…………………………………..

………………………………….
ஜாவேத் அக்தர், சிறந்த உருதுமொழிக் கவிஞர், புகழ்பெற்ற
ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர், வசனகர்த்தா….. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி திரையுலகில் புகழ் பெற்று
விளங்குகிறார். ஹிந்தி திரையுலகம் எப்போதுமே அவரை
மதிப்பும், மரியாதையுமாக, ஒரு சிறப்பான ஒரு இடத்தை தந்து கௌரவித்திருக்கிறது.
ஜாவேத் – பிறப்பால் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் ஒரு நாத்திகர்.
தனக்கு மதமோ, கடவுள் நம்பிக்கையோ கிடையாது என்று
வெளிப்படையாக கூறி இருக்கிறார். ஆனாலும் கூட, நம்ம ஊர்
“பகுத்தறிவாளர்கள்” போல், நம்பிக்கையுடையவர்களை அவர் என்றும்
புண்படுத்தியது கிடையாது. தனக்கு நம்பிக்கை இல்லை என்று
சொன்னார்….. அதோடு சரி.
இரண்டு நாட்கள் முன்னதாக, சிவசேனா தலைவர் பால் தாக்கரே’யின்
மருமகன் MNS தலைவர் ராஜ் தாக்கரே ஏற்பாடு செய்திருந்த
” தீபோத்சவ் ” நிகழ்ச்சியில் ஜாவேத் அக்தர் பேசுகையில், ஆச்சரியம்
தரும் விதத்தில் சில விஷயங்களை பேசினார்.
அவரது உரையிலிருந்து முக்கிய விஷயங்களை கீழே
தந்திருக்கிறேன்…. முழு உரையையும் படிக்க விரும்புபவர்களுக்காக,
ஆங்கிலத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வெளியாகியுள்ள
அந்த செய்தியையும் அப்படியே அதன் கீழே தந்திருக்கிறேன்.
ஜாவேத் அக்தர் சொன்னதன் சாராம்சம் –
………………………..
பகவான் ராம் மற்றும் தேவி சீதா இந்துக் கடவுள்கள் மற்றும்
தெய்வங்கள் மட்டுமல்ல, ” அவர்கள் இந்தியாவின் கலாச்சார
பாரம்பரியம்” ….
மேலும், ராமர், சீதையின் தேசத்தில் நான் பிறந்ததை பெருமையாக கருதுகிறேன்.
நான் நாத்திகனாக இருந்தாலும் ராமனையும் சீதையையும்
இந்த நாட்டின் செல்வமாகவே கருதுகிறேன். அதனால்தான்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தேன்.
மரியாதைக்குரிய உத்தமர்களைப் பற்றி
நினைக்கும்போது ராமனும் சீதையும் தான் நினைவுக்கு வருகிறார்கள்.
நான் லக்னோ’வில் வளர்ந்த எனது சிறுவயது நாட்களை
நினைவு கூர்ந்து பார்க்கிறேன்….அப்போதெல்லாம் பணக்காரர்கள்,
காலையில் “குட் மார்னிங்” சொல்வார்கள்…. ஆனால் சாமான்ய மக்கள்
‘ஜெய் சியா ராம்’ என்று தான் சொல்லுவார்கள்.
(பல வருடங்கள் வடக்கில் இருந்த நான் இதை நன்கு அறிவேன்.
காலை வணக்கத்தின்போது, சிலர் ‘ஜெய் ராம் ஜி கீ’ என்பார்கள்;
சிலர் ‘ஜெய் சியா ராம்’ என்று சொல்வார்கள் …..)
“சீதையையும் ராமனையும் தனித்தனியாக நினைப்பது பாவம்.
சியா ராம் என்ற சொல் அன்பிற்கும் ஒற்றுமைக்குமான சின்னம்.
சீயாவும்(சீதையும்) – ராமனும் ஒருவரால் செய்யப்பட்டவர்கள்.
நான் மூன்று முறை ” ஜெய் சியா ராம் ” சொல்லுவேன்…. என்னுடன்
சேர்ந்து நீங்களும் கூறுங்கள். இன்றிலிருந்து “ஜெய் சியா ராம் ” என்று சொல்லுங்கள்.
இந்தியாவில் ஜனநாயகம் இந்துக்களால் தான் பாதுகாக்கப்படுகிறது.
ஆனால் மக்கள் அண்மைக்காலங்களில் சகிப்புத்தன்மை
அற்றவர்களாகி வருகிறார்கள்.
