…
…

…
மத்தியில் பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டுமானால்,
இன்றைய தினம் அதைச் செய்ய எந்த ஒரு
தனி கட்சியினாலும் முடியாது…
எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டாலொழிய, தேர்தலுக்குப் பிறகு,
மீண்டும் மோடிஜியின் ஆட்சி அமைவது தவிர்க்கப்பட முடியாதது.
சில மாநிலக் கட்சித் தலைவர்களின் பேராசை காரணமாக,
தேர்தலுக்கு முந்திய எதிர்க்கட்சிகளின்
கூட்டணி உருவாவது சாத்தியமாகத் தெரியவில்லை…
இந்த நிலையில் குறைந்த பட்சமாக எதை செய்யக்கூடுமோ –
அதைச் செய்திருக்கிறார்
காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி.
கேரளாவில், வயநாடு பாராளுமன்ற தொகுதியில்
போட்டியிட இருக்கும் அவர் அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
நான் இங்கு போட்டியிடுவதால்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் நண்பர்கள்
கண்டிப்பாக எனக்கு எதிராக பேசுவார்கள் என்பது
எனக்குத் தெரியும். எனக்கு எதிராக அவர்கள்
பிரச்சாரம் செய்வார்கள் என்பதும் தெரியும்.
ஆனால் நான் அவர்களுக்கு எதிராக பேச மாட்டேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சிக்கு எதிராக தான் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன் என்று
ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
வரவேற்கத்தகுந்த புத்திசாலித்தனமான முடிவு இது.
இன்றைய தினம் எதிர்க்கப்பட வேண்டியதும்,
மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட
வேண்டியதும் பாஜக மட்டுமே…
எனவே, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடா விட்டாலும்,
தங்களுக்குள் ஒருவரையொருவர் ஏசிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
குறைந்தபட்சம் பாராளுமன்ற தேர்தலைப் பொருத்த வரையில் –
இடதுசாரி முன்னணியும் இதே போன்று முடிவெடுத்தால் –
அங்கே ஒரு friendly contest ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
இது பாஜகவுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவியாக இருக்கும்.
.
—————————————————————————————————————–



அய்யா ..! // மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சிக்கு எதிராக தான் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன் என்று
ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். // … இது ஒருவகை அரசியல் ..?
ஆனால் ஓரம் கட்டப்பட்ட மூத்த அரசியல்வாதி திரு அத்வானி அவர்கள் : // மாற்றுக் கருத்துள்ளவர்களை நாம் ஒரு போதும் தேச விரோதிகள் என்று சொன்னதில்லை: மோடிக்கு அத்வானி சூசக அறிவுரை // https://tamil.thehindu.com/india/article26735231.ece?utm_source=HP&utm_medium=hp-tslead என்பது உற்று நோக்கத்தக்க அரசியல் ..!
ராகுல் காந்தி நாளுக்கு நாள் தன் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தி கொண்டே தான் வருகிறார்.
ஆனால், எதிர் தரப்பில் மோடி…!
பிரதமர் பதவியின் மீது இருக்கும் வெறி அளவுக்கு அதன் கண்ணியத்தை காக்கும் வகையில் அவரின் அணுகுமுறைகள் இருக்கின்றனவா…?
தேர்தல் நெருங்க, நெருங்க தோல்வி பயம் அதிகமாகும் போது இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ…!?
ராகுல் காந்தி சம்பந்தமாக விரிவான தொரு அலசலை பிபிசி தளத்தில் செய்தி கட்டுரையாளர் தந்துள்ளார்.
மோடிக்கு மாற்றாக ராகுலா என்று என்னை கேட்டால்,
மோடியை விட ராகுல் பலவிதங்களில் சிறப்பானவர் என்று சொல்லலாம்.
அந்த செய்தி கட்டுரையை படித்து பாருங்கள்.
அது கீழே,
https://www.bbc.com/tamil/india-47800274
செல்வராஜன்,
இதனை பாராட்டி பிரதமர் மோடி தற்போது ட்விட் செய்துள்ளார்.
