Well done Commissioner – Mr.Viswanath sajjanar …!!!


இது – சைபராபாத் போலீஸ் கமிஷனர் –
விஸ்வநாத் சஜ்ஜனர்….


இன்றைய சாதனை –

மருத்துவர் திஷா பாலியல் பலாத்காரம் செய்து
கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு கமிஷனர்
விஸ்வநாத் சஜ்ஜனர் அவர்களின் கீழ் வந்ததையடுத்து,
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளும்
இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முந்தைய சாதனை –

டிசம்பர் 12, 2008 அன்று, வாரங்கலில் –
இரண்டு எஞ்சினியரிங் பெண் மாணவிகள் மீது ஆசிட்
தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும்
என்கவுண்டரில் விஸ்வநாத் சஜ்ஜனரின் தலைமையிலான
காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

——————–

காரணம் –

காரணம் வேறு வேண்டுமா…
இரண்டு சம்பவங்களிலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்
போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர்…
எனவே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்….!!!

Justice delayed is Justice denied என்பது நமது அரசுகளுக்கோ,
அமைச்சர்களுக்கோ, நீதிமன்றங்களுக்கோ தெரியாதா என்ன…?

கடுமையான குற்றங்களைச் செய்வது –
இரண்டே மாதங்களில் ஜாமீனில் வெளிவந்து,
மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது.
இவர்களின் பின்னணியில், அரசியல்வாதிகள்,
எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள்…..அதிகாரிகள்.

கொலை, கற்பழிப்பு குற்றங்களில் தொடர்புடையவர்களை
ஜாமீனில் விட்டால் என்ன நடக்கும் என்பது நீதிமன்றங்களுக்கு
தெரியாதா என்ன…? அப்படியும் அவர்களுக்கு பெயில்
கொடுத்து வெளியே சுதந்திரமாகத் திரிய விடுவது
எந்த விதத்தில் நியாயம்…..?

சட்டத்தால் செய்ய முடியாததை,
நீதிமன்றங்கள் செய்யத் தவறுவதை –
மனசாட்சியும், தைரியமும்
உள்ள நேர்மையான அதிகாரிகளால்
செய்ய முடியும் என்பதை இன்று மீண்டுமொரு முறை
நிரூபித்துக் காட்டியுள்ள –

சைதராபாத் போலீஸ் கமிஷனர் விஸ்வநாத் சஜ்ஜர்
அவர்களுக்கும், அவரது டீமுக்கும் நமது உளமார்ந்த
வாழ்த்துகளும், பாராட்டுகளும் ….!!!

ஏற்கெனவே, அடிக்கடி பாத்ரூமில் வழுக்கி விழுந்து –
மாவுக்கட்டு போட்டுக்கொள்ளும் –
நம்ம ஊர் கிரிமினல்களுக்கும் இது ஒரு பாடமாக
இருக்கட்டும்… பயம் இருக்கட்டும்.

“கடுமையான தண்டனை” என்கிற பயம் ஒன்று மட்டுமே
இந்த கயவர்களை வழிக்கு கொண்டு வரும்….

மீண்டும் மீண்டும் –
-சட்டவழிமுறைகள்,
-வழக்கு,
-விசாரணை,
-ஜாமீன்,
அப்பீல் என்று வருடக்கணக்கான இழுத்தடித்துக்
கொண்டு போகும் வழக்குகளுக்கும் ஒரு முடிவு வரும்.

ஊரறிந்த, உறுதிப் படுத்தப்பட்ட – கிரிமினல்களுக்கு –
வழக்கு, விசாரணை, நீதிமன்றம் – எல்லாம் வேஸ்ட்…
Waste of time,
waste of money,
waste of energy

உடனடியான, நேரடியான தண்டனை
ஒன்று தான் இதற்கெல்லாம் சரிப்பட்டு வரும்.

