……………………………………………..

……………………………………………….
பார்த்தாலே பரவசம்….
விதம் விதமான Stuffed Dosas …
பங்களூரு ஸ்பெஷல் ….!!!
( பங்களூரு நண்பர் புதியவன் அவசியம் ஒரு கை
பார்த்திருப்பாரென்று நம்புகிறேன்…!!!)
……………………….
.
……………………………………………….
……………………………………………..

……………………………………………….
பார்த்தாலே பரவசம்….
விதம் விதமான Stuffed Dosas …
பங்களூரு ஸ்பெஷல் ….!!!
( பங்களூரு நண்பர் புதியவன் அவசியம் ஒரு கை
பார்த்திருப்பாரென்று நம்புகிறேன்…!!!)
……………………….
.
……………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
பயணத்தில் இருந்ததால் பல பதிவுகளைப் படிக்கவில்லை/கருத்திடவில்லை.
இங்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பு முள்பாகல் தோசை என்று போட்டிருந்த ஒரு பெரிய கடைக்குச் சென்றிருந்தேன். நான் ‘Bபாத் தோசை’ வாங்கினேன் (70 ரூ என்று நினைவு). சொன்னால் ஒரு மாதிரி இருக்கும். முறுகலான தோசையை மடித்து (படத்தில் காண்பித்திருக்கும் வெறும் தோசை, நெய்யில் கிட்டத்தட்ட பொரித்தது) அதில் எலுமிச்சை சாதம் வைத்திருப்பார்கள். எனக்கும் கேட்டவுடன் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் ருசி மிக மிக அருமை.
பிற்பாடு நாங்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது, முள்பாகல் என்ற ஊருக்கே சென்று அங்கு தோசை வாங்கிச் சாப்பிட்டோம். (அங்க கடைகள் சிறிது என்பதாலும் நான் சாதா முள்பாகல் தோசை சாப்பிட்டேன். காணொளியில் உள்ளதுபோல நெய்யைக் கொட்டி தயார் செய்வார்கள், அதிகமில்லை ஜெண்டில்மேன் 50ரூபாய்க்கும் குறைவு). ஆஹா… அருமை. அங்கேயே தட்டை இட்லி எனப்படும் 1/2 அடி விட்டமுள்ள இட்லியை வாங்கி அதற்கு சட்னி தொட்டுச் சாப்பிட்டேன். கொஞ்சம் அதீத ஆர்வத்தில் அங்கிருந்த இட்லி-மிளகாய் பொடியைப் பார்த்துவிட்டு, இன்னொரு தட்டை இட்லியில் மி.பொடி தடவித் தரச் சொன்னேன். கொஞ்சம் ஜாஸ்தி மி.பொடி போடுங்க என்றேன். அவங்க ஒரு கரண்டி இட்லி பொடியும் அதில் நெய்யும் விட்டுத் தந்தார்கள். இரண்டு வாய்கள் சாப்பிட்ட உடனேயே அதன் காரம் என் உடம்பு தாங்காது என்று புரிந்துவிட்டது.
பெங்களூரில் (பொதுவா கர்நாடகாவில்) உணவுச் சுத்தம் அதிகம். தமிழகத்தில் அது மிகக் குறைவு. உணவு தயார் செய்யும் ப்ராசஸ் வெளிப்படையா இருக்கும். கஸ்டமர்கள் பார்க்க முடியும். வெந்நீரில் ஊறப்போட்ட ஸ்பூன்கள் இருக்கும். நாம் எடுத்துக்கொள்ளலாம். உணவு விலையும் மிகக் குறைவு. தோசை 40 ரூ, இட்லி 20 ரூ, இனிப்பு 40 ரூ. ஸ்டாண்டர்ட் மெனு (இட்லி, ரவா இட்லி, தோசை, காரா பாத்-உப்புமா, கேசரி பாத்-கேசரி). ருசியும் நல்லாவே இருக்கும். இங்கு நிறைய ரெஸ்டாரண்டுகள் உண்டு, பெரும்பாலும் அழகிய கையேந்திபவன்கள்தாம். SLV, MTR என்று பலவித food chains. MTR மாத்திரம் கொஞ்சம் விலை-ஆனால் தமிழகத்தைவிடக் குறைவு. (ஆனால் எனக்கு தமிழக உணவு, தமிழக சாம்பார், தமிழக தோசைதான் பிடிக்கும். என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதனால் தமிழகத்தைத் தொட்டால், வீடுகளில் சாப்பிடுவதைவிட, ஹோட்டலில் ரவா தோசை சட்னி,சாம்பார் சாப்பிடுவதையே விரும்புவேன்). பெங்களூர் ஸ்பெஷல், அக்கி ரொட்டி எனப்படும் அரிசி மாவு தோசை, நீர் தோசை. இரண்டுமே தமிழகத்தில் கிடையாது.
காணொளியில் உள்ளது முள்பாகல் மெதட்டில் தயார் செய்யும் தோசை. இதைத் தவிர, தாவண்கெரே வெண்ணெய் தோசை உண்டு (இது இன்னொரு பகுதி, கர்நாடகாவில்). பெங்களூரில் விறகடுப்பை உபயோகிக்கும் ஒரு சில ரெஸ்டாரண்டுகளில் இதனைத் தயார் செய்வார்கள், ருசி அருமையாக இருக்கும் (குழம்பாதீர்கள். Once in a blue moon, நான் சாப்பிடுவேன்)
இது என்ன.. [1] ன்னு காண்பிக்குது. நான் புதியவன்.
..
புதியவன் ,
பார்த்தீர்களா … கடைசியில் பங்களூர் தோசை தான்
உங்களை இங்கே இழுத்து வந்திருக்கிறது …!!!
…….
கவலப்படாதீர்கள் எல்லாருக்குமே,
அது [1] என்று தான் காட்டுகிறது. ஏதோ சாஃப்ட்வேர்
பிராப்லம் என்று நினைக்கிறேன்… பொறுத்திருந்து பார்ப்போம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்