பாஜக-வுக்கு மெஜாரிடி கிடைக்காது என்று பாஜக தலைவர் ராம் மாதவ் பேட்டி…!!!


முதல் முறையாக, பாஜகவின் சீனியர் தலைவர் ஒருவர்,
கட்சியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான –
திரு.ராம் மாதவ், 2019 பாராளுமன்ற தேர்தல்களில்
பாஜகவுக்கு தனிப்பட மெஜாரிடி கிடைக்காது என்றும்,
ஆனால், கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க
முடியும் என்றும் bloomberg தொலைக்காட்சிக்கு அளித்த
பேட்டியில் கூறி இருக்கிறார்.

மோடிஜி, அமீத்ஜீ, ராஜ்நாத்ஜீ, அருண்ஜீ முதற்கொண்டு
அனைத்து தலைவர்களும், கடந்த முறையை விட அதிகமாக
– 300 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று
சொல்லி வரும் நிலையில், 4-ம் கட்ட வாக்குப்பதிவு
முடிந்த பிறகு ராம் மாதவ் முதல்முறையாக
கூட்டணி தயவில் தான் பாஜக ஆட்சியமைக்க முடியும்
என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்….

ராம் மாதவ்’ – ன் பேட்டி விவரம் கீழே –

Lok Sabha elections 2019: BJP may need allies for majority,
Ram Madhav tells Bloomberg –

Updated : May 06, 2019 10:49 AM IST

Ram Madhav’s forecast is far below the prediction of senior BJP
leaders, including finance minister Arun Jaitley and the party
president Amit Shah.

The BJP will make up for any expected loss of seats in the northern
states by gains in Odisha, West Bengal, and the Northeastern states,
Madhav said.

543 எம்.பி.க்களை உடைய –
பாராளுமன்றத்தில் குறைந்த பட்ச மெஜாரிடி = 272

தற்போதைய லோக் சபாவில் பாஜகவின்
தனிப்பட்ட எண்ணிக்கை/பலம் – 269

வட மாநிலங்களில் பாஜக தற்போதைய எண்ணிக்கையில்
75 சீட்டுகளை இழக்கக்கூடும் என்று சர்வேக்கள் தெரிவிக்கின்றன.

இந்த இழப்புகளை ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு
மாநிலங்களில் கிடைக்கக்கூடிய புதிய பலத்தின் மூலம்
சரி செய்ய முடியும் என்று ராம் மாதவ் நம்புகிறார்…

ஆனால், இந்த 3 மாநிலங்களில் கிடைக்கக்கூடிய புதிய பலம்,
ஏற்படக்கூடிய இழப்பை சரி செய்யக்கூடிய அளவிற்கு இருக்காது
என்பதையும் அவரே உணர்கிறார்…

அதனால் தான் கூட்டணிக் கட்சிகளுடன்,
மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும்
என்று பேட்டியில் தெரிவித்திருக்கிறார்…

என்ன நடக்கும்…?

Fir Ek Bar Modi Sarkar …!!!
(மீண்டும் ஒரு முறை மோடியின் அரசு)
-என்கிற பாஜகவின் கோஷம் பலிக்குமா….????

மோடிஜியின் பொற்காலம் தொடருமா…?

.
——————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to பாஜக-வுக்கு மெஜாரிடி கிடைக்காது என்று பாஜக தலைவர் ராம் மாதவ் பேட்டி…!!!

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    ஐயா,

    ///மோடிஜியின் பொற்காலம் தொடருமா…?///

    உங்களுக்கு வந்திருக்கும் கவலை தான்,

    சென்ற சனிக்கிழமை மின்னம்பலத்தில் வெளியான,

    சமூகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான மையம் (CSEPR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 206 தொகுதிகளில் தான் வெல்ல வாய்ப்புள்ளது என்று வந்துள்ளது கண்டு,

    எனக்கும் வந்தது.

    அப்ப நல்ல காலம் (achhe din) இறைவன் புண்ணயத்தில் வந்து விடும் என்று நம்புவோம் ஐயா.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      அறிவழகு,

      “அவர்களோ” நல்ல காலத்தை கொண்டு
      வந்து விட்டோம் என்கிறார்கள்.
      நீங்கள் என்னவென்றால், அவர்கள் போனால் தான்
      “நல்ல காலம்” என்கிறீர்களே…. 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

        போதும் ஐயா…போதும்….

        இவர்கள் கொண்டு வந்த நல்ல காலம்…..!

        யாருக்கு என்பது தான்….இங்கு கேள்வி…!

