லஞ்சம் – மாட்டிக்கொண்டால் மட்டும் தானா பிரச்சினை….???



மாட்டிக் கொள்வது தானே பிரச்சினை…..?

புத்திசாலித்தனமாக யோசித்து,
மாட்டிக்கொள்ளாத விதத்தில்
லஞ்சம் வாங்கினால் தீர்ந்தது பிரச்சினை –

இது லஞ்சத்தில் ஊறிப்போனவர்களின் சிந்தனை…

ஆனால், பிரச்சினை மாட்டிக் கொள்வதில்
மட்டும் தானா….?

சிந்திக்கத் தூண்டும் ஒரு சிறு படம்….!!!

….

இதனை உருவாக்கிய பிரபு குழுவினருக்கு உளமார்ந்த
பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

.
—————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to லஞ்சம் – மாட்டிக்கொண்டால் மட்டும் தானா பிரச்சினை….???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஏதோ சொல்றீங்க கா.மை. சார்… இந்த மாதிரி படங்களை நீங்களும் நாங்களும்தான் பார்க்கணும். ஆனா இதைப் பார்க்கவேண்டியவர்கள் அரசு ………களின் குடும்பத்தினர். எந்த அலுவலகம் சென்றாலும் இந்த ஊரில் லஞ்சம். நேரடியா லஞ்சத்துக்கு மாற்று, ப்ரோக்கர்கள். எந்தத் துறையும் விதிவிலக்கில்லை. இதையெல்லாம் நான் 25 வருடமா பார்த்ததே இல்லை. சாக்கடையிலேயே வாழ்பவர்களுக்கு, சாக்கடையில்லாமல் ஒரு இடம் இருப்பதே தெரியாது. அப்படி இருக்கிறது தமிழர்களின் பிழைப்பு.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      நீங்கள் சொல்வது உண்மை தான்…
      இருந்தாலும் – காலம் மாறும்… மாறித்தான்
      ஆக வேண்டும்.

      மக்களில் 20 சதவீதம் பேர்
      மாறினால் கூடப்போதும். மற்றவர்களும்
      மாற வேண்டிய கட்டாய சூழ்நிலை
      ஏற்பட்டு விடும்.

      பின் குறிப்பு – நானும் ஏறத்தாழ
      40 ஆண்டுகள் அரசு உத்தியோகத்தில் தான்
      இருந்தேன்… நான் இருந்த பிரிவுகள்
      நிச்சயம் சுத்தமாக இருக்கும்…
      சில இடங்கள் ஏற்கெனவே சுத்தமாக இருந்தன.
      சிலவற்றை நான் சுத்தப்படுத்தினேன்.

      ஒரே ஒரு இடத்தில் மட்டும் என் மேலதிகாரி
      ஒருவரை திருத்த முடியவில்லை…
      அவர் அன்பிற்கும் கட்டுப்படவில்லை;
      மனசாட்சிக்கும் கட்டுப்படவில்லை. அவரை
      காட்டிக்கொடுக்க எனக்கு மனம் வரவில்லை.
      பிறகு, நானே கேட்டு மாற்றல் வாங்கிக்கொண்டு
      வேறிடம் சென்று விட்டேன்…

      (கொஞ்ச காலம் கழிந்து, அந்த அதிகாரியின்
      25 வயது ஒரே மகன் ஒரு சாலை விபத்தில்
      அகால மரணம் அடைந்தான்…என்று கேள்விப்பட்டேன்.
      அந்த மரணமாவது அவரை மாற்றியதா-இல்லையா
      என்பது குறித்து எனக்கு தெரியாது. )

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    To reach larger audience and to curb corruption in society, I suggest that the Film Distributors’ Council decide to show this clipping before showing the main movie in all theaters. Also all TV channels may screen this as many times as possible every day.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      இதனாலெல்லாம் பிரயோசனம் இருக்காது சந்திரமவுலி சார்.

