போர்ச்சுக்கல் சர்ச்சில் கணேசரும், ஜெர்மனியில் காமாட்சியும்…..


கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் போர்ச்சுக்கல் நாட்டில்
ஒரு சர்ச்’சில் விநாயகருக்கு விழா எடுக்கிறார்கள்…
எந்தவித மத வேறுபாடுமின்றி கிறிஸ்தவர்கள் உட்பட
அனைவரும் விழாவில் கலந்து கொள்கிறார்கள்….

இது ஐரோப்பாவில் உள்ள இந்து கோவில்களிலேயே மிகப்பெரியது….
ஜெர்மனியில் இருக்கும் – காமாட்சியம்மன் கோவில் –
இதை கட்டிக் கொடுத்தவர் ஒரு ஜெர்மனியர் என்பது இதன் விசேஷம்….

இந்த கோவிலில் தமிழ் கற்றுக் கொடுக்கிறார்கள்…
பல ஜெர்மானியர்களும் கூட இந்த வகுப்புகளில் சேர்ந்திருக்கிறார்கள்
என்பது கூடுதல் விசேஷம்…

மத நல்லிணக்கம், சகிப்புத் தன்மை என்றேல்லாம்
இங்கே நாம் வெறுமனே
வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்கிறோம்….

அங்கெல்லாம் நடத்திக் காட்டுகிறார்கள்….!!!
வரவேற்கப்பட வேண்டிய, வாழ்த்தப்பட வேண்டிய விஷயம்.

.
—————————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to போர்ச்சுக்கல் சர்ச்சில் கணேசரும், ஜெர்மனியில் காமாட்சியும்…..

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    இங்கே நம் மக்களும் இப்படித்தான் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும்,
    அரவணைத்துச் செல்லும் போக்குடனும் இருந்தார்கள்.
    பாஜக /ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு வந்த பிறகு ஃபாசிஸ்டுகள்
    பிறமதத்தினரை துன்புறுத்துவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். மக்களிடையே
    மதவெறியை புகட்டுகிறார்கள். கலவரங்களை தூண்டுகிறார்கள்.
    இந்த நிலையை பெரும்பாலான மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். இந்த ஃபாசிஸ்டுகள் எத்தனை தூண்டி விட்டாலும், இந்தியா என்றுமே அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்லும் நாடாகவே இருக்கும். பெரும்பாலான
    இந்தியர்கள் அதையே விரும்புகிறார்கள்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      @ அரவிந்தன் – நான் அப்படி நினைக்கவில்லை. ‘மத மாற்றம்’ அதுவும் பிரச்சாரம் செய்து தீவிரமாக மதமாற்றம் நிகழ ஆரம்பித்ததிலிருந்து இந்த உணர்வு இருக்கு என்று எனக்குத் தோன்றுகிறது.

      அப்புறம் 60களிலிருந்து தீவிரமாக ‘சிறுபான்மையினர்’ என்று ஓட்டு வேட்டைக்காக மக்களிடையே பிளவு உண்டாக்கியவர்களும் இந்த உணர்வை இந்துக்களிடையே தானாகவே வளரக் காரணமானவர்கள்.

      பாஜக ‘மத ரீதியான விஷயத்தை’ எடுக்கும்போது (இந்த ஆட்சியில இதுவரை அடக்கிக்கிடந்த உணர்வுதான் பீறிடுகிறதா என்று தோன்றுகிறது. ஆனால் இது ரசிக்கும்படி இல்லை. லாஜிக் இல்லாமல், ‘காதலர் தினத்தை’ எதிர்க்கறேன், மாட்டு இறைச்சியை எதிர்க்கறேன் என்று தடி எடுத்தவனெல்லாம் இந்து மதக் காப்பாளனாக வேடம் கட்டிக்கொண்டு வருகிறார்கள். எவனுமே, அப்பாவியைத் துன்புறுத்தினால், அவனை உடனே வெளிவரமுடியாத தடா/பொடா போன்ற சட்டங்களில் உள்ள தள்ளணும்.) மக்கள் போலரைஸ் ஆயிடுவாங்க. இப்போ இல்லை என்றாலும் இனி நடக்கும். ஆனால் அது இந்தியாவுக்கு நல்லதல்ல. ‘மதம்’ அரசியலில் எந்த தேசத்தில் நுழைந்தாலும், அது (1) ஆட்சியாளரை சர்வாதிகாரியாக்கி தேசத்தின் வீழ்ச்சிக்கு அடிகோலியிருக்கிறது (2) ஆட்சி செய்பவர்கள் இந்த உணர்வையே மக்களிடையே ஊட்டிக்கொண்டு, தாங்கள் ஊழலில் திளைத்திருந்திருக்கிறார்கள். உலக வரலாறு இதைத்தான் நமக்குப் படிப்பினையாகச் சொல்கிறது.

      இதைத்தான் ‘சாதி’, ‘சிறுபான்மை’ என்ற விஷயத்தை வைத்துக்கொண்டு மக்களைப் பிளந்த கருணாநிதி, தானும் தன்னைச் சார்ந்தவர்களும் ஊழல் செய்து, பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆனபோது பார்த்தோம்.

      என் தனிப்பட்ட எண்ணம், ‘மதமாற்றம்’ என்று தீவிரமாகச் செயல்படுவதையும், இந்தியர்களை, ‘சிறுபான்மையினர்’ என்ற பெயரால் சலுகைகள் கொடுத்துப் பிரிப்பதையும் நிறுத்தினாலே, அமைதி நிலவும். மதங்களை முன்னிறுத்தி எந்த உதவியையும் யாரும் செய்யக்கூடாது. மதத்தின் பெயரால் வெளி நாடுகளிலிருந்து எந்தப் பணமோ/உதவியோ பாரதத்துக்கு வரக்கூடாது. அரசியல்வாதிகளுக்கு ‘மதங்களில்’ வேலை இருக்கக்கூடாது.

  2. புரட்சி தமிழன்'s avatar புரட்சி தமிழன் சொல்கிறார்:

    சில வருடங்களுக்கு முன், விழுப்புரம் அருகில் உள்ள சிறுவந்தாடு என்னும் கிராமத்தில் , பொங்கல் கொண்டாடும் சமயத்தில் மதமாற்ற கும்பல் ஒன்று வீடு புகுந்து அவர்களை பொங்கல் கொண்டாட விடாமல், மத சம்பத்தப்பட்ட வழிபாடுகளில் ஈடுபட்டதை , அந்த கிராமத்தில் பாதிக்க பட்ட ஒருவர் ஒரு பிரபல பத்திரிக்கையில் கவலையோடு குறிப்பிட்டிருந்தார் .
    இந்த அழகில் யாரை குற்றம் சொல்லுவது என்று , நடுநிலைமையோடு ஏன் யாராலும் கட்டுரை வரைய முடியவில்லை .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.