ஃபானி ….


தமிழகத்திற்கு வராது என்று
சொல்லப்பட்டபோது – கோபம் வந்தது…
இங்கிருந்து ஈரத்தை, மேகத்தை, அழுத்தத்தை –
எல்லாம் திரட்டி விட்டு –
எங்கோ போய் மழையாக கொட்டப்போகிறதே என்று …

முதலில், ஆந்திராவில், ஒடிஷாவில் கனமழையை
பார்த்தவுடன் இந்த எரிச்சல்
அதிகமானது….

ஆனால், இறுதியில் ஒடிஷாவில் புயல்
தரையில் இறங்கியவுடன் ஏற்பட்ட
சேதங்களை/அழிவுகளை பார்க்கும்போது,
நல்லவேளை தமிழகம் தப்பியது என்று தோன்றுகிறது…

அற்ப மானுடர் நாம்…
நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் –
அப்புறம் இயற்கையை
எங்கே மதிக்கப்போகிறோம்….?

இயற்கையின் சக்தியை, வலிமையை,
யாருக்கு, எப்போது, எதை – தர வேண்டும் என்கிற
அதன் தீர்மானத்தை, முடிவை –
ஏற்றுக் கொள்வதை விட,
அற்ப மானுடராகிய நமக்கு வேறு வழி…?

அந்த மஹா சக்தி –
கொடுக்கும்போது வாங்கிக்கொள்வதையும்,
அடிக்கும்போது தாங்கிக்கொள்வதையும் தவிர –
வேறு என்ன செய்ய முடியும் நம்மால்…?

.
————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஃபானி ….

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    ஒடிசா ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மே 6 -ம் தேதி பார்வையிடுகிறார் பிரதமர் மோடி ஜீ அவர்கள் …! நல்லகாரியம் சென்று
    ” அவர்களுக்காவது ” தேவையான அனைத்தையும் செய்ய அந்த இயற்கை மஹா சக்தியை வேண்டி வணங்கி கேட்டுக்கொள்வோம் …!!!

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    ஒடிசா ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மே 6 -ம் தேதி பார்வையிடுகிறார் பிரதமர் மோடி ஜீ அவர்கள் … ! நல்லகாரியம் சென்று ” அவர்களுக்காவது ” தேவையான அனைத்தையும் செய்ய அந்த இயற்கை மஹா சக்தியை வேண்டி வணங்கி கேட்டுக்கொள்வோம் …!!!

  3. Ramnath's avatar Ramnath சொல்கிறார்:

    ஒடிஷாவில் இன்னும் ( சட்டமன்றம் + பாராளுமன்றம் ) வாக்குப்பதிவு பாக்கி இருக்கிறது. அதான் “கருணா கடாட்சம்” ;
    எதிர்பாருங்கள். உடனடியாக பல கோடி ரூபாய் உதவினிதியும் அறிவிக்கப்படும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.