பேட்டியை அப்படியே கீழே தந்திருக்கிறேன்….
—————————————————-

01072015-Bangalore- FOR DHARSHANA’S STORY
Vani Ganapathy during the interview with DC. Photo: R. Samuel
I walked out, kept my silence,
why this, why now?: Vani Ganapathy
——————
DECCAN CHRONICLE | DARSHANA RAMDEV
Published Jul 2, 2015, 9:36 am IST
Updated Feb 23, 2016, 2:43 pm IST
————–
Vani Ganapathy breaks her silence 28 years after her divorce from Kamal Hassan Vani Ganapathy Bengaluru: Ending her 28-year-silence after bitter divorce from superstar Kamal Hassan, Bharatnatyam exponent Vani Ganapathy says her ex-husband could take a leaf out of the books of younger actors “Divorces today are handled so tactfully, with a lot of understanding, there is no slander of the other person.”
Vani’s decision to tell her side of the story came after Kamal Hassan claimed that alimony left him bankrupt when his
daughter Shruti was born.
“For 28 years we have been divorced and I have always refrained from mudslinging, because it’s a very private
affair.
In the heat of the moment, when everything is still fresh, things can be said, but we have both moved on now. Why does
he behave like a man obsessed?” she said.
Since their divorce Vani has only seen him once, ten years ago, completely by chance.
“He was in town promoting a film. I was driving out of the Taj West End and saw him, walking along a pavement. I wasn’t sure, even, that it really was him, so I asked the friend sitting beside me to take a look.
Turned out it was him, but it had been a long time, so I stopped the car and said “hello.”
At her home in Bengaluru, after a clearly hectic day, Vani settles down into an ornate sofa and gestures
to the antiques and the works of art crowding the living room, all part of a collection that has grown over the last
three decades.
“Every single one has been bought with my money, I have worked for all of it,” she said. “That’s why I decided it
was time to go public with my statement, too.
If Kamal claims that I drove him to bankruptcy, people might even think that all this came from him. My silence should
not be mistaken for acceptance,” she added.
Alimony and divorce go hand in hand, she said indignantly. “But my making him bankrupt is completely false.
In what court in the world has alimony been allowed to drive someone to bankruptcy? I was completely shocked
when I read it.
His ego must have been hurt when I walked out of the marriage, but so much has happened since. He could have said financial crisis and let the subject pass. Our relationship lasted 12 years and
I know him well –
he doesn’t answer a question if he doesn’t want to. Kamal knows better than anyone how to fake a smile
and charm his way out of a situation.”
Despite the gravity of his statement, going public with her own was still a difficult decision to make.
“A lot of it had to do with the fact that I am very close to Kamal’s family,” Vani remarked.
“The first thing I did was call Suhasini, his niece. She’s very fond of him, but they know how he can be. This time,
though, she told me to do what I had to do,” Vani said.
The question must be asked of course – was alimony part of the divorce proceedings at all? “I’d rather not specify,”
she said. “It’s a private matter, nobody outside the two of us really needs to know the ugly details!
There was alimony, yes, but it was too petty to discuss, really.
He even refused to give me used appliances from the flat we shared. What could I expect from a man like that?”
Vani is angry, there’s no doubt about that. Still, as she pulls out an old, tattered photograph of the
two of them together, cut out of an old Tamil magazine, she finds a word of praise for her ex-husband.
“He can charm his way out of every situation,” she remarked.
“Kamal can talk about anything, he’s the sort of person who can read the first and last pages of a book and discuss it at length,” she said, adding,
“That’s why I know it’s impossible to prod something out of him. If he doesn’t want to talk about it, he knows what to do,” Vani said.
————————-
http://www.deccanchronicle.com/150702/lifestyle-
relationship/article/i-walked-out-kept-my-silence-why-why-
now-vani-ganapathy
———————————————————–
Kamal was trying to get sympathy of his daughter,
says ex-wife Vani Ganapathy –
By Sujata Reddy, ET Bureau|
Updated: Jul 01, 2015, 10.00 AM IST
——————–
In a recent joint interview with daughter Shruti, superstar Kamal Haasan said that his divorce from his ex-wife,
Bengaluru-based classical dancer Vani Ganapathy, left him with zero bank balance, forcing him to move into a rented
apartment and starting life afresh. Vani, however, has another version of events.