// அவர் தனது ட்விட்டர் பதிவில்,
”பாஜக கட்சியின் சாரம்சத்தை அத்வானி மிகத் தெளிவாக கூறியுள்ளார். அவர் போன்ற மூத்த தலைவர்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம். முதலில் நாடு, அடுத்தது கட்சி, அதன் பின்னர்தான் சொந்த நலன்கள் என்பது பாஜகவின் கொள்கை” என்று தெரிவித்துள்ளார்.//
————————————–
இது எப்படி இருக்கிறது….?
இப்போது என்ன சொல்வீர்கள்…?
“உங்களுக்காகத்தான் சொன்னேன்” என்று அத்வானிஜியால் வெளிப்படையாக இன்னொரு முறை சொல்ல முடியுமா..?
எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக வளைத்துக்கொள்ளக்கூடிய சாமர்த்தியமுள்ள இப்படிப்பட்ட ஒருவரை வெல்வது சுலபமா ….???
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
காங்கிரஸ் அடிமையாகிய நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வீழ்த்தமாட்டீர்கள்,காலம் உங்களுக்கு பதில் சொல்லும்.
M.Thevesh,
இங்கே எழுதுபவர்களில் யாரும் காங்கிரஸ் அடிமைகள் இல்லை..
இந்த நாட்டின், நாட்டு மக்களின் நலன் விரும்புபவர்கள்.
அவர்களால் மோடிஜியை வீழ்த்த ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மை தான்.
ஆனால், அவர் செய்யும் பாவங்களே அவரை ஒரு நாள் வீழ்த்தி விடும்.
மோடிஜி பக்தர்கள் அப்போதும் எது சரி எது தவறு என்பதை உணர மாட்டார்கள்…
தண்ணீர் தெளிக்கப்பட்ட பலியாடுகளுக்கு தன் கதி, நிலை – எப்படி புரியும்…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தவேஷ் – இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமா தவேஷ் தலைமையில் ஒரு பார்ட்டி இப்போது இருந்து, அது மக்கள் செல்வாக்கில் 25% வாக்குகள் வாங்கும் என்ற சூழ்நிலை இருந்தால், காங்கிரஸை விட்டுவிட்டு, தவேஷ் கட்சி வெற்றிபெறவேணும் என்றுதான் எழுதுவார்கள். இப்போது மோடிக்கு எதிராக எழுதுபவர்கள், அவருடைய ஆட்சி போகவேண்டும், அதற்கு யார் இருக்கிறார்கள் என்று பார்த்துத்தான் எழுதுகிறார்கள். அதனால் அவர்கள் ‘காங்கிரஸ் அடிமை’ என்று சொல்வதில் அர்த்தமேயில்லை. (காங்கிரசை கழுவிக் கழுவி இந்தத் தளத்தில் ஆயிரம் இடுகைகளுக்கு மேல் வந்திருக்கும். பொறுமையாக படித்துப்பாருங்கள்)
M.Thevesh
2011, பிப்ரவரியில் – இதே தளத்தில், ஒரு வாசக நண்பருக்கு அளித்த
பின்னூட்ட விளக்கத்தை, இப்போது தற்செயலாக பார்க்க நேர்ந்தது.
அதை உங்கள் பார்வைக்கு தருவது பயனுள்ளதாக இருக்கும்
என்பதால் கீழே தந்திருக்கிறேன்…..
அந்த காலங்களில் நான் காங்கிரஸ் ஆட்சியை எவ்வளவு
கடுமையாக சாடி இருக்கிறேன் என்பதை அந்த சமயங்களில்
வெளிவந்த இடுகைகளை பார்த்தீர்கள் என்றால் புரியும்.
————————————————————————–
vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
3:44 பிப இல் பிப்ரவரி 24, 2011
வருக நண்பர் ராஜா,
பொது மக்கள்,
பொதுவான மக்களாக
இருக்க வேண்டும்.
