நிஜங்களை மட்டுமே பேசி பதவிக்கு வந்து, மீண்டும், மீண்டும் நிஜம் மட்டுமே சொல்லும் ஒரு அற்புதத் தலைவர் ……..!!!


முன் குறிப்பு – ஸ்ரீதரின் கல்யாண பரிசு திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் கே.ஏ. தங்கவேலுவின் மன்னார் அண்ட் கோ
கதாபாத்திரம் நினைவிற்கு வருகிறதா (” அட டூப் அடிக்க விடமாட்டேங்கறானே ” )……? வரவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம்… இந்த இடுகையை படிக்கும்போது உங்களுக்கு அது நினைவிற்கு வந்து விடப்போகிறதே என்கிற கவலையில் தான் இதை எழுதினேன்… 🙂

மற்றபடி, இதைக்கூட என் இடுகை என்றே சொல்ல முடியாது….சில சமயங்களில் நான் just செய்தியை மட்டும் எடுத்துப் போட்டால் போதுமானதாக இருக்கிறது… தனியாக இடுகையே தேவைப்படுவதில்லை…. இது, தினமணி நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தி… அவ்வளவே…!!!

———————

மோடிஜி சொல்வது போல கடந்த 4 ஆண்டுகளில்
35 விமான நிலையங்கள் திறக்கப்பட்டதா?

By ENS | Published on : 26th September 2018 10:54 AM

புது தில்லி: கடந்த 4 ஆண்டுகளில் அதாவது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் சுமார் 35 விமான நிலையங்கள் திறக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

அதாவது, கடந்த திங்கட்கிழமை சிக்கிமில் இந்தியாவின் 100வது விமான நிலையத்தை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 2014ம் ஆண்டு வரை இந்தியாவில் 65 விமான நிலையங்கள் மட்டுமே இயங்கி வந்ததாகவும், பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் 35 விமான நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிப்பது என்னவென்றால், இந்தியா சுதந்திரம் அடைந்து 2014ம் ஆண்டு வரை 94 விமான நிலையங்கள் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி மக்களவையில் விமானப் போக்குவரத்துத் துறை அளித்த பதிலில், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 125 விமான நிலையங்கள் உள்ளன.

இதில் 95 விமான நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. 31 விமான நிலையங்கள் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே போல 2018ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி மக்களவையில் அளிக்கப்பட்ட பதிலில், 101 விமான நிலையங்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும், இதில் 86 விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், மோடி குறிப்பிட்டது போல வெறும் 65 விமான நிலையங்கள் இயங்கி வந்ததாகவும், தற்போது இது 100 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறுவதில் உண்மையில்லை என்பதும், பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 7
விமான நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

(www.dinamani.com/india/2018/sep/26/மோடி-சொன்னது-போல-கடந்த-4-ஆண்டுகளில்-35-விமான-நிலையங்கள்-திறக்கப்பட்டதா-3008307.html )

.
————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to நிஜங்களை மட்டுமே பேசி பதவிக்கு வந்து, மீண்டும், மீண்டும் நிஜம் மட்டுமே சொல்லும் ஒரு அற்புதத் தலைவர் ……..!!!

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    புள்ளியாேடு நிறுத்திக் காெள்ள வேண்டும் …விவரங்களுக்குள் செல்லக் கூடாது …! எல்லாமே நடக்கும் ..எல்லாமே கடந்து பாேகும்…?
    அடுத்து காலங்காலமாக இருந்துவருகிற குடும்ப உறவுகள் நம்நாட்டில் பேனிக் காக்கப்படுவதால் தான் வெளிநாட்டினரும் நம்முடைய கலாச்சாரங்களை மதிக்கிறார்கள் என்பது பாெதுவான கருத்து ..உண்மை ..!

    ஆனால் தற்பாேது உச்ச நிதிமன்ற தீர்ப்பு ஒன்று : // கள்ளக்காதல் கிரிமினல் குற்றமில்லை.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு // https://tamil.oneindia.com/news/india/adultery-law-sc-will-give-verdict-on-section-497/articlecontent-pf328013-330674.html ….கலாச்சாரம் காலி … கணவன் மனைவி உறவு …? எல்லாம் கலிகாலம் …? எதுவும் நடக்கும் …!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.