….
On Haasan’s claims of moving to a rented house after parting ways with Vani He says that he had to move to a rented place, but when did Kamal ever own a house at that point of time?
All through our marriage (1978-88), we lived in two rented apartments. Except when we lived in the family house, of
course, with Kamal’s brother, Mr Charuhasan, his wife and three daughters. Those years were in the house which
belonged to the family and when Kamal’s father was very much alive.
So to make it look like he was living in the most palatial house and then had to move to a rented house after our
divorce is complete hog wash.
I think Kamal was trying to get the sympathy of I don’t know who — maybe his daughter — to make himself look like the
father who sacrificed so much and that’s just very, very, very petty and childish.
On his zero bank balance and the blame game
Kamal can’t just blame somebody else for his situation. Anyway, he was never the type who took the blame on himself
— be it about his films or his personal life. He’s just looking for somebody to blame all the time. Honestly, I
don’t know if he was bankrupt at that time. I don’t think he was bankrupt. But if he was, there could be other reasons. I could guess the reasons for his bankruptcy, but that’s not something I want to discuss..
…
I may not be a celebrity like Mr Kamal Haasan, but I have a strong standing on my own. When the interview with him
saying these things about me came out, I got so many messages on my Facebook account with people wondering why
I was still being dragged into ..
. Twenty-eight years is a long time. I’ve moved on, it looks like he hasn’t. Alimony details are personal. It’s not that I want to show what all Kamal gave me and what all he didn’t at the time of our divorce, but I think I wouldn’t like to stoop down to that level.
In 28 years I have never spoken about Kamal, because I thought it was too personal. I wanted to maintain a
dignified silence. But this time I had to break it because there were direct allegations against me. I felt this was
unfair.
On whether she confronted Kamal about his statements I haven’t spoken to Kamal about his interview. We haven’t
had a conversation in years. I also don’t doubt his talent and creativity. But that does not give anybody a right to
slander another person or to pull wool over people’s eyes.
If it’s sympathy that is going to win Kamal what he wants from his daughter, he could have done the same without
taking names. Even his family is upset at his claims.
———————–
http://economictimes.indiatimes.com/magazines/panache/kamal-
was-trying-to-get-sympathy-of-his-daughter-says-ex-wife-
vani-ganapathy/articleshow/47890659.cms
—————————————————————————————————————-
பின்னூட்டம் –
original version-ஐ மேலே தந்து விட்டேன்… இனி சுருக்கமாக தமிழில் முக்கிய தகவல்கள் மட்டும் –
…
விவாகரத்து ஆகி, கடந்த 28 ஆண்டுளாக நான் அவரைப்பற்றி எதுவுமே பேசியதில்லை. இப்போது, தன் சுயநலம் காரணமாக என்னைப்பற்றிய ஒரு கேவலமான அபிப்பிராயத்தை அவர் ஏற்படுத்தி இருப்பதால், நான் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது….
செல்வி ஸ்ருதி ஹாசன், ஹிந்தி திரையுலகில் பிரகாசிக்க ஆரம்பித்தபோது, மும்பைக்கு சென்று, அவருடன் இணைந்து வட இந்திய மீடியாவுக்கு பேட்டி கொடுத்தபோது, தன் மகளின் அனுதாபத்தையும் சேர்த்து பெறும் நோக்கம் காரணமாகவோ என்னவோ –
– ( இருக்க வீடு இல்லாமல், புது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தவர், 30 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த விஷயம் யாருக்கு தெரியப்போகிறது என்கிற தெம்பில், ) முதல் மனைவிக்கு கொடுத்த பெரும் ஜீவனாம்ச தொகைக்காக
தன் சொந்த வீட்டை விற்க வேண்டியதாயிற்று.
– பேங்க் பேலன்ஸ் அத்தனையையும் இழந்து போண்டியானேன்… என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.