        பாஜக ஆதரவாளர்களே ஒத்துக் கொள்கிறார்களே இந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த அவலங்களை….

        இறைவா காப்பாற்று.

        • Raj's avatar Raj சொல்கிறார்:

          உண்மையில் தமிழர்களுக்கும் நல்ல காலம் தான்
          காங்கிரஸ் காலத்தில் 1000 தமிழக மீனவர்கள் கொலை செய்ய பட்டார்கள்
          மோடி ஆட்சியில் நடந்திச்சா ?

          இஸ்லாமியர்கள் இந்திய எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது

        • sekarsgz's avatar sekarsgz சொல்கிறார்:

          அமித் ஷா அவர்கள் 300 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று அதை ஏன் நீ பதிவு செய்யவில்லை நீ எல்லாம் ஒரு நடுநிலையலாம் என சொல்கிறாய் …த்து ….

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பாஜக நாடாளுமன்ற சீட்கள் 200களில்தான் இருக்கும் என்று நானும் நினைக்கிறேன். (ஆனாலும் வாக்கு சதவிகிதம் குறையாது என நம்புகிறேன். ஒருவேளை கூடலாம்). சென்ற 2014ல் கடுமையான திமுக+காங்கிரஸ் எதிர்ப்பலை மற்றும் மோடி அவர்களின் முகம் (குஜராத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர், தொடர்ந்து 3 முறை முதல்வர் என்ற பிரச்சாரம்) காரணமாக பெரிய வெற்றி பெற்றார்கள். ஆனால் நேரடியான பலனை பாஜக மக்களுக்குத் தரவில்லை என்றே நான் நினைக்கிறேன். வேறு தகுந்த தேசியக் கட்சி இல்லாத நிலையில், இது எந்த மாதிரி விளைவை இந்தியாவுக்குக் கொடுக்கப்போகிறது என்று பார்க்கவேண்டும். டெலிவர் செய்யாவிட்டாலும் செய்யக்கூடிய தகுதிவாய்ந்தது என்றே பாஜகவை நான் நினைக்கிறேன். நாட்டைச் சுரண்டும் காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு வந்தால், நாடு அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கமுடியாது. சொல்லமுடியாது…. மாயாவதி அவர்கள் பிரதமர் ஆகலாம். தமிழகத்தில் 35-40 சீட்டுகள் திமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என நினைக்கிறேன்.

    வாக்களித்தவர்கள் அதற்கான விளைவை அனுபவிக்கவேண்டியதுதான்.

    • Ramnath's avatar Ramnath சொல்கிறார்:

      புதியவன் // டெலிவர் செய்யாவிட்டாலும் செய்யக்கூடிய தகுதிவாய்ந்தது என்றே பாஜகவை நான் நினைக்கிறேன். //

      ஆஹா… அதான் நிறைய “டெலிவர்” செய்திருக்கிறார்களே.
      வெறுப்பை, வேதனையை, துவேஷத்தை,
      சாதி/மத மோதல்களை, மொழி வெறீயை, இன வெறீயை,
      கள்ளப் பணக்காரர்களை, மத வெறியர்களை,
      இன்னுமென்ன எதிர்பார்க்கிறீர்கள் இவர்களிடம் ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      நண்பர் செல்வராஜன் குறிப்பிட்டிருக்கும் இடுகையின் பின்னூட்டத்தில்
      நீங்கள் சொல்லி இருப்பது இது –

      //சொன்னவர் யாரென்று சொல்லாமல் விட்டது நல்லதுதான். பொதுவா சொல்லப்படும் செய்தியைவிட சொன்னது யார், அவர் சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதிலேயே மனது சென்றுவிடும். சொல்லும் பொருளில் மனது ஒன்றாது. (ஏனென்றால், அட்வைஸ் அள்ளித் தெளிப்பது மிக சுலபம்).

      இடுகையைக் காலையிலேயே படித்தேன். மீண்டும் படித்தேன். சொன்னவை உண்மையானவை. எந்தப் பாயிண்டையும் மறுத்து நேருக்கு நேராகப் பேசமுடியாது. அனைத்திலும் உண்மை பொதிந்திருக்கிறது. இந்தப் பாயிண்டுகள் நெஞ்சில் கலக்கத்தை உண்டாக்கத் தவறவில்லை. காரணம், எந்த தேவதூதன் வந்து நம் சமூக, அரசியலில் படிந்துவிட்ட 90% சகதியை அகற்றப் போகிறாரோ என்ற கலக்கம் வருகிறது. மோடி அவர்களின் மீது இருந்த நம்பிக்கை தளர்கிறது.