எந்த கட்சிக்கும்,
நிரந்தர விசுவாசிகளாக மாறி
கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும்
நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தவறு செய்யும் கட்சியை
ஆட்சியில் இருந்து எப்போது
வேண்டுமானாலும் தூக்கி எறியத் தயாரான
மனநிலையில் இருக்க வேண்டும்.
ஜனநாயகம் தழைத்து வளர வேண்டும்
என்றால் – பொது மக்கள் விழிப்புடன்
இருக்க வேண்டும்.
கட்சி சார்பற்று இருக்க வேண்டும்.
நல்லது – கெட்டதுகளை
பாரபட்சமின்றி உணரக்கூடிய
பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.
வரும். அந்த நிலை வர இன்னும்
காலமாகும். வளரும் நிலையில் தானே
இருக்கிறது நமது ஜனநாயகம்.
– வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
அய்யா …! // “உங்களுக்காகத்தான் சொன்னேன்” என்று அத்வானிஜியால் வெளிப்படையாக இன்னொரு முறை சொல்ல முடியுமா..? // … சொல்ல முடியாவிட்டாலும் திரு அத்வானி அவர்கள் எழுதியுள்ள இதில்
கடந்த காலத்தில் இருந்தைத்தான் குறிப்பிட்டுள்ளார் // விரோதிகளாகப் பார்த்ததில்லை.– பாஜக மதித்தது.– எப்போதும் முன்னிலையில் இருந்துள்ளது // என்று எழுதியிருக்கிறாரே தவிர — //
தற்காலத்தில் விரோதிகளாக பார்த்ததே இல்லை என்றோ — மதிக்கிறது என்றோ — முன்னிலையில் இருக்கிறது என்றோ குறிக்காதது
தற்போதைய //
”பாஜக கட்சியின் சாரம்சத்தை அத்வானி மிகத் தெளிவாக கூறியுள்ளார் //
என்று ட்விட் செய்துள்ளவருக்கும் தெரியும் — நமக்கும் புரியும் .. !
மக்களுக்கும் தெரியும்.
பக்தகோடிகள் தவிர்த்து மக்கள் தெளிவாக இருப்பதாகவே படுகிறது. அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். எல்லாத்தையும் கண்காணித்து கொண்டு.
மே 23-ல் தெரியவரும்.
உங்களுக்கு பிடிக்காத முடிவு வந்தால் வேறு நாட்டுக்கு போய்விடுவீர்களா பாய் ?
பக்தரே,
உங்களுக்கு பிடித்த முடிவு வந்தால்,
மீதி இருப்பவர்களை அடித்து துரத்தி விடுவீர்களா பக்தரே ?
//இன்றைய தினம் அதைச் செய்ய எந்த ஒரு தனி கட்சியினாலும் முடியாது//
கா.மை. சார்… மோடி மோசமானவர் என்ற மனநிலைக்கு பெரும்பான்மையான மக்கள் இன்னும் வரவில்லை என்றே நினைக்கிறேன். அப்படி ஒரு மனநிலை வரும் அளவு மோடி அவர்கள் இன்னும் எதையும் செய்துவிடவில்லை. ஒருவேளை அப்படி அவர் மோசமானவர் என்ற எண்ணம் வந்தால், மக்கள் அணிதிரண்டு ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுப்பார்கள். இதைத்தான், ‘இந்திராதான் இந்தியா’ என்று கூக்குரலிட்ட இந்திராவுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்தபோதும், மாற்று மத்திய அரசு ‘குழந்தைத் தனமாக நடக்கிறது, இந்திராவும் திருந்திவிட்டார்’ என்று மக்கள் நினைத்தபோது மீண்டும் ஆட்சி மாற்றம் நேர்ந்தபோதும், இந்திய இறையாண்மைக்கு எதிராக சதி செய்ததால் திமுக டிஸ்மிஸ் ஆனபோதும் அடுத்து வந்த தேர்தலில் கிட்டத்தட்ட இடங்களே இல்லாத அளவு திமுகவை தோல்வியுறச் செய்த 91 தேர்தலிலும், ‘தமிழ்நாட்டு மக்களைவிட, சொந்த ஆடம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆணவம் என்று சொல்லுமளவு நடந்துகொண்ட 91-96 ஜெ ஆட்சிக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்தபோதும் கண்டிருக்கிறோம்.