-ஜீவனாம்சத்தில் கொடுக்க நேர்ந்தது மிகவும் சிறிய தொகை. அதனால் அவர் போண்டியானார் என்று சொல்வது,
பிறருடைய அனுதாபத்தைப்பெறும் முயற்சி….
– விவாகரத்திற்கு பிறகு, நாங்கள் வாழ்ந்த வீட்டிலிருந்து, நான் பயன்படுத்திக் கொண்டிருந்த சொந்த பொருட்களை கூட எடுத்து வர அனுமதிக்க மறுத்தார்…
– அவர் மிகவும் கெட்டிக்காரர்; சாமர்த்தியசாலி; ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் மட்டும் படித்து விட்டு, முழு புத்தகத்தையும் கரைத்து குடித்தவர் போல் விவாதம் செய்யும் திறமை உள்ளவர்….
சொந்த வாழ்வானாலும் சரி, திரை வாழ்வானாலும் சரி, தனது தோல்விக்கான பழியை யார் மீதாவது போட ஆளைத்தேடிக்கொண்டிருப்பது அவர் வழக்கம்.
எந்த ஒரு கேள்விக்கும் அவர் விரும்பினால் மட்டும் தான் பதில் கொடுப்பார்… இல்லையென்றால், ஒரு சிரிப்புடன் விஷயத்தை சுலபமாக திசை திருப்ப அவருக்கு தெரியும்.
இந்த இடுகையில் – நான் இங்கு விமரிசனங்களை முன்வைக்கவில்லை…. தகவலை மட்டும் தான் தந்துள்ளேன்..
பின்னூட்டத்தில் விமரிசனங்களை வைத்துக் கொள்ளலாம்.



Globally known fact about him. Nothing new. Go through Late Mr.Panchu Arunachalam write up in Vikatan last year. He had exposed him in better way.
தெரிய தந்தமைக்கு மிகவும் நன்றி.
கா.மை சார்.. உங்களின் கருத்துக்கு மாறுபட்டதாயினும் என் கருத்தை எழுதியுள்ளேன்.
இதை ஒரு பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை.
எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் மகள் ஸ்ரீவித்யா (அப்போது நடிக்க ஆரம்பித்திருந்தார்)வுடன் கமலுக்கு திருமண வாய்ப்பு ஏற்பட்டது. கடைசி நேரத்தில் அதிலிருந்து கமல் பின்வாங்கினார் (காரணத்தை என்னால் ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது). கடைசிவரை ஸ்ரீவித்யாவுடனான நட்பை கமல் விடவில்லை. அவர் இறக்கும் வரையிலும் நல்ல நட்போடு இருவரும் இருந்தனர். கமல் குடும்பத்தில் யாருக்கும் marriage என்ற institutionல் நம்பிக்கை இல்லை. கமலை, அவரது அண்ணன் சாருஹாசன், திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஆனால் கமல் வாணியுடன் திருமணம் நடக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். கமல் அப்பா, சாருஹாசனிடம், இந்தத் திருமணம் வேண்டாம் (திருமணமே வேண்டாம்) என்று அவனை கன்வின்ஸ் செய் என்று சொன்னபோது, அது என்னால் முடியாது, கமல் பிடிவாதமாக இருக்கிறான், நான் சொன்னதற்காக திருமணம் நடக்கவில்லை என்றால் ஒருவேளை எந்த முடிவுக்கும் சென்றுவிடுவான், அவனை இழக்கத் தயாரில்லை என்று சொல்லி, சாருஹாசன் அமைதியாகிவிட்டார். திருமண வாழ்க்கையின்போது, சரிகாவுடன் கமலுக்கு உறவு ஏற்பட்டுவிட்டது. அதன் காரணமாக பிரிவு ஏற்பட்டது. கமலுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. பிறகு சரிகாவுடனும் பிரிவு ஏற்பட்டது. பிறகு தனக்கு ஒரு கம்பானியன் வேண்டும் என்று நினைத்து (இதில் ஆச்சரியம் இல்லை. மிகவும் தேவையானதுதான்) சிம்ரனுடனான தொடர்புக்கு முயற்சித்தார். சிம்ரன், திருமணம் என்றால் ஓகே ஆனால் கம்பானியன் என்றால் நோ என்று தீர்மானமாக இருந்தார். கமல் எவ்வளவு ஆசைப்பட்டும் இது கைகூடவில்லை (இதற்காக கமல் மிகவும் கீழிறங்கி வேண்டி விரும்பிக் கேட்டும் சிம்ரன் ஒத்துக்கொள்ளவில்லை என்று படித்திருக்கிறேன். அது கமலின் தகுதிக்கு மிகவும் குறைவான காலம்). பிறகு கௌதமி கமலுடன் கம்பேனியனாக இருந்தார். அவரும் ஒரு வருடம் முன்பு பிரிந்துவிட்டார்.
