ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின்
சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன்
சுவாமி போடும் புது அணுகுண்டு !
மீண்டும் சுப்ரமணியன் சுவாமி !
ஒரு மணி நேரத்திற்கு முன் டாக்டர் சுப்ரமணியன்
சுவாமி அளித்துள்ள ஒரு பேட்டியில்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் அன்னை (!)
சோனியா காந்தியின் தொடர்புகளைப் பற்றிய
ஒரு புது குண்டைப் போட்டுள்ளார்.
அவரது பேட்டியில்-
ஊழலின் மொத்த மதிப்பாக 1,67,000 கோடி
என்று தோராயமாக சிஏஜி மதிப்பிட்டிருந்தாலும்,
கை மாறிய பணம் சுமார் 60,000 கோடி தான்
என்றும், அதில் –
ராஜா பெற்றது 10% தான் என்றும் மீதியில்
கலைஞர் குடும்பத்திற்கு 30 % உம்,
சோனியா காந்தியின் சகோதரிகளான
அனுஷ்கா மற்றும் நாடியா ஆகியோருக்கு
60 % உம் சென்று விட்டது என்றும்
கூறி இருக்கிறார்.
சோனியா காந்தியின் மீது வேறு பல
குற்றச்சாட்டுக்களை
அள்ளி வீசி இருக்கும் சுவாமி, தான் இது பற்றி
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு புகார் கடிதம்
அனுப்புவதாகவும் கூறி இருக்கிறார்.
சுவாமி கூறி இருப்பதில் 10 % அளவு உண்மை
இருந்தாலும் கூட இது மிக பிரம்மாண்டமான செய்தி.
இது தமிழக அளவிலும் அகில இந்திய அளவிலும்
அரசியலில் பல விளைவுகளை எற்படுத்தலாம்.
கடந்த சில தினங்களாகவே,
கலைஞர் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடும்
வகையில் தெம்பாகப் பேசி வருகிறார்.
தன்னை எதிர்த்துப் பேசும் தமிழக
காங்கிரஸ் தலைவர்களை கட்டுப் படுத்த
காங்கிரஸ் தலைமை தவறினால் – விளைவுகளுக்கு
தாம் பொறுப்பாக முடியாது என்றார்.
நேற்று வேலூரில் பேசும்போது கூட
கூட்டணியில் இருந்து பிரிய நேர்ந்தால், பிரிபவர்கள்
தான் வருந்த நேரிடும் என்று கூறினார்.
காங்கிரஸ் குடுமி தற்போது கலைஞர் வசம்
வந்திருப்பது வெளிப்படையாகவே புரிகிறது.
தனியாக எங்களை மட்டும் காட்டிக்கொடுத்தால் –
நீங்கள் தப்ப முடியாது
என்பது தான் அணுகுமுறை என்பது தெரிகிறது.
ஜெயலலிதா காங்கிரசுடன் கூட்டணி என்பது
இனி நடக்க வாய்ப்பே இல்லை என்பதும் தெரிகிறது.
டில்லியில் இது எந்த அளவிற்கு அதிர்வை
உண்டாக்கும் என்பது விரைவில் தெரியலாம் !




Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…