……………………

……………………….
இன்னிக்கு படத்துக்குப் போறேன்னு
சொன்னியே போலயா?
என அப்பா மகனிடம் கேட்டார்.
இல்ல டீவில தான்ப்பா ரிலிஸ்..
டீவிலயா? பழைய படமா…?
புதுபடம் தான்பா…!
புதுப்படமா? அது எப்படி…?
ஒடிடில?
ஒடிடின்னா?
ஒடிடின்னா காசு கட்டினா பார்க்க முடியும்…?
ஒ எங்க போய் காசு கட்டனும்?
அது ஒரு App- ப்பா அது உனக்கு சொன்னா
புரியாது…?
ஒ App ன்னா? அது என்ன?
அய்யோ அப்பா அறுக்காத, எனக்கு ஆபிஸ்க்கு நேரமாச்சு
நீ மாத்திர சாப்பிட்ட்டு தூங்கு என கிளம்பினான் மகன…
அவனைப் பார்த்தபடியே உள்ளிருந்து ஒரு
டைரியை எடுத்து, மகனிடம்கொடுத்தார் அப்பா
அவன் அதைப் புரட்டிப் பார்த்தான்..
1988 டிசம்பர் 4 என எழுதபட்டிருந்தது
அப்பா இது என்னப்பா?
டீவிடா?
டீவின்னா?
நாம வீட்லிருந்தே படம் பார்க்கலாம்பா?
ஒ இது என்னப்பா?
இது ஆண்டனா, டா இது வச்சாதான் சிக்னல் வரும்
சிக்னல்னா?
அங்க ஒளிபரப்புறது நமக்கு இங்க வரது தான்
சிக்னல்.
ம்ம் தெரியும் ரோடுல இருக்குமே பச்ச சிவப்பு
மஞ்சள் அந்த சிக்னலாப்பா?
நான் சிரித்தபடியே அது இல்லப்பா இது வேற
சிக்னல்.
அன்று 1000 கேள்விக் கேட்டான் என் மகன்.
அனைத்துக்கும் சிரித்தபடியே பதில் சொன்னேன்…
அவனின் தெரிந்து கொள்ளும் திறனை
நினைத்துப் பெருமை பட்டபடியே – என எழுதி முடித்திருந்தார்.
டைரியைப் படித்து விட்டு மகன் கண்கலங்கி
அப்பாவைக் கட்டிப்பிடித்தான்.
ஒவ்வொரு அப்பாவும் வயதின் ஓட்டத்தில்,
குழந்தைதான். மகன் தான் அப்பாவாகிறான்……..
(படித்தது …)
.
……………………………………………….



I mentioned a couple years back the fear of delimitation will result in less number of representatives for southern states…