…………………….

………………………………..
திராவிட மாடல் பற்றி தொடர்ந்து பெருமை பேசும்
ஆட்சியாளர்களையும் சரி,
தேர்தல் சமயத்தில், அவர்களால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு,
குத்தகைக்கு வாங்கப்பட்ட கூட்டணிக் கட்சிகளையும் சரி –
நான் பாஜக கட்சிக் காரனல்ல…ஆனாலும்,
நான் கேட்க நினைக்கும் பல கேள்விகளை / சொல்ல நினைத்த பல விஷயங்களை இங்கே அண்ணாமலை
அவர்கள் கேட்பது/சொல்வது எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது….
திராவிட இயக்கம் (நீதிகட்சி) துவங்கி
105 ஆண்டுகள் கடந்த பிறகும்,
55 ஆண்டுக்கால திராவிட கட்சிகளின்
ஆட்சிக்குப் பிறகும் – இந்த இரட்டைகுவளை
வழக்கம் நிலவுவது இவர்களுக்கு கேவலமாக
இல்லை …????
இந்த லட்சணத்தில் “திராவிட மாடல்” என்று மார் தட்டல் வேறு…? வடக்கத்திக்காரன் எவனாவது ஏண்டா இது தான் உங்கள் திராவிட மாடலா…? என்று கேட்டால் நாம் தூக்கு மாட்டிக்கொள்ள வேண்டியது தான்…
(இவர்களுக்குத்தான் வெட்கம், மானம் எதுவும்
இல்லையே…)
” வெல்டன் அண்ணாமலை ” என்று உரக்கக் கூற விரும்புகிறேன்.
தமிழ் நாட்டில், ஊடகங்களில், பேட்டிகளில் …
திட்டம் போட்டு ஆளும் கட்சி சார்பாகவே கேள்வி கேட்கிறார்கள்….
பதிலுக்கு, எதிர்பாராத எதிர்க் கேள்வியை கேட்டால்,
-திணறுகிறார்கள்…
-சமாளிக்கிறார்கள்…
-நழுவுகிறார்கள்…
அடுத்த சப்ஜெக்டுக்கு தாவுகிறார்கள்…
வெட்கங்கெட்ட இத்தகைய ஊடகங்கள்… ஆளும் கட்சியிடம்,
தங்கள் பத்திரிகை காக்க வேண்டிய தரத்தை, ஊடக தர்மத்தை –
அடகு வைத்து விட்டு…
–அல்ல அல்ல –
விற்று விட்டு, தரங்கெட்டுப்போய், வலைத்தளத்திற்கு வருகின்றன….
இதைவிட, நாங்கள் இன்ன கட்சியின் சார்பாக பேட்டி காண்கிறோம்
என்று சொல்லி விட்டே வரலாமே…
குமுதம் தளத்துக்கு, அண்ணாமலை அவர்கள் கொடுத்த பேட்டியின்
முதல் பகுதி, நேற்று மாலை வெளியாகி இருக்கிறது….
கீழே –
( இதை பகுதி-1 என்று தான் சொல்கிறார்கள்…
ஆனால், அடுத்த பகுதி வெளிவருமா …?
வரும் வரும்…இவர்களுக்கு வியாபாரம் தானே முக்கியம்…!!! காத்திருப்போம்….!!! )
………….
.
…………………………………………………………………………………………………………………………….…
அண்ணாமலை அவர்கள் தமிழகம் இதுவரை கண்டிராத வீரத்தின்,விவேகத்தின் உறைவிடம் என்பதை அவர்தம் தெளிவான, தீர்க்கமான,தைரியமான பதில்கள் மூலம் உணரமுடிகிறது
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் , இவனை இங்கு இகல் வெல்லல் யார்க்கும் அரிது …என்ற குறலின் அர்த்தத்தை இப்பொழுதுதான் தான் அர்த்தம் கண்டுகொண்டேன்
இவருடன் வாதம் என்பது சாத்தியமில்லாதது… தகவல்களுடனும், விரல் நுனிவரை செய்திகளை தெரிந்து வைத்து கொண்டு வாதம் புரியும் திறமையை, இறுகாறும் நான் கண்ணுற்றதில்லை .முன்னேற்பாடு எதுவும் இல்லாத நிலையில்,பேட்டி எடுபவரின் தொடை நடுக்கத்தை தெளிவாகவே காண முடிகிறது .
ஒரு திகில் திரைப்படத்தை காணும் அளவிற்கு கடைசிவரை திகிலுடன் தான் இந்த விடியோவை நான் கண்டு களித்தேன் .
அடுத்த பகுதிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
Latest News –
….
….