      நமக்கு கண்ணாடிபோல் உண்மையை எடுத்துரைக்க, 10 பேராவது இருக்கவேண்டாமா, அவர்களைத் தக்க பதவியில் உட்காரவைக்கவேண்டாமா என்று மோடி ஏன் நினைக்கவில்லை என்று தோன்றுகிறது. கிச்சன் கேபினட்டில் ஜெட்லி போன்ற மலைமுழுங்கிகள் இருப்பதால் இந்தியாவுக்கு என்ன நன்மை? இந்த விஷயத்தில் சு.சுவாமி எவ்வளவோ பரவாயில்லை. கட்டுச் சோற்றுக்குள் இருந்துகொண்டே தவறுகளை வெளிப்படையாகச் சொல்வது (சொந்த லாபம் கருதி என்றாலும்) நல்லது அல்லவா?

      வேஷதாரிகளே ஒட்டிக்கொண்டிருப்பது (அதிதீவிர இந்து எதிர்ப்பாளர்கள், இப்போது ஆதரவாளர்கள்) சமூகத்தின் நலனுக்கு எவ்வளவு கேடு.

      அதுமட்டுமல்லாமல், ஒருவரையே ப்ரொஜெக்ட் செய்வதும் ஆபத்தான போக்குதான். இந்தியாவில் ஒருவர் மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. அவரைச் சுற்றி நிறைய நல்லவர்கள்/வல்லவர்கள் தேவை. பிரதமர், தன்னை மட்டும் ப்ரொஜெக்ட் செய்துகொள்வதும், கூட இருக்கும் புல்லுருவிகள் அதனையே செய்வதும் பிரதமருக்கும் நல்லதல்ல, கட்சிக்கும் இந்தியாவுக்கு நல்லதல்ல. //

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        @ காமை சார்… You are right. ஒற்றைத் தலைமை என்பது ரொம்ப ரிஸ்க்தான். ரொம்ப நல்லவராக இருந்துவிட்டால் இந்தியாவுக்கு நல்லது. மோசமானவராக இருந்துவிட்டால் கஷ்டம் அதிகபட்சம் 5 வருடங்கள்தான். நல்லவர் முகமூடி அணிந்து மோசமானவராக இருந்தால் ரொம்ப ஆபத்துதான். மோடியைப் பற்றி இன்னும் என் அபிப்ராயம் ரொம்ப குறிப்பிடத்தக்க அளவில் மாறலை. இருந்தாலும் ‘நல்லவர்கள்’ மோடியைச் சுற்றி இல்லை (அதாவது மோடி அவர்கள் நல்லவர்களை தன்னைச் சுற்றி வைக்கலைன்னும் சொல்லலாம்) என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதைச் ‘சொன்னதுபோல் செய்தார்’ என்று சொல்லும்படி 5 வருடங்களில் ஒன்றும் செய்யவில்லை. தேர்தல் பரப்புரையிலும் ‘பதவிக்கேற்ற பேச்சைக்’ காண இயலவில்லை என்பது வருத்தம்தான் (இதெல்லாம் கேட்கும்போது அவர்மீதான மதிப்பு இறங்கத்தான் செய்யும்)

        @ராம்னாத் – //வெறுப்பை, வேதனையை, துவேஷத்தை,/சாதி/மத மோதல்களை, மொழி வெறீயை, இன வெறீயை,
        கள்ளப் பணக்காரர்களை, மத வெறியர்களை,// – *நீங்கள் திமுகவைப் பற்றி எழுதியிருக்கிறீர்களோ என்று நினைத்தேன்.* கருணாநிதி 60களில் இருந்து இதனை ஆரம்பித்துவைத்தவரல்லவா? திமுக இன்னும் அதனைத் தொடர்ந்துகொண்டிருக்கிறதே….

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // மோடிஜியின் அரசாட்சி எப்படி …? ஒரு மூன்றாவது நபரின் பாரபட்சமற்ற பார்வை…..!!! // …. என்று 2018 அக்டோபர் 2 — மற்றும் 3 -ம் தேதிகளில் வந்த இரண்டு தொடர் இடுகைகள் — நன்றாகவே ஒப்பீடு செய்து …

    // எங்கே செல்கிறது இந்த மாபெரும் வரிவசூல் செல்வம்? வரிகட்டும் எனக்கு அதிலிருந்து ஒரு பைசாகூடத் தரப்படாது என்றால் அதைப் பெற்றுக்கொள்பவர் எவர்? ஊழலைச் சட்டபூர்வமாகச் செய்யும் வழிகள் கண்டடையப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.