இன்றைக்கு ‘தனிக் கட்சிகளால்’ அதைச் செய்யமுடியாது என்று நீங்கள் நினைப்பதற்கு, ‘மோடி அந்த அளவு எதிர்ப்புணர்ச்சியை மக்களுக்கு உருவாக்கவில்லை’ என்பது ஒன்றே காரணமாயிருக்கமுடியும்.
//சில மாநிலக் கட்சித் தலைவர்களின் பேராசை காரணமாக// – இதுவும் சரியான அசெஸ்மெண்டாக எனக்குத் தெரியவில்லை. உதாரணமா, எல்லாக் கட்சிகளும் சேர்ந்துகொண்டு மோடி/பாஜகவை எதிர்த்தால், அது இல்லாத இடங்களிலும் பெரிய அளவில் வளர்வதில் கொண்டுபோய் முடியும். கேரளாவில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கிடையில்தான் போட்டி. அவர்கள் இருவரும் சேரவேண்டும் என்று எதிர்பார்ப்பதிலோ இல்லை புரிந்துணர்வு கொண்டு பாதிக்குப் பாதி தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என்று எதிர்பார்ப்பதோ சரியில்லை. ஏன் மம்தா, காங்கிரசுடன் மே.வங்கத்தில் கூட்டணி வைத்துக்கொள்ளவேண்டும்? பிறகு சட்டமன்ற தேர்தலில் என்ன ஆகும்?
என்னைக்கேட்டால், தேர்தலுக்குப் பிறகு, மக்களின் கருத்தை வைத்து, அதன் பின்னணியில் கூட்டணி சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்தால் போதுமானது.
தேர்தலுக்குப் பிறகு, பேரம் படிவதை பொறுத்து, அதன் பின்னணியில் கூட்டணி சேர்ந்து மத்தியில் ஆட்சி அமையும்!
இதில் இரண்டு கூட்டணிகளும் முனையும்! ஒரு சில கட்சிகளை தவிர, மற்றவை இரண்டு கூட்டணிக்குமே தயார்!
புதியவன்,
// ‘மோடி அந்த அளவு எதிர்ப்புணர்ச்சியை மக்களுக்கு உருவாக்கவில்லை’ //
-பெரும்பாலான வட மாநிலங்களைப் பொருத்த வரை நீங்கள் சொல்வது சரியே.
ஆனால், அதற்கான முக்கிய காரணம், பெரும்பாலான வட இந்தியர்கள் மத உணர்வுகளில் திளைப்பவர்கள்.
மதம் என்று வந்து விட்டால், அவர்கள் நியாய-அநியாய உணர்வுகளுக்கு இடமே கொடுப்பதில்லை.
பல வருடங்கள் வடக்கே இருந்தவன் என்கிற அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்.
.
– வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இந்தியாவில் இருந்து கொண்டு நாத்திகம் என்ற பெயரில் இந்து
மத கடவுள்களைமட்டும் {முஸ்லீம் ,கிறித்தவர் என்றால் மண்டை உருளும்}
வசை பாடி ஆபாசமாக பேசி ஜீவிக்கும் வீரமணி ,சுப வீ , வைரமுத்து
வகையறாக்கள் இருக்கும்போது வட இந்தியர்கள் நீங்கள் சொல்வது போல
மத உணர்வுகளில் திளைப்பது ஒன்றும் அதிசயமில்லை. வடஇந்தியாவில்
காலை வணக்கம் கூட ராம் ராம் என்று ஒருவருக்கொருவர் விளித்து கொள்வதை
நான் கண்டிருக்கிறேன் .மற்றொன்று வட இந்தியர்கள் குறிப்பாக எல்லை மாநிலங்களில்
வசிப்பவர்களுக்கு தேச பக்தி நம்மை விட (குறிப்பாக தமிழ்நாடு மக்கள்)
அதிகம் இருக்கிறது. நாளை போர் என்று ஒன்று வந்தால் முதலில் பாதிக்கப்படுபவர்கள்
அவர்களே. இந்த இரண்டும் மோடிக்கு கை கொடுக்கின்றன.
