அப்படியானால், ஈழத்தில், இறுதி நாளில் 40,000 படுகொலைகள் நடந்ததற்கு – இந்த படுபாவி தான் பொறுப்பா…?


அப்படியானால், ஈழத்தில், இறுதி நாளில் 40,000 படுகொலைகள்
நடந்ததற்கு – இந்த படுபாவி தான் பொறுப்பா…?

ஒரு பயங்கரமான உண்மை இப்போது சுயவாக்குமூலமாக வெளிப்படுகிறது.
ஈழத்தில் நடந்த இறுதிப்போரின் கடைசி 2 வாரங்களை நான் தான் முழுக்க முழுக்க பொறுப்பேற்று நடத்தினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் ஒருவர்.

இது தற்பெருமைக்காக சொல்லப்படுகிறதா அல்லது தனது வீரத்தை அல்லது கொலைகாரத்தனத்தை தென்னிலங்கையும், உலகமும் அறிந்து மெச்ச வேண்டுமென்பதற்காக சொல்லப்படுகிறதா….?

அல்லது இனி என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்கிற அகந்தையில் சொல்லப்படுகிறதா…?

இவர் சொல்வது உண்மையானால், நடேசன் உட்பட வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த 200 பேர்களும், மற்ற 40,000 அப்பாவி சிவிலியன்களும் படுகொலை செய்யப்பட்ட காரணத்திற்காக, போர்க்குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச சமூகத்தின் விசாரணைக்கு இவர் உட்படுத்தப்பட வேண்டுமல்லவா…?

———————-

….

இறுதி யுத்தத்தை நடத்தியவன் நான்;உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் தலைமறைவாகியிருந்தனர்-உண்மையை போட்டுடைத்தார் ஜனாதிபதி

( http://thinakkural.lk/article/19326 )

September 28, 2018 இறுதி யுத்தத்தை நடத்தியவன் நான்;உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் தலைமறைவாகியிருந்தனர்-உண்மையை போட்டுடைத்தார் ஜனாதிபதி

——–

இறுதி யுத்தம் முடிவுறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் விமானம் மூலம் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டம் தீட்டியிருந்ததாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐ.நா.பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி, நியூயோர்க்கில் உள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே மேற்கண்ட தகவலை முதற்தடவையாக தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில்,உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற வேளையில் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

போரின் முக்கிய கட்டத்தில் இவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியது ஏன் என்று யாருக்கும் தெரியாது,
எனக்கு மாத்திரம் தான் அது தெரியும்.

அவ்வேளையில் விடுதலைப்புலிகள் தலைநகர் கொழும்பை விமான உதவியுடன் தாக்குவதற்கு திட்டம் தீட்டியிருந்தார்கள்.அதனால் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் தலைமறைவாகினர். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களையும் பிரதி பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் நான் அதனை கையிலெடுத்து முன்னெடுத்து சென்றேன்.

எனவே நான் முன்னின்று நடத்திய இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டுவாரங்களில் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு மாத்திரமே தெரியும்.என்னுடைய தலைமையின் கீழ் நடந்த அந்த இறுதிப்போரில் படையினர் எந்த பொற்குன்றங்களையும் செய்யவில்லை.அவர்கள் போர் விதிமுறைகளை மீறாமல் அந்த போரை நடத்தி வெற்றியை பெற்றுத்தந்தார்கள்.

.
——————————————

இந்த படுபாவியைப்பற்றி விக்கிபீடியா தரும்
சில அதிர்ச்சியான தகவல்கள்….
( https://en.wikipedia.org/wiki/Maithripala_Sirisena )

Controversy –

Nepotism and Corruption-
Despite pledges made during the presidential campaign,
Sirisena has himself been accused of nepotism since becoming
president.

A few days after Sirisena took power in January 2015, his
brother Kumarasinghe Sirisena was appointed chairman of the
state-owned Sri Lanka Telecom. The appointment came despite
objections from Prime Minister Ranil Wickremesinghe and
several other cabinet ministers.

Sirisena’s son-in-law Thilina Suranjith Wewelpanawa
(Chathurika’s husband) was appointed public relations officer
at the Ministry of Defence in February 2015 – Sirisena is
Minister of Defence.

In September 2015 Sirisena’s son Daham accompanied his father
as he visited New York City for the Seventieth session of the
United Nations General Assembly. Despite having no official
role, Daham Sirisena sat with the Sri Lankan delegation in the
United Nations General Assembly and accompanied his father as
he met world leaders such as Prime Minister of India Narendra
Modi and President of the Swiss Confederation Simonetta
Sommaruga.

Sirisena’s daughter Chathurika, who also has no official role,
has been the guest of honour/chief guest at several Ministry
of Defence events.

At another event where Chathurika was chief guest, she was
accompanied by members of the Presidential Security Division.

In 2018 his Chief of Staff I.H.K. Mahanama was arrested by
officials of the Commission to Investigate Allegations of
Bribery or Corruption (CIABOC) while accepting a bribe of
Rs.20 million from an Indian businessman as a part of a Rs.100
Million bribe for helping the acquisition of the Kantale Sugar
Factory.