நம் முதலமைச்சர் எப்படி இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பது சரிதான். நாம் நினைக்கும் முதலமைச்சர் இந்தியாவில் இல்லை என்றே நினைக்கிறேன்.
கருணானிதி அவர்களும், ராஜாத்தி அவர்களுடன் குழந்தை பெற்றுக்கொண்டு, ராஜாத்தி அவர்கள் என் மனைவி அல்ல, ஆனால் கனிமொழியின் தாய் ராஜாத்தி அம்மையார் என்று சட்டசபையில் பதிவு செய்திருக்கிறார். அதனால் மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் இருந்ததில்லை. ஆரம்பத்தில் ஜெ. வுக்கான வாக்குகள் அவர் எம்ஜியாரின் வாரிசு என்பதனால்தான். 2011ல்தான் அவர் தனக்கென்று ஒரு பிம்பத்தை உருவாக்கியிருந்தார்.
அண்ணாவைப் பற்றி, பாரதி தாசன் அவர்கள் எந்த மாதிரி, அவரது யோக்கியதாம்சங்களை எழுதியுள்ளார் என்று கூகிளிட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
மக்களிடமிருந்துதான் தலைவர்கள் உருவாகிறார்கள். அவர்கள் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கமலஹாசனின் ரசிகன் அல்ல நான். ஆனால் அவரைப் பற்றி எழுதியிருப்பவைகளை வைத்து அவர், (ஒரு வேளை) முதலமைச்சராக ஆவதற்குத் தகுதியில்லை என்று நினைப்பது தவறுதான். He is not a role model to youngsters, ஆனால் நிறைய இளைஞர்களுக்கு/இளைஞிகளுக்கு marriage institutionல் நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
கமலஹாசன் வெற்றி பெற இயலவே இயலாது. அவர், அரசியலில் அடுத்த சிவாஜி. ஆனால் புத்திசாலி சிவாஜி. அதாவது, சொந்தப் பணத்தைச் செலவழிக்கமாட்டார். ஒருவேளை ரஜினி வெற்றிபெறலாம். அல்லது அஜீத் வந்தால் வெற்றிபெற இயலும் (ஏனென்றால், திமுகவைப் பிடிக்காத மெஜாரிட்டி வாக்காளர்கள் தமிழகத்தில் உண்டு, அதாவது மற்றகட்சிகளையும் பிடிக்காத). அதிமுகவின், நடுனிலை வாக்காளர்களின் வாக்கு அத்தகைய மனிதருக்குத்தான் செல்லும்.
புதியவன்,
இது உங்கள் ஸ்டைல் அல்லது திறமை ஆகி விட்டது. ஒருவரைப்பற்றி இங்கே குறை கூறினால், உடனே நீங்கள் இன்னும் நிறைய பேரைச் சொல்லி அவர்கள்
கூடத்தான் சரி இல்லை என்று வாதத்தை துவக்கி விடுகிறீர்கள்.
Please try be straight…!!!
