Tag Archives: தமிழ்

மொகலே ஆஜம் – ப்யார் கியா தோ டர்னா க்யா….?50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 17 )

This gallery contains 1 photo.

இந்தி(ய) திரைப்பட சரித்திரத்தில் மறக்க முடியாத ஒருபடம் 1961- ல் வெளிவந்த மொகலே ஆஜம் (Mugal-e-Azam )… ஏன் அப்படி….? சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சரித்திர பாத்திரமானஅக்பரையும், அவர் மகன் சலீமையும் (பிற்காலத்தில் ஜஹாங்கீர்…)கற்பனை பாத்திரமான அனார்கலி என்கிற அழகிய நாட்டியமங்கையையும் வைத்து – 1922-ல் எழுதப்பட்ட கதையை,1944-ல் வாசித்த திரைப்பட இயக்குநர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

லஞ்சமா அல்லது சர்வீஸ் சார்ஜா…?

This gallery contains 1 photo.

முந்தைய ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த ஒருவர், தனதுஇலாகாவில் வேலை தருவதாகச் சொல்லி, சிலரிடமிருந்துசில லட்சங்களை – பெற்றுக் கொள்கிறார்… பல காரணங்களால், அவர் பதவியில் நீடிக்க முடியவில்லை;அவர் அமைச்சராக நீடித்த காலத்தில், அவரால் சொல்லியபடிவேலை கொடுக்க முடியவில்லை; எனவே, அரசு வேலை வேண்டிஅவரிடம் சில லட்சங்கள் பணம் கொடுத்தவர்கள் – சொன்னபடி வேலை தான் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

” அன்றைய மதராஸின் ஓட்டல்கள் ” -ஒரு ஒரிஜினல் சாப்பாட்டு ராமரின் வெகு சுவாரஸ்யமான அலசல்……!

This gallery contains 1 photo.

‘அல்வா வேண்டும்’ என்று கேட்டால், அவர் மிகப்பெரிய பணக்காரர்என அர்த்தம்… அனைவரும் அவரையே பார்ப்பார்கள்… அந்தக் கால ‘ஆஹா ஓஹோ’ சுவைமிகு ஹோட்டல்கள் நிறைந்தசென்னை! ‘மதராஸ்’ என அழைக்கப்பட்ட அக்காலம் முதல் சென்னைஎன அழைக்கப்படும் இக்காலம் வரை ஓகோ என சுவையாக சூடாகப்பேசப்பட்டு வரும் உணவு விடுதிகள் அதாங்க ஹோட்டல்கள் பலஉண்டு நமது தருமமிகு சென்னையில்! … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

அறிக்கை – எந்த கலரில் இருந்தாலும் சரி வரவேற்போம் ……..!!!ஆனால் பட்ஜெட் ….???

This gallery contains 1 photo.

தமிழகத்தின் நிதியமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்….கருப்பு வண்ண எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டு, வெள்ளை அறிக்கைஎன்று சொல்லப்படும் ஒரு அறிக்கை…. விஷயத்திற்கு வருவோம் – அறிக்கை பூராவும் முந்தைய அதிமுக அரசை குறை சொல்கிறது.அதில் உண்மையும் உண்டு, உண்மை அல்லாத அரசியலும் உண்டு.ஊழல்கள் என்று சொல்லப்படுவது ஒரு பக்கம்…. ஆனால், அதிமுக அரசு வரிகள் போடாததை –நிர்வாகத்திறன் இன்மை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து ——-50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 16 )

This gallery contains 1 photo.

ஓர் இரவு படம் வெளியானது 1951-ல்.கதை, வசனம் எழுதியவர் அறிஞர் அண்ணா என்றாலும் கூடஇந்தப்படம் நாடகமாக வெளிவந்தபோது பெற்ற வெற்றியைபெறவில்லை… ஆனால், இந்தப்படத்தில் – பாரதிதாசன் எழுதிய “துன்பம் நேர்கையில்..”என்ற பாடல் இடம்பெற்று மிகவும் பிரபலமானது. இப்பாடலைபடத்தில் – எம். எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாரதிதாசனின் பாடலுக்கு, தனிப்பட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

” செங்கமலமும் ஒரு சோப்பும் ” – சுந்தர ராமசாமி சிறுகதை

This gallery contains 1 photo.

உலகமெங்கும் வியாதிக் கிருமிகள் மயம், இலேசாகச்சொல்லி விடலாம், நாலைந்து ஆண்டுகள் இதைப் பற்றிஆராய்ச்சி செய்து பட்டம் பெற்ற செங்கமலத்திற்கு அல்லவாஅதன் பயங்கர விளையாட்டுகள் தெரியும், வியாதிக் கிருமிகளைப்பூதக்கண்ணாடி வழி சோதனை செய்து. எண்ணிக் கணக்கிடுவதுஅவள் வேலை. ரோகாணுக்களின் சம்காரத் திருவிளையாடல்களைப் பற்றிஎத்தனை தடவை கௌரிக்குட்டியிடம் சொன்னாலும் அலுக்காதுசெங்கமலத்திற்கு, அரைமணி நேரம் மூச்சு விடாமல் சொற்பொழிவுஆற்றிவிட்டுக் கேள்விகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

தங்கர் பச்சான் வீட்டுக்கு ஓடிய மின் வாரிய அதிகாரிகள்…..இது பத்திரிகையாளர்கள் கதைக்கும் பிரச்சினை மட்டுமல்ல -!!!

This gallery contains 1 photo.

கீழே இருப்பது இன்று மாலை வெளியாகியுள்ள ஒரு செய்தி – தங்கர்பச்சான் வீட்டுக்கு ஓடோடிய மின் வாரிய அதிகாரிகள்…இதற்கு காரணம் அந்த ஒற்றை கேள்வி..! : Sunday, August 8, 2021, சென்னை: மின்கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமா எனசினிமா இயக்குநர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,மின்வாரிய அதிகாரிகள் அவரது வீட்டுக்கே சென்று குறைகளைகேட்டறிந்தனர். மின்கட்டண … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்