Mahanama, the Chief of Staff of the President, in his previous
role as Secretary to the Ministry of Lands had secured Cabinet
approval to auction scrap material of the factory, assets
which were claimed by M G Sugars Lanka (Pvt) Ltd under the
agreement.

The company then filed arbitration proceedings in a Singapore
tribunal to stop the Government of Sri Lanka from selling the
machinery and scrap. The investors sent letters to PM’s office
which recommended them to complain to the CIABOC which
launched investigations.

However despite the investigations Mahanama was appointed by
Sirisena as his Chief of Staff.

Centre for Human Rights (CHR) question how Sirisena appointed
Mahanama as his Chief of Staff while he was under corruption
investigations.

.
————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அப்படியானால், ஈழத்தில், இறுதி நாளில் 40,000 படுகொலைகள் நடந்ததற்கு – இந்த படுபாவி தான் பொறுப்பா…?

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    International Soceity ஆண்டுகள் பல கடந்தும் விசாரணை நடத்தாத தைரியம் தான்
    இப்படிப் பேசும் துணிச்சலை இந்த கொலைக் குற்ற கொடுமையாளருக்கு கொடுத்திருக்கிறது.

  2. Mercy's avatar Mercy சொல்கிறார்:

    KM Sir this message made me sick because our whole family people are teachers.So I am sending it to you.
    https://tamil.oneindia.com/news/india/abvp-activists-call-mandsaur-professor-anti-national-he-touches-feet-330802.html

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      பகிர்வுக்கு நன்றி மெர்சி. நான் குறிப்பிட்டிருந்ததைப்போல போலி “இந்து மதக் காப்பாளர்கள்”, “போலி தேசபக்தர்கள், இவர்களைப்போன்ற ஏபிவிபி கும்பல்”, சமூகத்திலிருந்தே களையப்படவேண்டும். இறைவன் கருணையினால்அந்த பேராசிரியர் மாற்றுமதத்தைச் சேர்ந்தவராயிருந்தால் விபரீதமாகியிருக்கும். அந்த மாணவர்கள் அத்தனைபேரையும் டிஸ்மிஸ் செய்தால் என்ன. இவர்கள் படித்து என்ன கிழிக்கப்போகிறார்கள்? (assuming this news is not fake. தமிழ் ஒன் இந்தியா, வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்கும் தயாரிக்கப்பட்ட செய்திகளையும், இந்து மதத்திற்கு எதிரான செய்திகளையும் வெளியிடுவதில் புகழ்பெற்றவர்கள். அது சிறுபான்மையினரால் கன்ட்ரோல் செய்யப்படும் செய்தித் தளம்)

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      Mercy

      உங்கள் உணர்வுகளும், வருத்தமும் எனக்கு நன்றாகவே புரிகிறது.

      இதை ஏற்கெனவே நான் உணர்ந்திருப்பதால் தான் தொடர்ந்து என் இடுகைகளில் இத்தகைய போக்குகளுக்கு எதிராகவும், கண்டித்தும் எழுதி வருகிறேன்.
      எனக்கு பாஜக /ஆர்.எஸ்.எஸ்.- ஆல் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, வெறித்தனமாக பல கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன… தங்கள் கையில் ஆட்சி இருக்கிறது என்கிற திமிரில் எதை வேண்டுமானாலும் செய்யத்துணிகின்றன. யாரை வேண்டுமானாலும் அவமானப்படுத்த முனைகின்றன…. தமிழகத்தில் கூட இதைத்தான் பார்த்து வருகிறோம். சேகர்களும், ராஜாக்களும் பொதுவாழ்வில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை…

      எனக்கு இறை நம்பிக்கை இருக்கிறது…
      இன்றில்லா விட்டாலும், நாளையாவது இத்தகைய அட்டூழியங்களுக்கெல்லாம் ஒரு முடிவு வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
      மத அபிமானம் வேறு… மத வெறி வேறு என்பதை உணர வேண்டும்.
      மத அபிமானம் சகஜம்… எந்த தவறும் இல்லை. மதவெறி அபாயகரமானது – அழிவில் கொண்டு போய் விடும்.மக்கள் நிதரிசனத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
      காலம் மாறும்… காத்திருப்போம்… தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வோம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    இதைப் படித்தேன்….. எனக்கென்னவோ ‘கர்ணன்’ படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் மஹாபாரதத்தில் உள்ளதாகச் சொல்லப்படும் நிகழ்வு நினைவுக்கு வந்தது.

    கர்ணனை நீ கொன்றுவிட்டாய் என்று கலங்குகிறாயே விஜயா…. அவனை ஏற்கனவே பலர் கொன்றுவிட்டனர்…. என்று ஒவ்வொரு நிகழ்ச்சியாக வரும்…

    இலங்கை அதிபர் சிறிசேனா, அரசியல் லாபத்துக்காக இதனைச் சொல்கிறாரா (சிங்கள வாக்குகள்) என்று சரியாகத் தெரியவில்லை. அனேகமாக அவலை நினைத்து உரலை இடிக்கிறார். Backfire ஆகாமல் இருந்தால் சரிதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.