நான் திருமதி ஸ்ரீவித்யா, திருமதி சிம்ரன் பற்றியெல்லாம் ஒரே ஒரு வார்த்தை(….!!!) இடுகையில் எழுதியபோது, இந்த மாதிரி எல்லாம்
gossip-களை வைத்து எழுதுவதை நீங்கள் ரசிக்கவில்லை என்று கூறி விட்டு,
இப்போது விலாவாரியாக அவர்கள் அத்தனை பேரின் உறவைப்பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். ( ஒரு விதத்தில் நீங்கள் விவரங்கள் தந்ததற்கு நன்றி ) ….
உங்கள் method of writing ஐ ஒருவேளை நீங்கள் உணராதிருக்கலாம்.. அதனால் தான் அவற்றை இங்கே விவரிக்கிறேன்.
இறுதியாக நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா…? இத்தனை குறைகள் இருந்தாலும், திரு.கமல்ஹாசன் தமிழகத்தின்
முதலமைச்சராக வர விரும்புவதில் எந்த தவறும் இல்லை என்கிறீர்களா…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
யாராவது வந்து நல்ல ஆட்சி தந்தால் போதும். திமுக மீண்டும் வந்து லாலி பாடாமல் இருந்தால் போதும்.
சார்… கமல் மோசம் என்று நான் எழுதினால், அப்போ மற்றவர்கள் ஓகேயா என்று மனசாட்சி கேட்கிறது. எழுதியிருப்பவர்களில் யாரும் நீங்கள் சொன்ன விஷயத்தில் நல்லவர்கள் இல்லை. இது ஒரு அளவுகோலா என்பதுதான் என் எண்ணம்.
நான் கமல், ஸ்ரீவித்யா, சிம்ரன் போன்றோரை மனைவியாக்கிக்கொண்டார் என்று எழுதவில்லை. ‘நட்பு’ என்ற அளவில்தான் நான் நிற்கிறேன்.
கமல் விருப்பப்படுவதை ஆட்சேபிக்க நான் யார். வர வாய்ப்பு இல்லை. ஆனால் எனக்கு நடப்பது சரியாகப் படவில்லை. கமலின் நோக்கம் என்ன என்பது சந்தேகமாக இருக்கிறது. இவர் திடீரென்று களத்தில் குதிப்பது ஏன்? ஊழல் பற்றிப் பேசுபவர், சமீபத்தில்தானே திமுக மேடைகளில் இருந்தார்.
புதியவன்,
// நான் கமல், ஸ்ரீவித்யா, சிம்ரன் போன்றோரை மனைவியாக்கிக்கொண்டார்
என்று எழுதவில்லை. ‘நட்பு’ என்ற அளவில்தான் நான் நிற்கிறேன்.//
சரி.. நான் என்ன எழுதி இருந்தேன்…?
// திரு.பார்த்தசாரதி அவர்களுக்கும் கீழ்க்கண்ட பெண்மணிகளின்
வாழ்க்கைக்கும் உள்ள சம்பந்தம் பெரும்பாலான தமிழக பெண்
வாக்காளர்களுக்கு தெரியும் என்றே நம்புகிறேன்….//
இதை விட நாகரிகமாக இந்த விஷயத்தை யாரால் எழுத முடியும்…?
நான் எழுதிய இதையே gossip என்று குறை கூறுகிறீர்கள்..சரி…
நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள்….? எப்படி எழுதி இருக்கிறீர்கள்….?
நீங்களே இன்னொரு முறை நீங்கள் எழுதியதை படித்துப் பாருங்கள்…
திருமதி ஸ்ரீவித்யா, திருமதி சிம்ரன் ஆகியோரைப்பற்றி நீங்கள்
எழுதி இருப்பது என்ன…? ஆதாரபூர்வமான சரித்திரமா – வரலாறா…???
——————————
// கமல் விருப்பப்படுவதை ஆட்சேபிக்க நான் யார். //
அப்படியானால், வேறு எவர் வருவதையும் ஆட்சேபிக்க நீங்கள் யார் என்கிற
கேள்வியும் கூடவே வருமே…
கமல் விருப்பப்படுவது மசால் தோசை சாப்பிட என்றால்
அதை ஆட்சேபிக்க நாம் யாருமில்லை தான்….
