…
…

…
ஃப்ரென்ச் ஜனாதிபதி Mr.Macron, முதன்முறையாக
டென்மார்க் நாட்டிற்கு விஜயம் செய்கிறார்…..
அவரை டேனிஷ் பிரதமர் Mr.Lars, வரவேற்று,
அழைத்துச் செல்லும் வைபவம்….
நம் நாட்டில் தான் இதுபோன்ற காட்சிகளுக்கு வாய்ப்பில்லை….
இதையாவது
கண்குளிரப் பார்ப்போமா… !!!!
…
.
————————————————————–



கா.மை சார்… //காட்சிகளுக்கு வாய்ப்பில்லை…// – இதுக்கு முக்கியக் காரணம் நாம் அரசியல்வாதிகளை, நடிகர்/நடிகைகளை கடவுளுக்கும் மேலாகத் துதிக்கிறோம். அந்த வீக்னெஸைப் புரிந்துகொண்ட அரசியல்வாதிகள், தங்களை கொலை செய்ய எல்லோரும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு (ஏன்…. இவங்க ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பார்த்துக்கொள்ளும் போலீசுக்கு எப்படி பாதுகாப்பது என்று தெரியாதா? அந்த லட்சணத்துலதான் இவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்களா?) தங்களுக்கும் ‘கறுப்புப் பூனை’ படை வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொள்கிறார்கள்.
தேர்தல் சமயத்தில்தான் இவர்களில் சிலரையாவது பிரச்சாரம் என்ற பெயரில் கொஞ்சம் அருகில் பார்க்கலாம்.
துபாயின் அதிபர் அவ்வப்போது பொதுமக்கள் நடமாடும் மால்களுக்கு வருவதும் (அவங்கள்லாம் பரம்பரை அரசர்கள் என்றபோதும்) சகஜம்தான். தாய்வானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரசிடெண்ட், மக்களிடமிருந்து வெகுவாக விலகியிருப்பதில்லை. (அவங்க,அவங்க வேலையைச் செய்கிறார் என்ற எண்ணம்தான்).