உடனே ஒரு கும்பல் கிளம்பும்…
மனித நல உரிமை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொண்டு…

அவர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களது உரிமைகள் குறித்த –
கவலைகள், போராட்டங்கள் எல்லாம் –
மனிதர்கள் குறித்து தான் இருக்க வேண்டும்;

இதைப் போன்ற மிருகங்களைக் குறித்து அல்ல…

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to Well done Commissioner – Mr.Viswanath sajjanar …!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  நான் முழுமையாக உங்கள் நிலையை
  ஆதரிக்கிறேன். இந்த மாதிரி மிருகங்கள்
  இப்படித்தான் பன்றி மாதிரி விழுந்து சாக வேண்டும்.
  உடனடியான, கடுமையான தண்டனையும்,
  தண்டனை பற்றிய பயமும் மட்டும் தான்
  இத்தகைய குற்றச்செயல்களை
  கட்டுக்குள் கொண்டு வரும்.

 2. Subramanian சொல்கிறார்:

  Very nice article.
  I fully endorse your views.

 3. புதியவன் சொல்கிறார்:

  நான் காலையிலிருந்து இந்த இடுகையை எதிர்பார்த்தேன். நிறைய ‘சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள் வேஷத்தில்’ இதற்கு எதிர்வினை ஆற்றுவார்கள். சட்டம், நீதி, நேர்மை நியாயம் என்று சொல்லிக்கொண்டு, தங்களுக்கு வாகன லைசன்ஸ் எடுப்பதற்கு புரோக்கர் மூலமாகவும் மற்றும் எல்லா அரசு வேலைகளுக்கும் ப்ரோக்கர் மூலமாகவும், ரோடில் எந்தவித சட்டத்தையும் மதிக்காமலும் சென்றுகொண்டு, ‘மனித உரிமை’ என்று வருவார்கள். கபர்தார்.

  இந்த விஷயத்தில் மேனகா காந்தி, கனிமொழி போன்றவர்களின் ஸ்டேட்மெண்டை வெறுக்கிறேன். இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் வெட்கித் தலை குனியவேண்டும்.

  இடுகை நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகிறேன்.

  இந்த மாதிரி என்கவுண்டர்களை எல்லோரும் ஆதரிக்கணும். வெறும் மாவுக்கட்டு போதாது. 16-23 வயசு குற்றவாளிகளை உடனடியா சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தணும். சிறைச்சாலைக்கு அனுப்பினால் அது அவனை ப்ரொஃபஷனல் குற்றவாளியாக மாற்றும். இவனைப் பெற்றவர்கள், வெளியில் வந்து இந்த என்கவுண்டரை ஆதரிக்கணும். காரணம், இவர்களை மிருகங்களாக அவர்கள் வளர்த்த பாவத்திற்கு.

  பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு பெயில். பல கொலைகாரர்களுக்கு ஜாமீன் என்று நம் நீதிமன்றங்கள் சட்டப்படி தீர்ப்பு சொல்கின்றன. இங்கு நாம் அரபு முறை தண்டனையைப் பற்றித் தெரிந்துகொள்ளணும் (இஸ்லாமியர்களுக்கு அல்ல, அந்த அந்த நாட்டில் தற்காலிகமாக ரெசிடென்ஸ் பெர்மிட்டில் இருக்கும் எல்லாருக்கும்).
  1. ஒரு ஆக்சிடண்ட் நடந்து, அதனால் ஒருவனுக்கு காயமோ இல்லை மரணமோ நடந்தால், கேள்வி கேட்காமல் அவனைச் சிறையில் போடுவாங்க. மரணம் சம்பவித்தால், கடைசி வரை அவன் சிறையில்தான் இருக்கணும். அவனை யாராலும் விடுவிக்க முடியாது, செத்துப்போனவரின் ரத்த சம்பந்தத்தைத் தவிர.
  2. கற்பழிப்பு போன்ற குற்றங்களை நினைத்துப் பார்க்க முடியாது. (இருவர் சம்மதத்துடன் நடப்பவைகளைத் தவிர. நான் என்ன சொல்கிறேன் என்று புரியும் என நினைக்கிறேன்). பெண்களுக்கு தவறிழைப்பதை அரபிக்கள் வெறுக்கிறார்கள். மனைவியோட அரசு அலுவலகங்களுக்குச் செல்லும்போது அவங்க மிகுந்த மரியாதை தருவாங்க.
  3. சாலைச் சட்டங்களை முழுமையாக கடைபிடிக்கணும். இல்லையென்றால் ஹெவி ஃபைனுக்குத் தயாரா இருக்கணும். இவைகளில் சமரசமே கிடையாது.