      நான் சென்ற அரசு அலுவலகங்கள் எல்லாவற்றிலும் லஞ்சம் இருக்கிறது. எந்த ஒரு செயலுக்கும் லஞ்சம். அது இல்லை என்றால் வேலை ஆகாது. கூச்சமே இல்லாமல், அவருக்கு இவ்வளவு எனக்கு கமிஷன் என்ற அளவில் எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் அவசரப்படுவது தெரிந்தால் லஞ்சத்தை அதிகமாக்குகிறார்கள். முன்பு பள்ளி கல்லூரிகளில் இல்லாமலிருந்தது. அங்கும், பணம் கொடுத்தால் பேப்பர் ரிவிஷனில் பாஸ் என்ற அளவில் இருக்கிறது என படிக்கிறோம். சில பெயர் பெற்ற கல்லூரிகளில் 2-5 லட்சம் கொடுத்தால் செமெஸ்டரில் 90% மதிப்பெண்கள் போடுகிறார்கள் (அப்போ கோர்ஸ் முடிந்ததும் வேலை கிடைக்கும் என்று).

      நம் சட்டதிட்டங்கள் தவறு. லஞ்சம், ஊழல் இவற்றிர்க்கு குடும்பம் முழுவதற்கும் தண்டனை கொடுக்கவேண்டும். செய்தவருக்கு மட்டுமல்ல. இதில் மனைவி, குழந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள் யாரும் தப்பக்கூடாது. அப்போதுதான் ஒரு பயம் வரலாம்.

      அரசு அலுவலர்கள் போராடும்போது ஏன் அவர்கள் மீது அனுதாபம் வரவில்லை? காரணம் அவர்கள் சம்பளம், கிம்பளம், வேலை செய்யாமல் இருப்பது என்று திளைத்திருப்பதுதான் காரணம். 5% நல்லவர்கள் இருப்பார்களா என்பதே எனக்கு சந்தேகம். இந்த ‘லஞ்சம்’ வாங்கும் புத்தி மக்களுக்கே வந்துவிட்டது. அதனால்தான் வெட்கமில்லாமல் வாக்குகளுக்கும் லஞ்சம் வாங்குகிறோம், பெரும்பாலும். இந்த லட்சணத்துல நாம அரசியல்வாதிகளைக் குறை சொல்கிறோம்.

      எப்படி இந்த மாதிரி ‘லஞ்சம்’ மற்ற நாடுகளில் இல்லை? அப்போ, ‘தமிழர் இனம் பெருமை மிக்கது’, ‘இந்தியர்கள் நாம் உலகத்தில் சிறந்தவர்கள்’ என்று எதை வைத்துச் சொல்கிறோம்? நாம் பொதுவாக ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்’ வகையறாவைச் சேர்ந்தவர்கள்தாம்.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    லஞ்சம் :— அதிகாரிகள் வாங்கினால் – லஞ்சம் , அரசியல்வாதி வாங்கினால் -அன்பளிப்பு , அரசியல் கட்சிகள் வாங்கினால் – நன்கொடை … என்ன ஒரு அருமையான வார்த்தை ஜாலங்கள் நம்நாட்டில் .. !!

    குடும்பத்திலிருந்தே மாற்றம் துவங்க வேண்டும்: என்கிறார் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்… நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தையும் துவங்கினார் … !

    ஒரு முந்தைய இடுகை : // லஞ்ச மந்திரிக்கு மரண தண்டனை அங்கு ! ஏன் கூடாது இங்கு …?
    Posted on ஜூலை 22, 2013 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2013/07/22/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D/ … அது அங்கே — !!

    இங்கே — சிரிப்புதான் வருகிறது வேதனையுடன் — ரைடுகள் நடக்கும் — அமலாக்கத்துறை வரிந்துகட்டும் — சிபிஐ வேகமாக — விரிவான விசாரணை என்று மும்முரம் காட்டும் — தனி நீதிமன்றம் – அது -இது என்று பல ஆண்டுகளுக்கு மக்கள் பணம் வீணாகும் … இறுதியில் சிபிஐ தனி நீதிமன்றம் ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை ஊத்திமூடும் — ஊழல் — லஞ்சம் வாங்கி கொழுத்த ” பெருச்சாளி ” மீண்டும் பதவிக்கு வந்து நமக்கு பெப்பே காட்டும் …!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.