…
…

…
அதிமுக மற்றும் பாமக கட்சிகளிடையே கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது சம்பந்தமாக தீவிரமாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தெரிகிறது…. இதுவரை வெளிப்படையாக எதுவும் நடக்கவில்லையென்றாலும் கூட மறைமுகமாக பேச்சுவார்த்தை நடப்பது பல விதங்களிலும் உறுதியாகத் தெரிகிறது. அண்மைக்காலமாக, இரண்டு கட்சிகளிடையே வெளிப்படையான மோதல்கள், குற்றங்கள் சொல்லுதல் – எதுவும் இல்லை.
இது சம்பந்தமாக வெளிவரும் செய்திகளை இரண்டு கட்சிகளுமே இதுவரை மறுக்கவில்லை.
இந்த கூட்டணி உறுதியானால், வட மாவட்டங்களில், இதன் வெற்றி
நிச்சயமாக கணிசமானதாக இருக்கும். பல இடங்களில் திமுகவின்
வெற்றியை இது பாதிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
ஆனால், ஒரு சந்தேகம் எழுகிறது…. பாஜக, அதிமுகவை பயமுறுத்தியும்,
அழுத்தம் கொடுத்தும் ஒரு கட்டாய கூட்டணிக்கு முயற்சித்து வருகிறது.
ஒருவேளை அதிமுகவால், இந்த அழுத்தத்தை தாங்க முடியாமல்
பாஜகவை சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டால் –
அப்போதும், பாமக கூட்டணியில் தொடரக்கூடுமா…?
தேர்தலுக்குப் பின்னர், பாஜகவுடன் கூட்டணி அரசில் சேர பாமகவுக்கு எந்தவித தயக்கமும் இருக்காது என்பது உண்மை…
ஆனால், தேர்தலுக்கு முன்னால் – வெளிப்படையாக பாஜகவுடன் சேர
டாக்டர் ராம்தாஸ் தயாராக இருப்பாரா…?
இதுகுறித்து நண்பர்கள் வேறு எங்கேயாவது எதாவது தகவல் பார்த்திருந்தால், இங்கே சொல்லலாம்.
.
_________________________________________________________________________________



அதிமுக-பாஜக கூட்டணி வருமா…?
வந்தால்…!?
அதிமுக-வுக்கு…. தற்கொலைக்கு ஒப்பானதாக அது இருக்கும்.
பாஜக-வுக்கு…. யார் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன நிலை தான். தனக்கு ஆதாயம் கிட்டினால் போதும் என்கின்ற ஒரு பரந்துபட்ட நிலை அதற்கு இருக்கும்.
முதலில் ஆதாயம் கிட்டுமா என்பதே கேள்வி குறி தான்.
இன்றைய சூழ்நிலையில் பாஜக-வுடன் யார் கூட்டணி வைத்தாலும் மிகப்பெரிய அடி காத்திருக்கு, குறிப்பாக தமிழகத்தில். அப்படி ஒரு நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறது. அந்த கூட்டணி 40யும் இழந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இதை அறியாதவரல்லர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.
அதிமுக-பாஜக கூட்டணி உருவாகுமா என்பதை தெரிந்து கொண்டு தான் அவர் அதிமுக கூட்டணி பேச்சை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
தேர்தல் நெருங்கும் வேளையில் பல சுவாரசியங்கள் காத்திருக்கு.
அறிவழகு,
நீங்கள் கூறுவது போல் தான் எனக்கும் தோன்றுகிறது.
ஒருவிதத்தில் அதிமுகவை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
அவர்கள் பாஜகவிடம் சிக்கவில்லை என்றால், மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஓரளவு
பிழைத்துக் கொள்ளலாம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்… நான் நினைக்கறேன்… அதிமுக பாஜகவோட கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று.
பாஜகவின் அதிகாரத்தால் அமைதியாக இருப்பதுபோல் தோன்றுமே தவிர, தேர்தலின்போது பாஜகவோட கூட்டணி, அதிமுகவின் அடிப்படை வாக்குகளை அசைத்துவிடும். அதனால் அது ஏற்படாது.
பாமக வுக்கு, அதிமுகவின் பலவீனத்தை நினைத்து, அதிக தொகுதிகளை, அதிலும் வட மாவட்டங்களில் முழுத் தொகுதிகளையும் தங்களுக்கு வாங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம். (அன்புமணி எம்பி ஆக இது உதவும் என்பதால்). பாமகவுக்கு தொகுதிகள் குறைத்துக்கொடுத்தால், இந்தக் கூட்டணியினால் பலன் உண்டு. திமுக-அதிமுக என்று இரண்டு பகுதிகளாக கூட்டம் சேரும்.
குருவி மூளை இருப்பவர்கள்கூட (அவ்வளவு குறைவான மூளை இருப்பவர்கள்), பாஜகவோடு தற்போதைய நிலையில் கூட்டணி சேரமாட்டார்கள். அவர்கள் இப்போது ‘உமி’ கிடையாது, அரிசியோடு கூட்டணி சேரணும்னு துடிக்க. அவர்கள் இன்றைய நிலையில் ‘கற்கள்’. அதனைச் சேர்த்துக்கொண்டால், அரிசி அதன் மதிப்பை இழக்கும்.