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  உடனடியாக தண்டனை கிடைத்து விட்டது என
  தெலுங்கானா மக்கள் மகிழலாம் .
  இது தவறு என நான் நினைக்கிறேன் .

  Rule of Law என சொல்வார்கள் .
  அதாவது தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவார் .
  அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி .
  தண்டனை சட்டப்படி கொடுக்க வேண்டும் .
  தண்டனை உடனே தரப்பட வேண்டும் .

  போலீஸ் வேலை சுட்டு கொல்வதல்ல . .
  எத்தனை பேரை அது போல் சுட முடியும் ?
  போலீஸ் ” பணம் தருகிறாயா இல்லை
  என்கவுண்டர் பண்ணவா” என மிரட்டவும் செய்யலாம் .
  வேண்டாத ஆளை போட்டு தள்ள போலீசுக்கு
  பணம் கொடுத்து செட்டப்பும் நடக்கும் .

  ஏற்கனவே இதெல்லாம் நடக்கிறது – இதை மேலும்
  ஊக்குவிப்பது சரியில்லை .

  சரியான தீர்வு நீதிமன்றம் மூலம் உடனடியாக
  தண்டனை வாங்கி கொடுப்பதுதான் .

  சிங்கப்பூரில் அதுதான் நடக்கிறது .
  அரபு நாடுகளிலும் உடனே தண்டனை .
  அதனால்தான் அங்கே தப்பு செய்ய பயப்படுகிறார்கள் .

  • புதியவன் சொல்கிறார்:

   //தண்டனை உடனே தரப்பட வேண்டும் .// – யோசித்துச் சொல்லுங்கள். காமன்வெல்த் ஊழலுக்கு என்ன தண்டனை கிடைத்தது? 2 ஜி க்கு என்ன தண்டனை? ப.சி. மற்றும் அவர் மகன், கேடி பிரதர்ஸ் – எதிலாவது தண்டனை என்பது உண்டா? மானை அடித்துச் சாப்பிட்டவர், மும்பை பயங்கரவாதத்தின்போது ஆயுதங்களைப் பதுக்கிய சினி ஸ்டார், ரோடில் படுத்துக்கொண்டிருந்தவர்களை குடிபோதையில் கொலை செய்தவர்-வண்டியை ஓட்டி – இதுபோல பல ஆயிரம் சம்பவங்களை எழுதலாம். எங்கு நீதி கிடைத்திருக்கிறது? போலீஸ் என்கவுண்டரில் 100ல் 5 தவறாகலாம், இராணுவத்தில் நம் வீரர்கள் இறப்பதைப்போல. நம்முடைய இப்போதைய சட்டத்தில் லட்சம் குற்றவாளிகளைத் தப்பவிடுவோம், வேற வழியே இல்லை, எல்லாருக்கும் தெரிந்துவிட்டது என்றால் தண்டனை கொடுத்து உடனே ஜாமீன் கொடுப்போம் என்பது நீதியா? அமெரிக்காவில் பொருளாதாரக் குற்றத்திற்கு எப்படி தண்டனை கொடுக்கிறார்கள், இந்தியாவில் பொருளாதாரக் குற்றத்துக்கு எவ்வளவு பரிசுகள் அரசும் நீதிமன்றமும், பொதுமக்களும் கொடுக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டாமா மெய்ப்பொருள்? சிங்கப்பூரில், லைசன்ஸுக்கு லஞ்சம் வாங்குகிறார்களா? அரசு அதை ஊக்குவிக்கிறதா? ப்ராப்பர்டி வாங்க, விற்க லஞ்சம் வாங்குகிறார்களா? டாக்சி ஓட்டுபவர்கள் கஸ்டமரை 1 டாலர் ஏமாற்றிவிட முடியுமா?

