நயினாருக்கு, ஸ்டாலின் மீது வராத கோபமும், ஆத்திரமும் – விஜய் மீது வருவது ஏன் ….??? காரணம் (கீழே) இப்போது தான் புரிய வருகிறது….!!!

…………………………………….

…………………………………………..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை மோசடியாக ஆட்டையை போட்ட இளையராஜா என்ற மோசடி பேர்வழி உதவியோடு, திமுக ஆட்சியில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 100 கோடி மதிப்பிலான நிலத்தை அன்றைய நெல்லை MLA நயினார் நாகேந்திரன் அவர்களின் மகன் நயினார் பாலாஜி நெல்லையில் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்து மோசடி செய்தது எப்படி…???

Video –

அறப்போர் புகார் அளித்து அந்த ஒப்பந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்ட பிறகும், இளையராஜா மற்றும் நயினார் பாலாஜி மீது இது வரை FIR போடப்படாதது ஏன்?

திமுக ஆட்சியில் தான் வழக்கு இல்லை த.வெ.க ஆட்சியில் இந்த பத்திரப்பதிவு மோசடி பேர்வழிகள் மீது வழக்கு பாயுமா?

அறப்போர் இயக்கம் அறிக்கை லிங்க் இங்கே –

( https://www.facebook.com/photo/?fbid=1327730466238323&set=a.402084472136265 )

………………………………………..

ஸ்டாலின் அவர்களது ஆட்சியில், நயினார் அவர்களுடன் – ஒரு புரிந்துணர்வோடு – குப்பையில் போடப்பட்ட அறப்போர் இயக்கத்தின் புகாரை,

விஜய் அரசு இப்போது தூசி தட்டி, எடுத்து, மேல் நடவடிக்கை எடுக்கத்துவங்கியது தானே – இந்த கோபம், ஆத்திரம், பொங்கல் அனைத்துக்குமான அடிப்படைக் காரணம்….. ???

அம்மாடியோவ் … !!!

……………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நயினாருக்கு, ஸ்டாலின் மீது வராத கோபமும், ஆத்திரமும் – விஜய் மீது வருவது ஏன் ….??? காரணம் (கீழே) இப்போது தான் புரிய வருகிறது….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி இவங்களுக்கெல்லாம் விஜய் மீது ஆத்திரம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? செய்தி வெளியான பிறகு பாஜக நயினார் மீது நடவடிக்கை எடுத்த மாதிரித் தெரியலை. கோயில் கோயில்னு பாஜக புலம்பி என்ன பிரயோசனம்? நல்லவேளை நயினார் ஜெயிக்கலை.

    அரசியல்வாதியாக ஆகிவிட்டாலே, அதிலும் தமிழகத்தில் தலைவராகவோ இல்லை முக்கியஸ்தராகவோ ஆகிவிட்டால் உடனே மற்ற கட்சித் தலைவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கொள்ளையடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். (ஓபிஎஸ் மகன், பாமக இராமதாஸ் மகன், நயினார் மகன்.. செல்வப் பெருந்தகை, ப.சி. மகன் என்று மகன்கள் லிஸ்டைப் பார்த்தீங்கன்னா, அவங்கள்லாம் எப்படி ஆயிரம் கோடீஸ்வரராக ஆகிவிடுகிறார்கள்?. இதில் ஆக்டோபஸ் குடும்பதைச் சேர்க்கவில்லை)

    நம்ம நாட்டு சட்டங்களால் இவர்களை ஒன்றுமே செய்ய முடிவதில்லை. மக்களும் நம்ம பணத்தைத் திருடுகிறார்களே என்று நினைப்பதில்லை. இது யாருடைய குறை?

பின்னூட்டமொன்றை இடுக