காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பேன் : மம்தா பானர்ஜி …. இது கனவுகளின் காலம் – தேர்தல் காலம்…!!!


தேர்தல் காலத்தில், கனவுகளுக்கும்,
வாக்குறுதிகளுக்கும் பஞ்சமே இல்லை…
ஆளாளுக்கு எத்தனையோ கனவுகள்…
மக்களை ஏமாற்ற எத்தனையோ வாக்குறுதிகள்..

இது லேடஸ்ட் – from தீதி – மம்தா பானர்ஜி ….

அபூர்வமான புகைப்படம் – தீதி சிரிக்கிறார்…!!!

—————————————

மேற்கு வங்கத்தை தாண்டி வெளியே வந்தால்,
இவருக்கு எவ்வளவு ஓட்டு விழும்…?
அஸ்ஸாமில் வாழும் வங்காளிகளின் சப்போர்ட் கொஞ்சம் உண்டு….

பிறகு….. ஊஹூம்… ஒன்றும் கண்ணுக்கு தெரியவில்லை….

ஆஹா மறந்து விட்டோமே…
தமிழ்நாட்டில் ஒரு ஓட்டு, திருவாளர் கமல் ஹாசனிடமிருந்து
கிடைக்கலாம்…. ( அவரது இடது சாரி நண்பர்கள் தூங்கும்போது,
போய் ரகசியமாக ஓட்டு போட்டு விட்டு வந்து விடுவார்….!!! )

மற்றபடி…..?

ஆனாலும், அவரும் அசாத்திய தன்னம்பிக்கையோடு,
பிரதமர் ஆகும் கனவில் இருக்கிறார்…..
நமது பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு செல்ஃப் அடிக்கிறார்….

————————————————————————-
https://www.dinamalar.com/news_detail.asp?id=2248453
Updated : ஏப் 04, 2019 07:50 |

..
கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வரும்,
திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி,
பிரதமர் பதவிக்கு குறி வைத்துள்ளார். மாநிலத்தில் சரிந்து வரும்
செல்வாக்கை துாக்கி நிறுத்த,
தடாலடி அரசியல் தான் கைகொடுக்கும் என, நம்புகிறார்.
அதனால், பலர் முயன்றும் தீர்க்க முடியாத
காஷ்மீர் பிரச்னையை தீர்க்கப் போவதாக கூறி இருக்கிறார் மம்தா பானர்ஜி.

அவருடன், ‘எக்ஸ்பிரஸ்’ பேட்டி…

காஷ்மீர் பிரச்னைக்கு என்ன தீர்வு?

மக்கள் என்னை நம்பி வாக்களித்தால் தீர்வு திட்டத்தை தெரிவிப்பேன். மோடி அரசு, காஷ்மீர்
பிரச்னைக்கு தீர்வு காண தவறி விட்டது.

பல ஆண்டுகளாக, பலர் முயற்சித்தும் தீராத பிரச்னையை எப்படி தீர்ப்பீர்கள்?

மேற்கு வங்கத்தில், மாவோயிஸ்டுகள் பிரச்னைக்கு
தீர்வு கண்டு, அமைதியை ஏற்படுத்தியது போல,
காஷ்மீரிலும் செய்வேன்.

பிரிவினைவாதிகளை எப்படி சமாளிப்பீர்கள்?

மத்தியில் என் தலைமையில், கூட்டணி அரசு அமைந்தால்,
நானே காஷ்மீர் செல்வேன். அங்கேயே தங்கி,
பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண்பேன்.

ஷியாம பிரசாத் போன்றவர்கள் கூட,
காஷ்மீர் செல்ல, நேரு, ஷேக் அப்துல்லா
அனுமதிக்கவில்லையே?

அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான்,
என் தலைமையில் மத்திய அரசு அமைய
வேண்டும் என்கிறேன்.
நான், 1999ல், காந்தஹார் சென்று,
விமான கடத்தல்காரர்களிடம் இருந்து,
முப்தி மகளை மீட்க முயன்றேன்.
ஆனால், வாஜ்பாய் தான் அனுமதிக்கவில்லை.

—————————————————————————————

———-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பேன் : மம்தா பானர்ஜி …. இது கனவுகளின் காலம் – தேர்தல் காலம்…!!!

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    கனவு காணும் காலம் யாவும் -கலைந்து செல்லும் மேகங்கள் !

  2. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    மம்தா தீதியிடம் இது தான் குறை.
    தன்னுடைய லெவல் என்ன என்பதை அவர் புரிந்துகொள்ள மறுக்கிறார்.
    வங்காளத்தைப் பொருத்தவரை அவர் fine.
    ஆனால், அகில இந்திய அரசியலுக்கு உண்டான தகுதிகள் வேறு.
    அந்த உயரம் அவருக்கு கிட்ட வேண்டுமானால், தனக்கு இன்னும் என்ன குணங்கள் தேவை என்பதை அவரே சுயபரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை.சார்… எல்லாரும் (எல்லாக் கட்சிகளும்) நிச்சயமா நினைக்கறாங்க, பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது, அதிலும் 230 சீட்டுக்கு மேல கிடைக்காதுன்னு. அதுனால எதிர்க்கட்சிகள்லாம் (யார் யார் வெற்றி பெறுகிறார்களோ அவங்க) கூட்டணி அமைச்சா, 150 சீட்டு மட்டும் வைத்திருக்கும் காங்கிரஸோட சேர்ந்து தாங்கள் பிரதமர் ஆயிடலாம் (குமாரசாமி முதல்வர் ஆன மாதிரி) என்று அதுல கண்ணா இருக்காங்க. அதுக்கான ஃபீலர்கள்தான், மாயாவதி, சந்திரசேகரராவ், மம்தா பானர்ஜின்னு ஆளாளுக்கு பிரதமர் பதவிக்குத் தன்னைத் தயார் செய்துக்கறாங்க.

    பார்க்கலாம்… யாரோட கனவு நனவாகிறது என்று….

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! // இது கனவுகளின் காலம் – தேர்தல் காலம்…!!! // என்று நீங்களே குறிப்பிட்டு இருப்பதால் — பாவம் தீதி – மம்தா பானர்ஜி க்கு தேர்தல் கால கனவு கூடாதா …? என்ன இவர் கையில் எடுக்க நினைக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண்பேன் என்பது விசித்திரம் ..? நாடாளுமன்ற தேர்தல் நேரங்களில் ஏற்படுகிற பிரதமர் கனவு ஒரு சடங்கு — சம்பிரதாயமாக இருப்பது வாடிக்கையான ஒன்றுதான் … பிரதமர் பதவியை ருசித்தவர்கள் மீண்டும் வர துடிப்பதும் — அந்த பதவியின் மீது மோகம் கொண்ட மற்றவர்கள் அதற்காக எதையாவது உளறுவதும் இயல்பான ஒன்று தான் — இதெல்லாம் இருந்தால் தானே ஜனநாயகம் …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.