……………………….

……………………….

……………………….
ஒரு அற்புதமான காணொளி இங்கே …. முதலில் வீடியோவை
பாருங்கள் / கேளுங்கள்… பிறகு, கீழே அந்த அற்புதம் என்னவென்று
சொல்லி இருக்கிறேன்….
……………
…………….
இந்தக் காணொளி – முற்றிலுமாக –
100-க்கு 100 செயற்கை நுண்ணறிவை ( AI )
பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது … !!!
வியப்பாக இல்லை….???
………………………………………………………………………………………………………………………..
Latest – Addition –
NO connection to the above Article –
……………………………
…………………………………………………………………………………………………………………………………….



காணொளி (அச்சுதம் கேசவம்) ஓகேதான். எனக்கு செயற்கை நுண்ணறிவை உபயோகித்து வரும் வீடியோக்கள் பிடிப்பதில்லை. அதைத் தடை செய்தாலும் சரிதான் என்ற எண்ணம் வரும். காரணம் எது உண்மை, எது பொய் என்று தெரியாதபடி கணக்கற்ற ஏஐ காணொளிகள் வருவதுதான். அதனால் செய்திகளின் உண்மைத் தன்மை அடிபட்டுவிடுகிறது. அதுபோல அவங்க சொல்ல நினைப்பதற்கு ஏற்றவாறு கோயில்களின் சிலைகள் நகர்வது போன்று பல காணொளிகள் வியப்பைத் தருவதில்லை, எரிச்சலைத் தருகிறது (நான் கணிணி ஆள்)
விஜய் சர்க்கார்…. நிச்சயம் பாராட்டணும். நிறைய நல்லது செய்ய நினைக்கிறார்கள். சமீபத்தில் அரசுத்துறையில் காரியம் ஆக லஞ்சம் கொடுக்காதீர்கள், கேட்டால் என் பெயர் சொல்லுங்கள் என்று ஒரு கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி ஒரு சர்க்கார் எண்ணுவதே அதிசயத்திலும் அதிசயம். இந்த மாதிரி சர்க்காரைப் பாராட்ட ஊடகங்களுக்கு மனதில்லை, சிறு சிறு குறையைப் பெரிய குறைகள் போலக் காட்டுகின்றனர். இந்த ஊடகங்களை ‘தேச விரோதிகள்’ என்று அறிவிக்க சட்டங்கள் இருக்கிறதா என்று பார்க்கணும்.
அரசு செய்யும், செய்ய நினைக்கும் நல்ல செயல்களை மனமுவந்து பாராட்டினால்தான் அரசுக்கு ஊக்கம் இருக்கும். இல்லைப்பா, நாங்கள் சாக்கடைவாசிகள், சாக்கடையிலேயே இருக்கிறோம் என்று மக்கள் நினைத்தால், சிஸ்டத்தை யார் சரி செய்வார்கள்? விஜய் அவர்களை மனமுவந்து பாராட்டுவோம். நிச்சயம் தவறுகள் இருக்கும் (கோயில் நிலங்களை பிறருக்கு பட்டா போடுவது போன்று). இவை அதிகாரிகளின் தவறுகள். நாம் அனைவரும் குரல் கொடுத்தால் இந்த அரசு செவிசாய்க்கும் என்ற நம்பிக்கையை விஜய் கொடுக்கிறார். வாழ்த்துகள்.
பாஜக அரசுக்கு ஜால்ராவாக இருக்காது. இருக்க வேண்டாம். தமிழகத்திற்கு எது நன்மையோ அதற்கான நிதிவசதிகளைப் பெற்று தமிழகத்தில் மாற்றம் கொண்டுவாருங்கள். மத்திய அரசு தரும் நிதியை லபக்குவது, கண்ட திட்டங்கள் பெயரைச் சொல்லி அதற்குத் தாரை வார்த்து கணக்குக் காண்பிக்காமல் இருப்பது, தன்னுடைய உறவினன் நிலம் வாங்கிவிட்டார் என்பது தெரிந்த பிறகு அதன் பக்கத்தில் அரசுத் திட்டம், பேருந்து நிலையம் என்று ஆரம்பிப்பது என்ற திமுகவின் தகிடுதத்த வேலைகளை இந்த அரசு நிச்சயம் செய்யாது.