ஒன்ற மணி நேரமா சாப்பிடாம உட்கார்ந்து பேசி இருக்கேன். ரெண்டு பார்ட்டா போட்டாலும் பரவால்ல கட் பண்ணாம முழுசா போடுங்க என்ற அண்ணாமலையின் ஆதங்கம் நியாயமானது. இன்றைய சூழ்நிலையில் திராவிட மாடலுக்கு எதிரான மாற்று முகாம்களில் இருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரிடமும் தாறுமாறாக கேள்விகள் கேட்டு அவர் பொறுமையை இழந்து ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கூறும் ஒரு வார்த்தையை வைத்து பரபரப்பு தீயை பற்ற வைத்துவிடும் ஊடகவியலாளர்கள் அந்த தலைவர் அந்த சந்திப்பில் தெரிவித்திருக்கும் சரியான அல்லது யோசிக்க வேண்டிய கருத்துக்களை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. இதற்கு சரியான உதாரணம் புதிய தலைமுறை அண்ணாமலை தந்த அந்த ஆதாரக் கோப்புகளை ஒன்று அது போலியானது என அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது அதில் உண்மை இருக்குமானால் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கும் அரசியல் தலைவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்க வேண்டும். இதில் எது ஒன்று நடந்திருந்தாலும் அது பத்திரிக்கை தர்மம் என்று ஒத்துக் கொள்ளலாம்.
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து அசுத்தப்படுத்திய செயல் அரசின் கவனத்திற்கு வந்த பிறகுதான் அங்கு இரட்டை குவளை முறை இருப்பது கோவில் வழிபாட்டில் பட்டியலினத்திற்கு அனுமதி இல்லை போன்ற பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு வந்தது போன்ற தோற்றம் நிச்சயம் கேள்விக்குறியது. இன்றைய சமூக ஊடக பயன்பாட்டில் இது போன்ற விஷயங்களைக் குறித்தான ஒரு சிறு செய்தி போதும் அரசின் மற்றும் ஊடகத்துறையின் கவனத்தை ஈர்க்க ஆனால் அதை செய்வதற்கு கூட அங்குள்ள பட்டியல் இனத்தவருக்கு தெரியவில்லையா அல்லது இது குறித்த புரிதல் இல்லையா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் அரசியல் உள்ளதா?
உண்மையிலேயே தங்களுக்கான கொடுமையை வெளி உலகத்திற்கு எடுத்துச் செல்வதற்கு கூட தெரியாத ஒரு அறியாமையில் இருந்தால் அதுவும் இந்த நூறாண்டு கால திராவிட மாடலின் தோல்வியே.. இது போன்ற சூழ்நிலையில் திருமா போன்ற தலைவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தங்களது சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பெரியோர்களுக்கும் தான் பிறகே பொது சமுதாயத்தை நோக்கி அவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
கவர்னர் மீதான குற்றச்சாட்டு அர்த்தமில்லாதது. ஊடகங்கள் அனைத்துமே (90 சதம்) வேண்டுமென்றே திரித்து, ஆளும் கட்சி தரக்கூடிய பணத்துக்காக, தவறாக செய்திகளைப் பரப்புகின்றன. இதையேதான் அண்ணாமலை மீதும் இவை செய்தன. சிறிய விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி எப்பாடு பட்டாவது பாஜக, அண்ணாமலை, கவர்னர் என்று பாஜக சம்பந்தமான எல்லாவற்றின்மீதும் தவறான கருத்தைப் பரப்பவேண்டும், அப்படிச் செய்து திமுக அரசிடமிருந்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தே அவை இப்படிச் செயல்படுகின்றன.
யாராவது, கடந்த ஒரு வருடத்தில், அரசு விளம்பரங்களுக்காக ஒவ்வொரு ஊடகத்திற்கும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் வாங்கி வெளியிட்டால்தான் இவர்களது கோல்மால் தெரியும்.
தமிழகம், தமிழ்நாடு என்பதில் என்ன வித்தியாசம் வந்துவிட்டது? இவர்களே ‘தமிழகம்’ என்ற வார்த்தையைத்தானே உபயோகித்தனர். ‘ஒன்றியம்’ என்ற வார்த்தைப் பிரயோகம் திமுகவின் தேசப்பிரிவினை என்பதன் அஜெண்டா இல்லையா? அதனை ஊடகங்கள் எப்படி தாங்கிப்பிடித்தன. லஞ்சம் வாங்கிக்கொண்டு (வேலை செய்ய சம்பளத்திற்கு மேல் பணம் வாங்கினால் லஞ்சம். கவர் வாங்கும் இந்த பத்திரிகையாளர்கள் லஞ்சம் வாங்குவது ஆகாதா? தங்கள் வீச்சுக்கு அதிகமாக விளம்பர வருவாயை வாங்கிக்கொள்வது லஞ்சமாகாதா?) திமுகவை முழுமையாக ஆதரிக்கும் இந்த ஊடகங்கள், தந்தி தொலைக்காட்சி, இந்து பத்திரிகை உட்பட, சொல்வதற்கு எதற்கு மதிப்பு கொடுக்கவேண்டும்?