    இந்திரா காந்தியாவது சில நலத்திட்டங்களைச் செய்ய முயன்றார். ஆனால் மோடி அரசு பசப்புச் சொற்கள், பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது. எளிய அளவில்கூட ஒரு நலம்நாடும் திட்டம் கிடையாது. வளர்ச்சித்திட்டங்கள் எவையுமில்லை, எளிய கவற்சித்திட்டங்கள் கூட இல்லை.

    சொல்லப்போனால் இங்கே மக்கள் என ஒரு திரள் இருப்பதையே இவர்கள் அறியவில்லை எனத் தோன்றுகிறது. இந்த நம்பிக்கை மிக ஆபத்தானது. மேலும் மேலும் கொள்ளையிடுவதற்கான அனுமதியை இந்தியச் சமூகம் அளிப்பதாகவே இவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதன்பொருட்டேனும் இவர்கள் அகன்றாகவேண்டும் .வேறு வழியே இல்லை. இதுவே என் அரசியல்.// … // மோடிஜியின் ” பொற்காலம் ” தொடருமா…? // …??

  4. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    நானும் இதையே எதிர்பார்க்கிறேன். பெரும்பான்மை இல்லாத முதுகெலும்புள்ள அரசு, மற்றவர்களுக்கு பதில் சொல்லும் நிலையில் இருக்கும். அடி பணியும் நிலையில் இருக்கக் கூடாது.

    பிஜேபி பெரும்பான்மை இல்லாமல் மற்றவர் ஆதரவுடன் அரசு அமைக்கும் என்றே நினைக்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      bandhu,

      பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாத (சுய மெஜாரிடி பலம் இல்லாத)
      கூட்டணி அரசுக்கு, மோடிஜி தலைமை தாங்குவதை அதன்(புதிய) கூட்டணி கட்சிகள்
      ஏற்குமா…?
      முக்கியமாக – சிவசேனா…?

      மோடிஜி இல்லாத பாஜக அரசு உங்களுக்கு ஓகேயா….?

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • bandhu's avatar bandhu சொல்கிறார்:

        எனக்கு ஒகே. இன்னொருவர், வாஜ்பாய் போல, மோடி போல, பிஜேபி யிலிருந்து வரமாட்டார்களா என்ன?

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // நமக்கு கண்ணாடிபோல் உண்மையை எடுத்துரைக்க, 10 பேராவது இருக்கவேண்டாமா, அவர்களைத் தக்க பதவியில் உட்காரவைக்கவேண்டாமா என்று மோடி ஏன் நினைக்கவில்லை என்று தோன்றுகிறது. கிச்சன் கேபினட்டில் ஜெட்லி போன்ற மலைமுழுங்கிகள் இருப்பதால் இந்தியாவுக்கு என்ன நன்மை? // …என்பதற்கு …

    // மோடி எடுத்த முடிவா இது ….?
    Posted on மே 22, 2014 by vimarisanam – kavirimainthan // ….
    என்கிற இடுகையின் ஆரம்ப வரிகள்
    // நரேந்திர மோடி இன்னும் பிரதமர் பொறுப்பை ஏற்கவில்லை.
    – காத்திருக்கும் பிரதமர் அவர் ( He is Prime Minister -in waiting.)

    இந்த நிலையில், கட்சியின் சார்பாகவும், அரசின் சார்பாகவும் –
    மோடியின் தரப்பில், பெரும்பாலான விஷயங்களை கோர் க்ரூப்
    (core group) என்று சொல்லப்படும் மூத்த பாஜக தலைவர்களான
    அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் ஆகியோரைக்
    கொண்ட ஒரு குழு கவனித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.// மேலே உள்ள கிச்சன் கேபினட்டிற்கும் — இந்த கோர் க்ரூப் என்பதற்கும் தற்போது வரை ஏதாவது தொடர்பு இருக்கிறதா ..?

  6. Raj's avatar Raj சொல்கிறார்:

    உண்மையில் தமிழர்களுக்கும் நல்ல காலம் தான்
    காங்கிரஸ் காலத்தில் 1000 தமிழக மீனவர்கள் கொலை செய்ய பட்டார்கள்
    மோடி ஆட்சியில் நடந்திச்சா ?

    சிறு பான்மை கும்பல் இந்திய எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.