தமிழ்மணி,
//நாத்திகம் என்ற பெயரில் இந்து மத கடவுள்களைமட்டும் {முஸ்லீம் ,கிறித்தவர் என்றால் மண்டை உருளும்}
வசை பாடி ஆபாசமாக பேசி ஜீவிக்கும் வீரமணி ,சுப வீ , வைரமுத்து
வகையறாக்கள் இருக்கும்போது //
இந்த வாய்ப்பேச்சு வீரர்களால், தமிழ் மக்களில் ஒரு சதவீதத்தை கூட மாற்ற முடியவில்லை என்பதை
நீங்கள் அறிய மாட்டீர்களா …?
திருவாளர்கள் வீரமணி, சுப.வீ. வை.மு. ஆகியோர் பேசுவதை சுகமாக
கேட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருப்பவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டில் நாத்திகம் – 1 % கூட இல்லை
என்பது தான் உண்மை… என்ன – இங்கே எதிர்வினை ஆற்றுபவர்கள் குறைவு… வடக்கே அதிகம்…!!!
தேசபக்தியில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தேசபக்தியும், தெய்வபக்தியும் தமிழர்களின்
இரண்டு கண்கள்..என்று சொன்ன மு.ரா.தேவர் அவர்களின் வார்த்தைகள் உங்கள் நினைவில் இல்லையா..?
ராணுவத்தில் 30% -க்கும் மேல் தமிழர்கள் என்பதை ஒருவேளை நீங்கள் அறியாமல் இருக்கலாம்.
போர்ச் சூழ்நிலை வந்தால் – எல்லையில் இருக்கும் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. போர் வராவிட்டாலும்,
அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டாலே, அவர்களது தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. ரெயில்கள்
ரத்து செய்யப்பட்டு – ராணுவத்தினரின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்கள்
கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படுகின்றன. எல்லை கிராமங்களில் சிவிலியன் மக்கள்
குண்டு வீச்சுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் அதிகம் கவலை கொள்வது இந்த காரணங்களுக்காகத் தான்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா … ! இங்கே சும்மா வாய் சவடால் விட்டு – அரைத்த மாவையே அரைத்து ” சிரிப்பு பின்னூட்டங்கள் ” மூலம் தங்களின் ஒரு சார்பு நிலையை அங்கீகரிக்க — இடுகையின் போக்கை திசை மாற்ற முயற்சிப்பவர்கள் — உங்களை பற்றி முழுமையாக தெரியாத அறிவிலிகள் — !
2010 – மார்ச் ல் ஆறு பகுதிகளை கொண்ட ….. // வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? // என்கிற தலைப்பில் தொடராக வெளிவந்த இடுகை பதிவுகளை பற்றி அறியாதவர்கள் என்பது தான் நிச்சய உண்மை — அதையெல்லாம் படிக்காமலேயே — ஏதோ போகிற போக்கில் அவர்களின் அபிமான கட்சி — தலைவர் பற்றி குறிப்பிட்டவுடன் சந்து -பொந்துக்களில் இருந்து பாய்ந்தோடி வந்து கருத்துக்களை கூறுகிறார்கள் — அதற்கு முக்கிய காரணமே இந்த தளம் மிகவும் நடுநிலையான — மென்மையான — மேன்மையான மறுமொழியை பெற்று தப்பிக்கலாம் என்கிற எண்ணம் என்பது நிதர்சனம் –!