   சிங்கப்பூரிலும் அரபு நாடுகளிலும் ‘சட்டம்’ இருக்கிறது. இங்கு சட்டம் யாருக்காக இருக்கிறது என்று பாருங்கள். நான் நெகடிவ் ஆக எழுதவில்லை. ஆனால் இந்தியாவில் இதுதான் நடைமுறை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   .

   மெய்ப்பொருள்,

   Rule of Law – அந்த law -வே அத்தனை
   ஓட்டைகளுக்கும் இடம் கொடுத்தால் –
   அந்த law – வை வைத்துக்கொண்டு என்ன
   செய்ய முடியும்….?

   கற்பழிப்பு குற்றவாளிக்கு,
   கொலை குற்றவாளிக்கு –
   இதே சட்டத்தில் – rule of law -வின் படி தானே
   ஜாமீன் கொடுக்கப்படுகிறது.

   அவன் வெளியே வந்தால் மீண்டும்
   பன்மடங்கு வேகத்துடன் குற்றம் செய்வான்
   என்று தெரிந்தும், rule of law -வின் படி,
   நீதிமன்றம் அவனுக்கு ஜாமீன் கொடுக்கிறதே….?
   ஏன்…?

   எந்த வழக்கிற்காவது, அதிக பட்சம்
   இத்தனை மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்
   என்று இங்கே சட்டம் இருக்கிறதா…?
   யாராவது அவற்றை உண்டுபண்ண வேண்டுமென்று
   யோசிக்கிறார்களா…?

   7 வருடங்களுக்கு முன் நடந்த டெல்லி நிர்பயா
   வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏன் இன்னமும்
   தண்டனை நிறைவேற்றப்படவில்லை…?

   கிரிமினல் குற்றங்களுக்கு ஏன் 3 முறை அப்பீல்
   செய்யும் முறை…? ஒரு அப்பீலை அனுமதித்தால்
   போதாதா…?

   முதலில் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை
   கண்டுபிடித்து அடைத்து விட்டு,

   பின்னர் அவற்றை நிறைவேற்றுவதில்
   இருக்கும் ஓட்டைகளை, தடங்கல்களை
   அகற்றி விட்டு,

   பின்னர் வாருங்கள் – மனிதர் நல உரிமைகளை
   அவசியம் எல்லாரும் சேர்ந்து காப்போம்…
   நானும் சேர்ந்து கொள்கிறேன்.

   அதுவரை –

   குற்றவாளி என்று உறுதியாக
   தெரிந்தால் சுட்டுக்கொல்லும் துணிச்சலை
   வரவேற்கவே, பாராட்டவே செய்ய வேண்டும்.
   நான் போலீஸ் கமிஷனராக இருந்தால் –
   என்னை எந்த தண்ணீர் இல்லாத காட்டிற்கு
   ட்ரான்ஸ்வர் செய்வதாக இருந்தாலும்
   கவலைப்படாமல், இதே கமிஷனர் செய்த
   காரியத்தைத்தான் செய்திருப்பேன்.

   நம்ம ஊரில், ஓட்டைகளை அடைக்க யாரும்
   முன்வர மாட்டார்கள்; உரிமைகளைப் பற்றி
   மட்டும் பேச வரிந்து கட்டிக் கொண்டு வந்து
   விடுவார்கள்.

   இப்படி மனித உரிமை என்று வக்காலத்து
   வாங்கிக்கொண்டு வருபவர்களைப் பார்த்து
   ஒன்று கேட்கிறேன்….

   “உங்கள் வீட்டு பெண்ணுக்கு –
   உங்கள் மனைவிக்கு, மகளுக்கு,
   தங்கைக்கு – இந்த மாதிரி கொடுமை
   நடந்தாலும், இதே போல் கற்பழிப்பாளனின்
   உரிமை பற்றி தான் பேசிக்கொண்டிருப்பீர்களா…?”