கடந்த காலங்களில் சகிப்புத்தன்மை இல்லாத பலரும்
இருந்தபோதும் கூட – இந்துக்கள் அப்படி இருந்ததில்லை…
நான் சொல்வது மட்டும் தான் சரி… மற்றதெல்லாம் தவறு
என்கிற மனோபாவம் இந்துக்களிடம் இருந்ததில்லை.
இந்துக்களின் சிறப்பு என்னவென்றால், அவர்களின் இதயங்களில்
எப்போதும் ஒரு மகத்துவம், ஒரு பெருந்தன்மை இருந்தது,
ஆனால் அதை நீங்கள் இழந்து விட்டால், நீங்களும், மற்றவர்களைப்
போல ஆகிவிடுவீர்கள். நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள் என்பதைப் பார்த்து, நாங்கள் கற்றுக்கொண்டோம். நாம் அதை விட்டு வெளியேறி
விடக்கூடாது.
நீங்கள் எந்த கடவுளையும் வணங்கும் கலாச்சாரம் உடையவர்கள்.
எந்த கடவுளையும் நம்பாவிட்டாலும், யாரையும்
ஏற்கா விட்டாலும் கூட நீங்கள் ஒரு இந்து.
அதுதான் இந்து கலாச்சாரம்.
அது தான் எங்களுக்கு ஜனநாயக அணுகுமுறையை அளித்துள்ளது.
நான் மட்டும் தான் சரி…..
மற்றவர்கள் எல்லாரும் தவறு என்று எப்போது நினைக்க
ஆரம்பிக்கிறோமோ, அங்கே நாம் அடிப்படையிலேயே
தவறுகிறோம்… உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுவது
தவறான விஷயம்.
.
………………………………………………
Javed Akhtar asks people to chant ‘Jai Siya Ram’ slogans: In Hindu culture, it is wrong to think
that I am right and everyone else is wrong….
………………
Veteran poet and lyricist Javed Akhtar on Thursday attended the Deepotsav program organized by Raj Thackeray. During the event, Akhtar said that
Lord Rama and Sita are not only Hindu gods and
goddesses but the cultural heritage of India.
He said that although he is an atheist,
he considers Ram and Sita to be the wealth of this country. And that’s why he attended this event.
He added that Ramayan is our cultural heritage
and it is the subject of your interest.
Akhtar further said that he is proud to have been
born in the land of Ram and Sita and when we
talk about Maryada Purushottam, it is Ram and Sita
that come to mind.
During his speech, Akhtar also asked people to
chant ‘Jai Siya Ram’ slogans. He recalled his
childhood days in Lucknow and said that as a child,
he used to see people who were rich and they
used to say good morning. But a common man
passing by on the road used to greet people
with ‘Jai Siya Ram.’
“Therefore, it is a sin to think of Sita and Rama separately. The word Siya Ram is a symbol of love
and unity. Siya and Ram were done by only one.
His name was Ravana. So the one who does
differently will be Ravana. So you chant
Jai Siya Ram three times with me.
Say Jai Siya Ram from today,” he said.
Akhtar also stressed on how freedom of expression
has diminished. He said that if he had written
Sholay today, the scene in which Hema Malini
goes to the temple with Dharmendra standing
behind, he and Salim Khan would not have written
that scene today. Because in today’s society,
if someone feels bad about this, you will
understand that ignorance has increased.
He further said that in the past there were
some people who were always intolerant.
But Hindus were not like that.
“The special thing about Hindus is that there was
always a greatness in their hearts. But if you
finish it, you become like others. We have learned
the way you have lived. It won’t work if you’re
going to leave that quality,” he added.
Talking about how India has preserved democracy at present, Akhtar said, “Even if you don’t believe
in anyone, you are a Hindu, that is Hindu culture.
It has given us the attitude of democracy.
On the contrary, it is wrong to think that
I am right and everyone else is wrong. Then
what you have been taught is wrong.”
………………………………………………..



Why should you take buttermilk
every day….? Dr pal will tell you ….
………..
.
……………………………………………..
Sir, we watch Dr Pal’s YouTube shows. We are also fan of Chef Venkatesh Bhatt. What if we get a program with these two together. Watch the link.
Nice , fun and useful interview
Raghuraman N,
You will be surprised if I tell you that I have already
seen some of Dr.Pal’s medcom videos and actually chosen this video for tomorrow’s Blog.
OK… well and Good that you have released it here.
I will select and publish one more video
after a gap of few days.
.
-with all best wishes,
Kavirimainthan