இன்றைய காலத்தில் மிக கர்ண-கொடூரமாக ஆளுகின்ற மத்திய – மாநில அரசுகளை பற்றியும் – தலைவர்களை பற்றியும் பதிவிட்டு — நாறடிக்கிற பல தளங்களில் இங்கே வந்து கூவுகிற இந்த கூட்டம் ஏன் தலைக்காட்டுவதில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம் —
அங்கே சென்று இவர்களின் மாமூல் சங்கூதுவதை ஊதினால் ” கிழித்து தொங்க விட்டு விடுவார்கள் ஆதாரங்களோடு என்கிற பயம் ” ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவே … பலமுறை நீங்களும் சுட்டிக் காட்டிக்கொண்டே இருந்தும் என்ன பயன் என்பது தான் கேள்வியே ..!!!
இந்த ” வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? ” …. என்கின்ற பதிவுகளை மீண்டும் ஒரு முறை மறு பதிவாக வெளியிடுங்களேன் .. எம்மை போன்றவர்களுக்கு கொஞ்சமாவது அறிவு தெளிவு ஏற்படும் …அப்படித்தானே …?
செல்வராஜன்,
உங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி.
பல தகவல் சேகரிப்புகளுக்குப் பிறகு,
அழ்ந்த அக்கறையோடும்,
அதிக உழைப்பிலும் எழுதப்பட்ட இடுகைத் தொடர் அது.
கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு முன் வெளியான அந்த
இடுகைத் தொடருக்குப் பின்னர், இந்த வலைத்தளத்திற்கு
வரத்துவங்கிய நிறைய வாசக நண்பர்கள் அதை படித்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, மீண்டும் ஒரு முறை அதை மறுபதிவு செய்யலாம் என்கிற உங்கள்
யோசனை நல்ல யோசனை தான். இன்றைய புதிய வாசக நண்பர்களுக்கும்
பல தெரிந்திராத தகவல்களை அது தரும்
அவசியம் முயற்சிக்கிறேன். நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கடவுளே,
வடிகட்டிய அடிமுட்டாள்கள் எல்லாம் ட்ரூ இண்டியன் என்று பெயரிட்டுக்கொண்டால் இந்த நாட்டின் உண்மையிலேயே உண்மையான இந்தியனின் கதி என்ன ஆகும் ?
அய்யா,
என்னை போன்ற முட்டாள்களுக்கு தங்களை போன்ற அதி புத்திசாலிகள் பட்டம் கொடுப்பதை காட்டிலும், தக்க பதில் அளிக்கும் பொழுது புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். நான் இது நாள் வரை பிஜேபி தொற்று விடும் என்று தான் தங்களை போல கனவு கண்டு கொண்டிருந்தேன் .அதனால் தான் இந்த பதிவை பார்த்த பிறகு எனது கனவு கலைந்ததை போல உணர்ந்தேன்.
தங்களை போன்ற அதி புத்திசாலிகள் தான் என்னை தெளிவு படுத்த வேண்டும்.
கே.எம்.சார்,
திருத்தவே முடியாத கூட்டம் இது.
இந்த வலைத்தளத்தின் கட்டுரைகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு மினிமம்
அறிவு கூட இல்லாதவர்களை இனியும் இங்கே நீங்கள் அனுமதிக்கலாமா ?
தயவுசெய்து filter போடுங்கள்.
நமது கருத்துக்கு ஜால்றா அடிப்பவர்களை மட்டும் அனுமதிப்பது என்று முடிவெடுத்தால் ..
true_indian – என்று சொல்லிக் கொள்ளும் நண்பருக்கு,
பொருள் பொதிந்த விவாதங்களும், கருத்துள்ள பின்னூட்டங்களும் மட்டுமே இந்த தளத்தில் இடம் பெறுவது
வாடிக்கை. இங்கு வருகை தந்து விவாதங்களில் பங்கேற்கும் நண்பர்களும் அந்த தரத்திற்கு முக்கிய
காரணமாக அமைகிறார்கள்.