   .
   வாழ்த்துகளுடன்,
   – மனித மிருகங்களின் உரிமைபற்றி கவலைபடாத,
   மனசாட்சியை மட்டும் மதிக்கும் –
   -காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   அருணா ஷாண்பாக் கேஸ் படிச்சுப் பாருங்க. அதுல அந்த நர்ஸ், கோமால 42 வருடங்கள் இருந்து கஷ்டப்பட்டு பிறகு இறந்திருக்கிறார். ஆனா அவரைத் தாக்கி கற்பழித்த குற்றவாளிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை, பிறகு தன் வீட்டுக்குப் போய் சில வருடங்களில் இன்னொரு குழந்தையைப் பெற்று, பேரன், பேத்திகளோடு சுக வாழ்க்கை. இதுதான் நம்ம ஊர் நீதி.

   அரபு நாடாக இருந்தால், அவன் வெளியில் வரவே முடியாது, அருணா அவனை மன்னித்தால் ஒழிய (அது மனமார்ந்த மன்னிப்ப்பா இருக்கலாம், இல்லை நஷ்டஈடு-தான் நினைக்கும் பணம் வாங்கிக்கொண்டு மன்னிப்பதாகவும் இருக்கலாம். இதற்கு இரத்தப் பணம் என்று பெயர்)

 5. Karthik சொல்கிறார்:

  Ayya
  Police encounter may appear to be quick remedy but that is not judicious…
  In future police may kill some body out of prrsonal vendetta and call encounter.
  Let’s have a Law and execute them or
  Let’s punish such as
  1. tattoos on their faces as Rapist
  2. suicide courier for terror places
  3. cruel punishment

  sudden death may not create lesson for future wrongdoers.

 6. புவியரசு சொல்கிறார்:

  Karthik

  நீங்கள் சொல்கிற எதற்காவது தற்போதைய
  சட்டங்களில் இடம் இருக்கிறதா ?
  கற்பழிப்பை, கொலையை செய்து உள்ளே போய் விட்டு,
  இரண்டே மாதங்களில் ஜாமீனில் வெளிவருவதை
  உங்கள் யோசனை தடுக்கிறதா ?
  வழக்கில் தீர்ப்பு வருவதை வருடக்கணக்கில்
  இழுத்தடிப்பதை தடுக்க வழீ இருக்கிறதா ?

  • Karthik சொல்கிறார்:

   Thats a curse we are having now.
   We need to bring better laws especially on these issues ( Laws can be like GCC).

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Karthik

    நான் புவியரசு சொல்வதை ஏற்கிறேன்.

    அது தான் இங்கே நடக்காது.
    அரசாங்கத்திற்கு தெரியாதா… ?
    அரசியல்வாதிகளுக்கு தெரியாதா…?

    இது தான் முதல் தடவையா ?
    ஒவ்வொரு கற்பழிப்பு சம்பவம் நடக்கும்போதும்
    இதே தான் சொல்லப்படுகிறது.
    “கடுமையான சட்டங்கள் தேவை” என்று.

    வந்ததா ? ஏன் வரவில்லை …?
    யார் காரணம் ?
    கொண்டு வர மாட்டார்கள்.
    சம்பந்தப்படுவதே 4-ந்தர அரசியல்வாதிகளும்,
    அவர்களது அடியாட்களும் தானே.

    இதற்கு ஒரே வழி –
    மக்கள் கடுமையாக re-act செய்வது தான்.

