…
…

…
கடற்கரையில் தந்தையை அடக்கம் செய்வது தான் தனது
லட்சியமாக இருந்தது என்றும், ” அவரது ஆசையை நிறைவேற்ற
முடியாதிருந்தால் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் ”
என்றும் திரு.ஸ்டாலின், சூலூரில் பேசி இருக்கிறார்.
திமுக வுக்கு இது ஒன்று தானா லட்சியம்…???
அதனால் தானே – இந்த லட்சியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால் –
உயிருடன் இருந்திருக்க மாட்டேனென்று சொல்லி இருக்கிறார்…!!!
தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய –
பாராட்டப்பட வேண்டியதொரு உயர்ந்த, உன்னத லட்சியம்…!!!
——————————————————-
திருவள்ளுவர் – “மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்”
பொழிப்புரை (டாக்டர் மு வரதராஜன்… ):
மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு,
`இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’
என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்..
—————————————————————-
திரு.ஸ்டாலின் அவர்களது நேற்றைய தேர்தல் பரப்புரை – சூலூரில்…
சூலூர்: மெரினாவில் இடம் வேண்டும் என்ற தந்தையின் ஆசை
நிறைவேறாதிருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்
என ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார்.
சூலூர் பேருந்து நிலையம் முன்பாக, சூலூர் தொகுதி
இடைதேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர்
பழனிச்சாமிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின்,
நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.
அவர் பேசியதிலிருந்து கொஞ்சம் –
சீரியல் பார்க்காமல் தியாகம் செய்துவிட்டு என்னைப் பார்க்க
மக்கள் வந்துள்ளீர்கள். டி.வியில் பார்த்தால்
ஓரளவு நல்லா இருக்காரே ( அப்படியா தாய்மார்களே… ???? ),
நேராக பார்த்தால் எப்படி இருப்பார் என
பார்க்க வந்திருக்கிறீர்கள்….( 🙂 🙂 )
வீடுகளில் 300 ரூபாய் கேபிள் கட்டணம் வசூல்
செய்யப்படுகின்றது, திமுக ஆட்சிக்கு வந்தால்
கேபிள் கட்டணம் 100 -ஆக குறைக்கப்படும்… ???
(இதற்கு – நிதிக்குழுவின் (தயா, கலா –
நிதிக்களின் குழு … 🙂 🙂 )
ஒப்புதல் பெறப்பட்டு விட்டதா…? )
( தளபதி, தமிழக முதலமைச்சராக அல்ல –
TRAI- cHAIRMAN – ஆக வந்தால் கூட ,
இது சாத்தியப்படாது…!!! )
தீரன் சின்னமலையின் தளபதியாக இருந்த அருந்ததி
சமூகத்தைச் சேர்ந்த பொல்லானுக்கு சிலை வைக்கப்படும்.
மணி மண்டபம் கட்டப்படும்.
( அடுத்து, அந்த பொல்லானின் தளபதியாக இருந்தவர்
எந்த சமூகமோ…? அவரது தொகுதிக்கு செல்லும்போது
ஞாபகமாக, அதை கவனித்து உறுதிமொழி தந்தாக வேண்டும்….!!! )
கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில்
இடம் கொடுக்க இந்த ஆட்சியாளர்கள் மறுத்தார்கள்.
நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று கருணாநிதிக்கு
நினைவிடம் அமைத்தோம். அண்ணாவின் அருகில்
கருணாநிதியை அடக்கம் செய்ய வேண்டும் என்ற அவரது
கடைசி ஆசை நிறைவேறாமல் இருந்திருந்தால்
நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.
—————————-
( பின் குறிப்பு – கலைஞரையும், அவரது மகனையும்
ஒப்பிட்டு பார்க்கவே முடியவில்லை…
பேச்சுத் திறமையில், குரலின் வசீகரத்தில், மக்களைக் கவர்வதில்,
புத்திசாலித்தனத்தில், அரசியல் வியூகங்களில்,
தோழமை கட்சிகளை அரவணைத்து-வளைத்துச்
செல்லும் சாதுரியத்தில் … எதிலுமே…! )
ஏன் இப்படி….??? )
.
———————————————————————————————————————–



//கடற்கரையில் தந்தையை புதைப்பது தான் தனது லட்சியமாக இருந்தது// – இடுகையை சரியா ஆரம்பிக்கலையா கா.மை சார்? எனக்கு இந்த முதல் வரியைப் படித்தவுடனேயே, ‘இந்த லட்சியம் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அட்மிட் பண்ணின பிறகா அல்லது அதற்கு முன்னாலேயேவா ஸ்டாலினுக்கு வந்தது என்ற கேள்விதான். சர்காஸ்டிக்கா இருந்தாலும், இடுகை ஆரம்ப வரிகள் கொஞ்சம் கலவரமாத்தான் இருக்கு.
புதியவன்,
நான் கவனக்குறைவாக இருந்து விட்டேன்.
அந்த வார்த்தை அங்கே வந்திருக்கக்கூடாது.
இப்போது மாற்றி விட்டேன்.