ஆனால், அவர் விருப்பப்படுவது இந்த மாநிலத்தின் “முதல்வர்” ஆக…
அது அவர் ஆசைப்பட்டால் மட்டும் நிறைவேறி விடாது.
உங்களைப் போன்ற, என்னைப்போன்ற ஓட்டர்களும்
ஆசைப்பட வேண்டும்…. எனவே, அதை ஆட்சேபிக்கும் உரிமை உங்களுக்கும் உண்டு…!!! எனக்கும் உண்டு.
நான் என் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை….!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Though Periyar etc., was there in TN politics , even DMK had to come down on their No god principles to One god. MGR was a strong believer, JJ no need to explain. I wish Veeramani and Subaveera Pandiyan etc., associate themselves more with DMK, the more you see the black shirts , the more votes they will loose.
Kamal – even if he wears everything black, DK or DMK will not consider him as one of them. And the public will not give any vote if he is in black shirts . He is intelligent , very good artist – but no submission to any body , be it is god or public . Submission and Prasadha buththi is not there with him. He will not go anywhere in Politics.
Great KM,
Appreciate your efforts. People like you are needed in TN now to educate public regarding their to be leaders. Keep up good work. 😀
திரு கமலஹசன் முதல்வராக வந்தால் அது தமிழ்நாட்டின்
சாபக்கேடாகும்.
கமல் பகல் கனவு காணுவதெல்லாம் தவறில்லை. மக்கள் மீது அக்கறை இருக்கும் ஒருவர் தனக்கு என்று சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு முதலில் வாழ்ந்து காட்டி தியாகம் செய்வதை ஒரு இயல்பாக இருக்க வேண்டும். ஆடி காரில் வந்து இறங்கி மக்கள் சேவை செய்ய எண்ணம் இருக்கு என்றால் அதை சற்று யோசிக்க வேண்டியுள்ளது. மேலும் அவர் நினைப்பதை போல் மக்கள் ஆகிய நாம் காமராஜரை போல ஓமந்தூராரை போல , தலைவர்களை எதிர்பார்த்து ஏங்கி கிடக்கிறார்கள். மக்கள் நொந்து போயிருக்கிறார்கள். அவர்களை போய் நீங்கள் ஏற்றுக்கொண்டால் நான் முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்வதும் , தேவைப்பட்டால் பிஜேபி யுடன் சேர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என்று சொல்வதெல்லாம் பகல் கனவு இல்லாமல் என்ன என்று சொல்வதென தெரியவில்லை. இவர் செய்யும் காமெடிக்கு ரஜினி எவ்வளவோ தேவலை போல தோன்றுகிறது. எது எப்படியோ உண்மையில் தமிழ்நாட்டுக்கு தேவை குறைந்தபட்சம் ஒரு மனிதன் மட்டுமே , இப்போது உள்ள மிருகங்களும் வேண்டாம் கடவுள் பாதி மிருகம் பாதி எனும் இரண்டும் வேண்டாம்.
Aspiring is his birth right.Let him form a political party&become an M.L.A.
தற்பாேது பா.ஜ.க.. வுடன்கை காேர்க்கவும் தயார் என்று கூறுவதாேடு … சினிமாவுக்கு முழுக்கு என்றும் , மக்கள் விரும்பும் தாெகுதியில் பாேட்டியிடுவேன் என்று கூறியவர் உடனே கிராமங்கள் அதிகம் உள்ள தாெகுதியில் நிற்பேன் என்றும் டிக்ளேர் செய்கிறார்…. ஆரம்பத்திலேயே குழப்பமான நிலை … நல்ல தெளிவு ….? யாருக்காகவாே ஏதாே ஒரு உள்நாேக்கத்தாேடு அரசியலில் நுழைகிறாறாே ….?
எனக்கு இன்னா இப்போ டவுட்னா,
மேலே பொண்டாடிய தொரத்திவிட்டவர் பெரியவரா கீறாரு. கீழ இவருவந்தா நமக்கெல்லாம் எவ்ளோ பெருமையா இருக்கும்.