    அதனால் தான் என் கவுண்டரை கொண்டாடுகிறோம்.
    அடுத்த கட்டத்தில் –
    இந்தியன் தாத்தாக்களும் உருவாவார்கள்.
    பொதுமக்களே இவர்களை தண்டிப்பார்கள்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 7. Giri Alathur சொல்கிறார்:

  கடந்த ஆண்டு டிசம்பரில் வல்லுறவுக்கு உள்ளான பெண் வழக்கின் விசாரணை நடந்து வரும் ரேபரேலி நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக நேற்று சென்று கொண்டிருந்தாா். நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் சிவம் த்ரிபாதி, சுபம் த்ரிபாதி உள்ளிட்ட ஐந்து போ் அந்தப் பெண்ணை வழிமறித்தனா். அவரைத் தாக்கினாா்கள். அவரை உயிருடன் தீ வைத்துக் கொளுத்தினா். உடலெல்லாம் பற்றி எரியும் தீயுடன் அந்தப் பெண் தெரு வழியாக ஓலமிட்டபடி அவா்களிடமிருந்து தப்பி ஓடியிருக்கிறாா். உ பி உன்னாவ் மாவட்டத்தில் நேற்று மிருகங்களால் தீக்கிரையாக்கப்பட்ட பெண் இரவு உயிர் இழந்தார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Giri Alathur,

   உத்திரப் பிரதேசத்தில் இது போல் நிறைய
   சம்பவங்கள் நடக்கின்றன. இந்த பொறுக்கிகள்,
   கொலைகாரர்கள் எல்லாரும் அங்கே இருக்கும்
   அரசியல்வாதிகளின் அடியாட்கள் தான்.
   எனவே, அரசியல்ரீதியான பாதுகாப்பு உண்டு.
   போலீஸ் கண்டுபிடிக்காது; கண்டுபிடித்தாலும்,
   மிகவும் பலவீனமாக வழக்கை பதிவு செய்வார்கள்.
   குற்றவாளிகள் வெகு சுலபமாக வெளிவந்து
   மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே இருப்பார்கள்.

   நீங்கள் சொல்லி இருக்கும் “உன்னாவ்” கற்பழிப்பு
   சம்பவத்தில் முதலில் 2 பேர் சம்பந்தப்பட்டிருந்தார்கள்.
   போலீஸ், ஒருவனை மட்டும் கைது செய்தது.
   மற்றொருவன் தலைமறைவாகி விட்டான் என்று
   போலீஸ் கடந்த 8 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தது.

   அந்த தலைமறைவு பொறுக்கி தான் இந்த பெண்ணை
   இன்னும் சிலருடன் சேர்ந்து கொண்டு இப்போது
   தீ வைத்து கொன்று விட்டான்…. சாட்சி உயிரோடு
   இருந்தாலே வழக்கில் தப்பித்து விடுவார்கள்…

   இனி ……………???

   பொதுவாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகள்
   உருவாக, நிலைக்க வேண்டுமென்றால், அந்த
   மாநில முதலமைச்சரின் ஆசியும் அதற்கு தேவை.

   அது தெலங்கானாவில் இருந்தது.
   ஆனால், உ.பி.யில், மொட்டை ஆட்சியில்
   அது இல்லை… ஏனென்றால், பெரும்பாலான
   குற்றவாளிகள் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் தான்.

   இங்கே அரசாங்க ஆதரவு இல்லாத நிலையில் –
   தனியே, மக்கள் ஆதரவுடன் ஒரு இந்தியன் தாத்தா –
   என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக உருவானால்
   தான் உண்டு.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  குற்றங்கள் தடுக்கப் பட வேண்டும் என்றால்
  உடனடியாக வழக்குகளில் தீர்ப்பு வழங்கப் பட வேண்டும் .

  இதற்கு உதாரணம் பீகார் . சட்டம் ஒழுங்கு மோசமாக
  இருந்த போது நிதிஷ் குமார் பொறுப்பு ஏற்றார் .
  பழைய கேஸ்கள் தூசி தட்டப்பட்டு கோர்ட்டில்
  தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டது

  நிலைமை முற்றிலும் மாறியது .

  உதாரணம் சொல்கிறேன் – தமிழ்நாட்டில் ஒரு 200
  DRO இருக்கலாம் ;ஒரு 1000 தாசில்தார் இருக்கலாம் .
  அரசு நிலம் , புறம்போக்கு நிலம் ஏன் பிரைவேட்
  நிலத்தைக் கூட அபகரிக்கிறார்கள் . இதற்கு துணை
  போன ஒரு இரண்டு அதிகாரிகளை தூக்கி உள்ளே வைத்தால்
  எல்லாம் சரியாக போகும் . யாரும் நிலம் அபகரிக்க விடமாட்டார்கள் .

