…
…
நான் இந்த புகைப்படங்களை இங்கே பதிந்திருப்பதன் முக்கிய நோக்கம், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் நமது மக்களின், நடை, உடை, கலாச்சாரங்கள் எப்படி இருந்தன என்பதை உணர்ந்து கொள்ளத்தான்.
கீழேயுள்ள புகைப்படங்கள் 1870 -ல் எடுக்கப்பட்டுள்ளவை.
அத்தனை புகைப்படங்களிலும் உள்ளவர்கள் தமிழ்நாட்டு பெண்கள் தான்.அவர்கள் மீது நகைகளை அணிவித்து, அந்த நகைகளை விளம்பரப்படுத்த வெள்ளைக்காரர்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் இவை.
அத்தனையும் ஸ்டுடியோக்களில் தான் எடுக்கப்பட்டிருக்கின்றன.
…………….

…

…

…

…………….
இது தனி … இதுவும் 1870 தான்….
இங்கே போஸ் கொடுத்திருப்பவர் –
ரெவரெண்ட் ஃபாதர் ராஜகோபால் -மெட்ராஸ்
( சர்ச் ஆஃப் ஸ்காட்லாண்டு )
…

…
.
————————————————————————————————————–



அய்யா … நம் தமிழர்களின் அணிகலன்கள் எண்ணிக்கை எக்கசக்கம் அதில் பொதுவாக கூறுவது : — நெற்றிப் பட்டம்…சடைநாகம்..மூக்குத்தி .. தோடு …கடுக்கன்..தொங்கட்டான்..சங்கிலி..அட்டியல்..தாலி..பாம்படம்..பதக்கம்…காப்பு,வளையல்…மோதிரம்…ஒட்டியானம்..வளை ..சதங்கை ..காற் சங்கிலி ..சிலம்பு …மெட்டி போன்றவை …
இவற்றில் கழுத்தணிகள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே ஒரு பெரிய பட்டியல் அவைகள் :– // கழுத்தணிகள்…கொத்து, கொடி, தாலிக்கொடி ,கொத்தமல்லி மாலை , மிளகு மாலை
நெல்லிக்காய் மாலை , மருதங்காய் மாலை , சுண்டைக்காய் மாலை ,கடுமணி மாலை ,மாங்காய் மாலை , மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை ,அரும்புச்சரம் ,மலர்ச்சரம் , கண்டசரம் ,கண்டமாலை, கோதை மாலை ,கோவை.,பவளத்தாலி // — இதேபோல் ஒவ்வொரு உறுப்புக்கும் அணியும் ஆபரணங்களின் எண்ணிக்கை நிறைய இருக்கிறது … உம் அது ஒரு காலம் — இன்று ….? — பாராம்பரியமா … பரிதாபகரமா …?
செல்வராஜன்,
உங்கள் பட்டியல் பிரமாதம்.
ஆனால், அதில் ஒரு சதவீதம் கூட இன்று பயன்பாட்டில் இல்லையென்று
( திருமணம், வளைகாப்பு – போன்ற விசேஷங்களைத் தவிர்த்து) நினைக்கிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்