இருக்குமா? இருக்காதா?
காவிரிமைந்தன் சார்- இதைவிட ஒரு முக்கியச் செய்தியை விட்டுவிட்டீர்களே.
முதலமைச்சர் எடப்பாடி, பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜாவின் மணிவிழாவில் பங்கேற்கிறார். அதாவது, பாடுபட்டு கட்டிக்காத்த அதிமுக என்ற கட்சியை (எம்ஜியார், அவருக்குப்பின் ஜெ, அந்த இருவரின் காலத்தில் தளபதிகள்போல் நின்ற பல அதிமுக தலைவர்கள்), இதைவிடக் கேவலமாக அடகு வைக்கமுடியுமா? நிர்மலா சீதாராமன் அல்லது வெங்கையா நாயுடுவின் விழா என்றால் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் (ஜெ இருந்தபோது நட்புறவோடு இருந்தவர்கள் என்ற வகையில்). நாளொரு தீக்கங்குகளை இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசும், தமிழக ஓவைசியின் விழாவில் கலந்துகொண்டால், அதிமுகவின் அடிப்படையே தகர்ந்துபோகுமே. யார் இதை இவர்களுக்கு எடுத்துச் சொல்வது?
தமிழன்,
இது தான் முழு செய்தி –
முதல் பாதி –
சென்னை: பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் மணி விழாவில்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,
இரண்டாவது பாதி –
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமு முதன்மை செயலாளர்
துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
………………………………
🙂 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஒருவரைப்பற்றி இங்கே குறை கூறினால், உடனே நீங்கள் இன்னும் நிறைய பேரைச் சொல்லி அவர்கள்
கூடத்தான் சரி இல்லை என்று வாதத்தை துவக்கி விடுகிறீர்கள்.
Please try be straight…!!!
🙂 🙂
Antony,
I appreciate your Presence of Mind…. 🙂 🙂
(ஆனால், நான் துவக்கவில்லை…அங்கேயே முடிக்கிறேன்…!!!)
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா … ! இடுகைக்கு தொடர்பில்லாத ஓரு செய்தி …. இருந்தாலும் தேவையான செய்தி :–
// “அரசியல்வாதி பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படிப்பார்களா?” மந்திரியை மடக்கிய மாணவி // http://www.vikatan.com/news/india/103308-will-the-politicians-children-study-in-government-school.html — அருமையான கேள்வி … ஒவ்வொரு இளைய தலைமுறையினரும் கேட்க நினைக்கும் கேள்வி …. சாட்டையால் அடித்தது போல இருந்திருக்கும் சூடு – சொரணையுள்ளவர்களுக்கு …! ஆனால் அரசியல்வாதிகளுக்கு அது ஏது … ? காசுக்காக நிறைய அரசியல்வாதிகள் ஆங்கிலவழிப் பள்ளிகளையும் — கல்லூரிகளையும் நடத்தும் நம் பாரத தேசத்தில் அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவார்களா … ? இதுபோன்ற கேள்விகள் அவஸ்யமானதுதானே … ?
செல்வராஜன் சார்…. எனக்கு இந்தக் கேள்வி பல வருடங்களாக மனதில் உண்டு. அரசு முதலில் ஒரு சட்டம் போடவேண்டும்.
அரசுப் பணியிடத்திற்கு தகுதி, அரசுப் பள்ளிகளில் அவர்கள் குழந்தைகள் படிக்கவேண்டும். Increment, promotion போன்றவையும் அரசு சார்ந்த பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே. இது அரசின் சம்பளம் பெறும் எல்லோருக்கும் பொருந்தும்.
அதேபோன்று, எல்லா பொறியியல், மருத்துவ professional இடங்களில், 70% இடங்கள், அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டும்தான், அதுவும் தமிழ் நாட்டில் கடந்த (அதாவது போட்டிபோடும் வருடத்திலிருந்து) 5 வருடங்களாகப் படிப்பவர்களுக்கு மட்டும்தான் என்றும் சட்டம் போடவேண்டும்.