நினைவுபடுத்தியதற்காக உங்களுக்கு
என் நன்றிகள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//செல்லும் சாதுரியத்தில் … எதிலுமே…! // – சார்….. ஆலமரத்தின் கீழ் எந்த செடியும் வளராது. இது இயற்கை. இதனை மீறி நடப்பது அபூர்வம், ராஜராஜ சோழனின் மகன், தந்தை அளவு அல்லது அதையும் மிஞ்சி சாதனை புரிந்த மாதிரி அபூர்வமாத்தான் நடக்கும்.
தந்தையைப்போல் ஆழ்ந்து படித்தவரில்லை. இயற்கையான திறமை இல்லை. சாமர்த்தியம், அரசியல் சூழ்ச்சி, ஒரு செய்தி எந்த மாதிரி விளைவை பிறகு ஏற்படுத்தும் என்று உடனுக்குடன் புரிந்துகொண்டு செயலாற்றுவது, பிரச்சனையான செய்தி வெளியானால் உடனுக்குடன் அதனை திசை திருப்புவது என்று பலவித திறமைகள் கருணாநிதிக்கு உண்டு. அதில் எதுவுமே ஸ்டாலினுக்குக் கிடையாது. சொந்தத் திறமை வேண்டும். எம்ஜிஆர் தலைமை தாங்கிய அதிமுகவை எம்.ஜி.ஆரிடம் இருந்த நெருக்கத்தால் கைப்பற்றினாலும், சொந்தத் திறமை இருந்ததால்தான், எம்ஜிஆரின் காலத்தைவிட, அதிமுகவின் புகழை இன்னும் பரவச் செய்ய ஜெ.ஆல் முடிந்தது. அது சொந்தத் திறமை. அதனை ஸ்டாலினிடம் எதிர்பார்க்க முடியாது.
ஆக, இன்று எடப்பாடியின் தயவால் உயிர் வாழ்கிறார் ஸ்டாலின்.
சரிதானே ஐயா!!
(உங்களின் பின்குறிப்புக்கான உதாரணம்)
அஜீஸ்,
என்னுடைய கருத்து –
தற்போது நடக்கும் ஆட்சி(களின்…?) மீதுள்ள வெறுப்பு – திமுக வுக்கான
ஆதரவாக உருவெடுத்திருக்கிறது.
திமுக என்னும்போது, அது இயற்கையாகவே
அதன் தலைவரான திரு.ஸ்டாலினுக்கான ஆதரவாக மாறுகிறது.
ஸ்டாலினுக்கு தற்போது கிடைக்கும் ஆதரவு,
அவருக்காக, அவரது தனிப்பட்ட தகுதி, குணாதிசயங்களுக்காக
உருவானது அல்ல என்றே நான் கருதுகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
// ஸ்டாலின் நாட்டின் ஜனாதிபதியாக வருவார்: அதற்கான தகுதி அவருக்கு உள்ளது.. அடித்து சொல்லும் துரைமுருகன்! //
Read more at: https://tamil.oneindia.com/news/tuticorin/dmk-leader-stalin-is-eligible-to-become-president-of-the-country-duraimurugan-349307.html
.
சும்மா கண்ணீர் சிந்தி — பரிதாபம் ஏற்படும் என்று // நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்- // என்றெல்லாம் பாவ்லா காட்டுவது ஓட்டை பெறவும் — பதவிக்காகவும் என்பது எல்லோருக்கும் தெரியும் …!!
ஜெயாவுக்கு நினைவிடம் அமைக்க மெரினாவில் இடம் கொடுக்க கூடாது என்று வழக்கு போட்டது திமுக — கூடவே பாமகவும் சேர்ந்துகொண்டது — இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது நைனாவுக்கு அடக்கம் செய்ய இடம் தர அரசு மறுத்தது — இரவோடு இரவாக அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்ட பின் அரசு இடம் கொடுத்தது என்பது தான் செய்தி — அதை மறைத்து …
நைனா செத்தவர் வீட்டுக்கு சென்றாலும் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதில் கில்லாடி — என்பது மட்டுமில்லாது ஓட்டுக்காக எந்த நிலைக்கும் இறங்கி பழம் நழுவுகிறது — பாலில் விழப்போகிறது என்றும் — விதவை உதவி நிதி தர நாங்கள் ரெடி என்று கூறி புண்படுத்தும் விதமாக கிண்டலடித்த அதே வாயால் — பதவிக்காவும் — விசாரணை கமிஷன்களில் இருந்து தப்பிக்கவும் ” நேருவின் மக்களே வருக – நிலையான ஆட்சி தருக ” என்று கூறியவரின் புதல்வரும் இப்படி நைனாவின் இறப்பை வைத்து ஒட்டு பொறுக்க நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது — ?
விதை ஒன்று போட்டால் -சுரை ஒன்றா முளைக்கும் — மகனான இவர் தந்தைக்கு இதைவிட என்ன கைம்மாறு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் …? வருங்கால ” நாட்டின் ஜனாதிபதி வாழ்க ” …!!!
பலமான தலைமைத்துவத்திற்கு வெற்றிடம் நிலவுவது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கும் கவலை தரும் செய்தி.