…

…
இன்று மாலை 7 மணிக்கு, டெல்லியில் நடந்த செய்தியாளர்கள்
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி –
ரஃபேல் விமான விவகாரம் தொடர்பாக
வெறும் இருபதே 20 நிமிடம் மட்டும்
என்னுடன் தனியாக – மோடிஜி –
ஒண்டிக்கு ஒண்டி – விவாதிக்கத் தயாரா…?
அதற்கான இடம், தேதி, நேரம், பார்வையாளர்கள்,
பேட்டியை நடத்தப்போகும் நடுவர் –
ஆகிய அனைத்தையும் மோடிஜியே
தீர்மானித்துக் கொள்ளலாம்.
அவர் எங்கு, எப்போது, எந்த இடத்திற்கு கூப்பிட்டாலும் நான் வரத்தயார்…
மோடிஜி என்னுடன் தனியே விவாதிக்கத் தயாரா….?
என்று – சவால் விடுத்திருக்கிறார்….!
இன்று பகல்/மாலையில் – பாராளுமன்றத்தில்(லோக் சபா) இது குறித்து
வெகு சூடான, சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது. மோடிஜி
அவைக்கு வரவில்லை… அவரது அறையிலேயே அமர்ந்து,
விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்தார் என்று
செய்திகள் சொல்கின்றன.
இதுவரை ரஃபேல் குறித்து நடந்த விவாதங்கள் எதிலும்,
மோடிஜி விளக்கமான பதிலளிக்கவில்லை.
திரும்பத் திரும்ப நிதியமைச்சரான ஜெட்லிஜி
தான் பதிலளித்துக் கொண்டிருந்தார்…
திரும்பத் திரும்ப, “ராகுல் பொய் சொல்கிறார். ராகுலுக்கு இதுபற்றிய
அடிப்படை அறிவே கிடையாது” என்பது மட்டுமே அநேகமாக
ஜெட்லிஜியின் பதிலாக இருந்து வந்திருக்கிறது.
தொலைக்காட்சிகளில் நேரடியாக (live)- ஆகப் பார்ப்பதில் உள்ள ஒரு
வசதி, பேசுபவரின் முகபாவங்களையும், உணர்ச்சிகளையும் ஓரளவு
நம்மால் நேரடியாக புரிந்துகொள்ள முடிகிறது.
ராகுல் காந்தி இப்போதெல்லாம் மிகத்தெளிவாகவும், எளிமையாகவும்
சுருக்கமாகவும் பேசி தன் தரப்பு வாதத்தை சொல்லி விடுவதை பார்க்க
முடிகிறது… மிகவும் தன்னம்பிக்கையுடன், உணர்ச்சி வசப்படாமல்,
கேட்க வேண்டியதை தெளிவாக கேட்கிறார்.
ஆனால் மிகுந்த அனுபவசாலியும், திறமையான வக்கீலுமான
ஜெட்லிஜியோ, தன் பதில்களில் வெறுப்பையும், கோபத்தையும் மட்டுமே
வெளிப்படுத்துகிறார். அவர் பதில்களில் சாரமே இல்லை.
திரும்பத்திரும்ப காங்கிரஸ் கட்சியின் பழைய பலவீனங்களையும், ஊழல்களையும் பற்றியுமே பேசிக்கொண்டிருக்கிறார்.
ரஃபேல் சம்பந்தமாக ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கான சரியான
விளக்கங்களை அவரால் தர முடியவில்லை – சமாளிப்பது நன்கு
தெரிகிறது.
குற்றச்சாட்டுகள், மோடிஜியின் தவறான முடிவுகளைப் பற்றியது.
அவர் இங்கே அவைக்கு வந்து என் கேள்விகளுக்கு பதில் சொல்ல
ஏன் பயப்படுகிறார் என்று ராகுல் கேட்டதற்கு ஜெட்லிஜியிடம்
தகுந்த பதில் இல்லை.
இந்த சூழ்நிலையில் தான் மாலை 7 மணிக்கு வெளியே செய்தியாளர்
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்த சவாலை விடுத்திருக்கிறார்…
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும், பல்வேறு விழாக்களிலும்
பிரமாதமாக மிகுந்த தன்னம்பிக்கையுடனும், தெளிவுடனும், உணர்ச்சி
வசப்பட்டும் பேசும் மோடிஜி –
“பச்சா”(குழந்தை) “பப்பு” (ஒன்றும் அறியாதவர்) என்றெல்லாம்
மோடிஜியால் விமரிசிக்கப்பட்ட – ராகுல் காந்தியின் –
-இந்த சவாலை மோடிஜி அவசியம் ஏற்க வேண்டும் என்று
பெரும்பாலான மக்கள்( சில பாஜகவினர் உட்பட ) விரும்புகிறார்கள்…
மோடிஜி சவாலை ஏற்பாரா….
விரைவில் சந்திப்பை எதிர்பார்க்கலாமா…?
.
______________________________________________________________________________



// ரபேல் டீலிங்.. லோக்சபாவில் அனல் பறந்த ராகுல் காந்தி பேச்சு.. மோடிக்கு முன்வைத்த 4 கேள்விகள் //
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/why-did-government-change-old-rafale-deal-asks-rahul-gandhi-lok-sabha-337987.html
இதில் ஹை லைட்டா :– // கடந்த முறை நான் ரபேல் விமானம் குறித்து லோக்சபாவில் பேசிய நாளில், பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை மணி நேரம் பதிலளித்தார். ஆனால் அதில் ஐந்து நிமிடம்தான் ரபேல் தொடர்பாக பேசினார். இன்று மோடி லோக்சபாவுக்கு வராமல் தனது அறைக்குள் ஒளிந்துகொண்டுள்ளாரே ஏன்?. மற்றொரு பக்கம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்பிக்கள் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளார். // நறுக்கான நான்கு கேள்விகள் ! பதில் … ?
புலி பதுங்கிருச்சி.
பாயுமோ…!?
புலி தானா…!
பூனை புலியாயிருச்சி.