அப்போதுதான், அரசுப் பள்ளிகளின், அதில் பணியாற்றும் ஆசிரியர்களின் தரம் உயரும்.
ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டார் என்று சொன்னவுடன் திரு தமிழனிடம் எந்த சலனத்தையும் காணோம்
காத்தித்திருக்கின்றோம்
‘நான் எழுதியபோது முதல் செய்திதான் வந்திருந்தது. அதற்கு அப்புறம் ஸ்டாலின் & கோ கலந்துகொண்ட செய்தியை புகைப்படத்துடன் பார்த்தேன். வெறுப்பாக இருந்தது.
இதற்கு வெட்கமில்லாமல் திமுக காரர்கள், ‘அரசியல் வேறு, தனிப்பட்ட வாழ்வு வேறு. நாங்கள் எல்லோரையும் மதிப்பவர்கள்’ என்று நீட்டி முழக்கிக்கொண்டு விளக்கமளிப்பார்கள் (இந்த நாக்கு சாமர்த்தியம் அதிமுகவிடம் கிடையாது. அதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்)
இரண்டு பேரும் வெவ்வேறு கட்சிகள், வெளியில் நாராசமாகப் பேசிக்கொள்வார்கள். ஆனால் செய்வது கூட்டுத் தொழில் (சரத்குமார், தேதிமுக சதீஷ்). அதேபோல் கிருஷ்ணசாமி-காங்கிரஸ், இந்தப்பக்கம் பாமக அன்புமணி/ராமதாஸ். இருவரும் சம்பந்திகள். தேர்தலின்போது, மறைமுகமா கிருஷ்ணசாமி வெற்றிபெற உழைப்பார்கள். என்னமாதிரி அரசியலோ.
இது ஒரு போர்க்களம் என்னும் உங்கள் பார்வையை விட்டொழியுங்கள். ஒரே வீட்டில் அப்பா காங்கிரஸ், அம்மா அதிமுக, அண்ணா கம்யூனிஸ்ட், தம்பி பாஜக என இருப்பது தான் இங்கே யதார்த்தம்.. அதுதான் அரசியலும் கூட.. கொள்கையை காட்டிலும் அண்ணன் ஜெயிக்கனும் என்பவன் அரசியல்வாதி, உறவைக்காட்டிலும் கொள்கை ஜெயிக்கனும் என்வவன் கொள்கைவாதி.. இரண்டுமே தவறாக இருக்காது
ஒரே சமயத்தில் சந்தர்ப்பவாதியும், கொள்கைவாதியும் ஒரே லெவல்தான், இரண்டிலும் தவறில்லை என்ற வாதம் புல்லரிக்க வைக்கிறது விவேக். அப்போ மக்கள்கிட்ட பேசுவது ஒன்றாகவும், செயல்படும்போது வேறாகவும் இரண்டு நிலையைக் கொண்டிருப்பது தவறில்லை என்றால், உங்கள் அகராதியில், “பகலில் போலீஸ், இரவில் திருடன்”, “அரசு அதிகாரி, லஞ்சமும் வாங்குவார்”, “அரசியல்வாதி, ஆனால் கமிஷனும் அடிப்பார்” என்று இருவேறுபட்ட குணாதிசியங்களையும் சரிதான் என்று சொல்லுவீர்கள் போலிருக்கிறதே. உங்களைப்போல “சந்தர்ப்பவாதங்களை” justify செய்பவர்கள் இருப்பதால், தமிழினக்காவலர்களே முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் காரணமாக இருக்கமுடிகிறது. வாழ்த்துக்கள்.
தமிழன் என்று பெயரை பைவத்தால் ……
நண்பரே (திராவிடன் அல்லன்),
நீங்கள் சொல்ல வந்தது தெளிவாக இல்லை என்பதால் நீக்கி விட்டேன்.
நீங்கள் கருத்து எதாவது சொல்ல விரும்பினால் தாராளமாகச் சொல்லலாம்.
தயவுசெய்து புரியும்படி, தெளிவாக எழுதவும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்