…
…

…
சென்னையில் 2015 டிசம்பரில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் யார் யாருக்கோ சேதங்கள் ஏற்பட்டன என்று கேள்விப்பட்டோம். ஆனால் இப்போது புதிதாக ஒரு அபூர்வமான செய்தி வெளிப்பட்டு இருக்கிறது….
பங்கு முதலீட்டாளர்களுக்கான சேவை மையமான, எஸ்இஎஸ் அமைப்பு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
சன் நிறுவன முதலாளிகளுக்காக ஒரு ஸ்பெஷல் ஜெட் விமானம் வாங்கப்பட்டு, அதை கணவர், மனைவி இருவர் மட்டுமே பயன்படுத்தி வந்தனராம்….
சென்னை வெள்ளத்தில் இந்த விமானம் சேதமாகி விட்டதாக கூறி, இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து 260 கோடி ரூபாய் பெறப்பட்டதாக இப்போது செய்தி வெளியாகி இருக்கிறது …!
இந்த விமானம் சேதமடைந்து விட்டதாக கூறி, புதிதாக இன்னொரு ஜெட் விமானம் 365 கோடி ரூபாயில் வாங்கப்பட்டிருக்கிறதாம்….
விமானங்களுக்காக சன் குழுமம் செலவழித்துள்ள பணத்தின் மதிப்பு, அந்த நிறுவனத்தின் மற்ற திட்டங்களுக்கு செலவிடப்படுவதை விட 4 மடங்கு அதிகம் எனவும் எஸ்இஎஸ் அமைப்பு புகார் கூறியுள்ளது.
சன்குழுமத்தின் ஒட்டு மொத்த ஊதியச் செலவில் 60 சதவீதத்தை கலாநிதிமாறன் ஊதியமாக பெற்று வருவதாகவும் எஸ்இஎஸ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சன் குழுமத்தின் தலைவரான கலாநிதிமாறனும், நிர்வாக இயக்குனரான காவேரி
கலாநிதிமாறனும் ஆண்டுக்கு தலா 78 கோடி ரூபாயை ஊதியமாக பெற்று வருவதாகவும் பங்கு முதலீட்டாளர்களுக்கான சேவை மையம் குறிப்பிட்டுள்ளது.
…
இது குறித்த இன்னும் சில தகவல்கள் – அடுத்த பகுதியில்….!!!



Whenever there is an article about K&D brothers why there is no feed back and comment from any body? Is not surprising?
எத்தனைதடவைதான் பழைய துணியை திரும்பத் திரும்ப அடித்துத் துவைப்பது.
இருவரும் …. (இதுமாதிரி விமரிசனம் ஓகேயா?)? எவ்வளவு தகிடுதத்தம் செய்து இந்த நிலைமைக்கு வந்தார்கள் என்பது எல்லாருக்குமே தெரியும். தீட்டிய மரத்தைக் கூர் பார்த்ததினால்தான் கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டார்கள்.
கலானிதிமாறன் Gentleman என்றுவேறு ஒருவர் இங்கு எழுதுகிறார். அவருக்கு தினகரன் பத்திரிகை தீச்சம்பவம், இறந்தவர்கள், அதற்கு கலானிதி மாறன் எவ்வாறு குரல் கொடுத்தார் (அந்தக் காணொளி பார்க்காத ஆளே இல்லை) அப்புறம் எப்படி பம்மினார் என்பதெல்லாம் தெரியவில்லை போலிருக்கிறது. எப்போதும் ரொம்பப் பக்கத்தில் இருந்தால் எல்லா தகிடுதத்தங்களும் தெரிந்திருகக்வேண்டுமே.
‘கலாநிதிமாறனும் ஆண்டுக்கு தலா 78 கோடி ரூபாயை ஊதியமாக பெற்று வருவதாகவும் பங்கு முதலீட்டாளர்களுக்கான சேவை மையம் குறிப்பிட்டுள்ளது.”
மேல்வரும் கூற்றுக்கு ஆதாரம் தர முடியுமா ?
அடுத்து
சண் கலாநிதிமாறன் அவர்கள் என்றுமே முறைகேடுகளில் ஈடுபடுவதில்லை என்பது உறுதியாக எனக்கு தெரியும் .அவரை நான் தனிப்படட முறையில் அறிவேன்.
அசோக் ராஜேந்திரன்
Oh ..it is Dayanidhi maran who pulled the wire form MTNL ( to Sun TV) , isn’t it? . And Kalanidhi maran never used it ? Bravo
திரு.டான் அஷோக்,
29-ந்தேதியிட்ட விமரிசனம் இடுகையில்,
ஆதாரத்தையும், முழு செய்தி விவரங்களையும் காணலாம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்