அர்த்தமற்ற உளரல்களுக்கும், வெறும் விதண்டாவாதங்களுக்கும் இங்கே இடம் கிடையாது.
உங்களுக்கான long rope முடிவடைந்து விட்டது. ஆனால், நீங்கள் இன்னமும்
உங்கள் உளரல் /விதண்டாவாத போக்கை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை.
இதே ரகத்தில் உங்கள் பின்னூட்டங்கள் தொடருமேயானால், இனி அவற்றிற்கு இங்கே
இடம் கிடையாது என்பதை உணரவும்.
நண்பர்களின் நேரத்தையும், என் நேரத்தையும் வீணடிக்கும் முயற்சியில் இனியும்
ஈடுபட வேண்டாம். உங்களுக்கு பொழுது போகவில்லை யென்றால், வேறு
போக்கிடத்தை தேடிக்கொள்ளவும்.
.
-காவிரிமைந்தன்
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி – இந்த இரண்டும், தொழில் முனைவோர்களை பாதித்திருக்கிறது. முன்பு கணக்கு காண்பிக்கத் தேவையில்லை. நிறைய கேஷ் டிரான்ஸாக்ஷன் இருந்தது. இப்போது அனேகமா கணக்கு காண்பித்தாகவேண்டும். ஆனால் இந்த ப்ராசஸ் சிரமம். அதனால் பாதிக்கப்பட்ட வணிகர்கள், சிறு குறு தொழிலதிபர்கள் நிச்சயம் பாஜகவுக்கு எதிர் மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.
இன்னொன்று, என்.ஜி.ஓ எனப்படும் Non Profit Organizationகளுக்கு வெளிநாட்டிலிருந்து வந்த நிதி பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் (குறிப்பாக சிறுபான்மை மதத்தினர்) பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பர் (அப்படி வாக்களிக்கச் சொல்லி அவர்களுடைய மத குருமார்கள் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றனர்). இதனை ஆஃப்செட் பண்ணுவதற்காக, பாஜக ‘இந்து மத ரீதியான’ உணர்வைத் தூண்டுகிறது, அல்லது இந்துக்களுக்கு தான் பாதுகாப்பாளன் என்று காட்டிக்கொள்கிறது..
வட இந்தியர்கள் பிரிவினை காலத்திலிருந்தே, இந்து, முஸ்லீம் என்று பிரிந்தவர்கள். அதன் பாதிப்பு நமக்கு (தமிழ்நாட்டுக்கு) இருந்ததே இல்லை. அதனால் நேரடியான மத உணர்வு இதற்கு முன்பு அவ்வளவாக தமிழகத்தில் இருந்ததில்லை. இங்கு இருந்ததெல்லாம் பிராமண எதிர்ப்பு.
இந்திரா காந்தியின் காலத்துக்குப் பிறகு (பொதுவா இந்திரா லோக்கல் புகழ்பெற்ற தலைவர்களை விரும்புவதில்லை. டம்மி மாநிலத் தலைவர்களைத்தான் நியமிப்பார்-அதாவது அடிமைகளை. அதனால், காங்கிரசிலிருந்து தலைவர்கள் விலகி, தங்கள் தங்கள் மாநிலத்தில் மாநில உணர்வு/சாதி ரீதியான கட்சிகளை ஆரம்பித்து கல்லா கட்ட ஆரம்பித்ததால் காங்கிரஸ் மிகவும் பலவீனப்பட்டுவிட்டது. எங்கு அந்த மாதிரி நடக்கவில்லையோ அங்கு காங்கிரஸ் இன்னும் ஓரளவு பலமாக இருக்கிறது. இதைத்தான் எதிர்க்கட்சிகள் பிரிந்திருக்கின்றன என எழுதுகிறார்கள்.
புதியவன்,
உங்கள் பின்னூட்டத்தில் நிறைய செய்திகள் இருக்கின்றன.
அநேகமாக இவை எல்லாவற்றிலும் எனக்கும் உடன்பாடு உண்டு.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்