  போலீஸும் திருந்தியே ஆக வேண்டும் . சட்டப்படி
  தண்டனை கிடைக்கும் என்றால் .மாறியே ஆக வேண்டும் .

  உளுத்துப் போன கோர்ட் ஆட்சியாளர்களுக்கு ஒரு சாதகம் .
  தண்டனை இல்லை என்றால் எது வேண்டுமானாலும்
  செய்யலாம் .

  கோர்ட் மாற வேண்டும் – இது ஒன்றுதான் தீர்வு .

 9. Mani balan சொல்கிறார்:

  Why I am not celebrating Telungana Encounter…

  I am sad and outraged on all the cases before – nirbhaya, kathua, unnao 1, unnao 2, polachi, and many more.

  By projecting the police action in telungana case alone as justice, we put a magical cherry on the top of huge pile of shit of other cases.
  And we celebrate that cherry forgetting the huge shit still there.

  The same police that we celebrate didn’t register FIR, didn’t act on time, and threatened the victims instead of criminals. One right act in that context (telungana police knew these criminals were proven beyond doubt and shot them) doesn’t correct the hundred wrongs acts before.

  If we still think justice is done, then we approve the cinema acts from our administration, police, politicians, etc – committing 99 wrong things and play a vigilante heroism at hundredth instance.

  Who lost jobs or penalized for the 99 wrong things the police and politicians did in previous cases? Then why should i celebrate the tiny cherry while I still stand amidst the shit?

  It is ridiculously gullible to think that criminals would change when they know the math that – 99 times they can get away and one time, maybe one time, maybe victim knows what happened – not a child, maybe victim came forward, maybe their family support, maybe the criminal is not with a party that saves criminals, maybe police registers FIR, maybe when they are caught, maybe so-called media gives airtime, maybe there is public outrage, maybe the victim is not on bail, maybe state government gives green signal, maybe there is a courageous police, then they may be punished.

  That is one BIG maybe chance compared to 99 chances of getting away. That math is absolutely favourable to criminals. Then, tell me why should I feel happy about the tiny cherry?

  Shit is abound. Wake up. Don’t play to the script of this government and media. They will move the debate to jarkand and karnataka elections, nithy island, onion price, nrc debate, cricket scores, rajini movie, etc, just in days. Because they know we can live with anything and move on.

  That’s why I am depressingly sad and outraged.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மணிபாலன்,

   உங்கள் அணுகுமுறையை நான் ஏற்கவில்லை.
   தெலங்கானா என்கவுண்டரை பாராட்டுவது,
   மற்ற குற்றங்களை, தவறுகளை, செயலற்றதன்மையை –
   எல்லாம் மறந்து விடுகிறோம் என்று
   அர்த்தமாகி விடாது.

   மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதையே
   தெலங்கானா ஷூட்டிங்’ கின் வரவேற்புகள்
   வெளிப்படுத்துகின்றன….

   அரசாங்கமும், காவல்துறையும், நீதித்துறையும் எப்படிச்
   செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படத் தவறினால் –

   மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்கள்
   என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையாகவே
   நான் இதை எடுத்துக் கொள்கிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   மணிபாலன் …. உங்க கருத்துக்கள் சிந்திக்கத் தூண்டுபவையாக இருக்கு. ஆனால் இந்தச் சம்பவத்தோடு அவற்றை முடிச்சுப்போட இயலாது.
   1. இந்தியாவில் எத்தனை கிரிமினல்களுக்கு/மக்கள் தொகைக்கு எத்தனை போலீசார் இருக்கிறார்கள், அவர்களில் எத்தனைபேர் நேர்மையான தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதையும் நாம் கணக்கில் எடுக்கணும்.
   2. மக்கள் மத்தியில் போலீஸின் இமேஜ் குறைவதற்கு, திரைப்படங்கள் எவ்வளவு உதவி செய்திருக்கின்றன என்பதையும் நினைக்கணும்.
   3. இந்த விஷயத்திலாவது ஸ்விஃப்டா முடிவெடுத்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்படணும்.

   நீங்க சொல்லும் வாதத்தின்படி, 5% கடத்தல்கூட விமான நிலையங்களில் பிடிக்கப்படுவதில்லை. அதற்காக, கடத்தலைப் பிடிக்கும்போது மனம் மகிழக்கூடாது, பிடித்த ஆபீஸரைப் பாராட்டக்கூடாது என்று சொல்ல முடியுமா?

   இந்த நாலு பேரையும் ‘கசாப்’ போல உட்கார்த்தி வைத்து, அவங்க செய்த குற்றம், அதற்குச் சாட்சி என்று எல்லாவற்றையும் தயார் செய்தால் என்ன நடக்கும் என்று நினைக்கறீங்க? கீழ்க்கோர்ட்டில், இரட்டை ஆயுள் தண்டனை என்பார்கள், மேல் கோர்ட்டில் அது ஆயுள் தண்டனை எனக் குறைக்கப்படும். இதற்கிடையில் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கும். இவங்க குற்றம் செய்தவர்கள் இல்லை, அந்தப் பெண்ணே தன்னை எரித்துக்கொண்டாள் என்று சில பத்திரிகையில் எழுதுவாங்க, அப்புறம் பெண்ணின் சாதி, அதற்கு எதிரான சாதி என்று கட்சி பிரித்துக்கொண்டு, குற்றம் நடக்கவில்லை, குற்றத்துக்கு அந்தப் பெண் காரணம், குற்றம் செய்தவர்கள் வேறு எவரோ, இழி சாதி என்பதால் இவர்கள் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்துகிறார்கள் என்று தொலைக்காட்சிகளில் விவாதம், வாதம் நடக்கும். தங்கள் கட்சிக் கொள்கைக்கேற்றவாறு, குற்றவாளிகளை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கும் நிலையை எடுக்கும். (உதாரணத்துக்கு ஒரு அரசியல் கட்சியை எடுத்துக்கொண்டுள்ளேன். மதுரை லீலாவதி வழக்கு நினைவுக்கு வந்ததால்). இதற்கிடையில் 6 வருடங்கள் உருண்டோடியிருக்கும். அப்புறம் அந்தக் குற்றவாளிகள் என்ன ஆனார்கள் என்பதே யாருக்கும் தெரியாது. பத்து வருடங்கள் கழித்து அவங்க குற்றத்தின் தலைவர்களாகியிருப்பாங்க, இல்லை கட்சியில் சேர்ந்து பெரிய ஆளாகியிருப்பார்கள். இப்படி நடந்தால்தான் நீதி கிடைத்தது என்று அர்த்தமாகுமா?

 10. R.Gopalakrishnan சொல்கிறார்:

  This police officer should be honoured with the highest civilian award (not Padma bhushan or vibushan) during coming Republic day 2020.

 11. tamilmani சொல்கிறார்:

  Shoot them like pigs before the sunrise, in the same place where these predators committed that
  heinous crime seems to be the order given by the bold Mr Sajjanar. Yes Justice delayed is justice denied. Human rights are for humans only, not to these bloody criminals. Take the case of
  Nirbhaya which is dragging on and on and the offenders have become more fleshy by the
  jail food they eat and consider the expenditure incurred for them. They should have been
  hanged long back. The real fast track justice, in India is eliminate them as early as possible.

 12. Gowri Gowrishankar சொல்கிறார்:

  “குற்றவாளி என்று உறுதியாக தெரிந்தால்” – very good point! HOWEVER, was this established? Doesn’t the phrase “innocent until proven guilty” applicable in this land? Apparently, the police were dragging their feet when the victim’s family complained about her disappearance, then all of a sudden “the arrests”, “the shooting”… It doesn’t hold water!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.