…
…

…
ஜெயலலிதா அவர்கள் 16 வயதில் தனக்கு நேர்ந்த
சில அனுபவங்கள் பற்றி, தனது சொந்த வார்த்தைகளிலேயே
சொல்லி இருக்கிறார்… படிக்கவே, பரிதாபமாக இருக்கிறது….
உலக அனுபவமே இல்லாமல், சரியாக யோசிக்கவே தெரியாத,
ஒரு வெகுளிப் பெண்ணாகவே அவர் வாழ்ந்திருக்கிறார்….
16 வயது அப்பாவி ஜெ….யின் அனுபவங்களைப்பற்றி,
அவரது வார்த்தைகளிலேயே படித்து விட்டு –
66 வயதில், நாம் பார்த்த, அனைவரையும் பிரமிக்க வைத்த
ஜெ. அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ….
அப்பப்பா எவ்வளவு வித்தியாசம்….!!!
ஜெ…..எல்லாவற்றிற்கும் தாயையே சார்ந்து வாழ்ந்த இளம் வயதில் –
திடீரென எதிர்பாராத நிலையில் தாயை இழந்து,
அந்த இளம் வயதில் அவரைப் பாதுகாக்க தகுந்த துணை இன்றி,
வாழ்க்கையில் தன்னந்தனியாக எதிர்கொண்ட அனுபவங்கள்,
எதிர்நீச்சல் போட வேண்டிய அவசியங்கள், தனிமையான வாழ்க்கை,
என எல்லாமாகச் சேர்ந்து, அவரைத்தான் எந்த அளவிற்கு மாற்றி
விட்டது…!!!
……………..
கீழே – ஜெ.அவர்களின் கட்டுரை…
( நன்றி : குமுதம் வார இதழ்… )
….





.
——————————————————————————–



பிங்குபாக்: ஜெ………16 வயது அனுபவங்கள்…!!! – TamilBlogs
Wow.. She had the courage to reveal the true colors of MGR. Irony is, the same JJ let her party people to fall in the tyres of her vehicle
கே.எம்.சார்,
கீழே இருப்பதும் நீங்கள் எழுதிய வார்த்தைகள் தான் –
// வாழ்க்கையில் நல்ல அனுபவங்களே நம்மை செம்மைப்
படுத்துகின்றன. ஆணோ, பெண்ணோ – சிறு வயதில் அவர்கள்
வளர்க்கப்படும் விதம், பின்னர் அவர்கள் வளரும் சூழ்நிலை,
எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஆகியவை தான் அவர்களின்
குணாதிசயங்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு
வகிக்கின்றன.//
உண்மை தான். அவரவர் சந்திக்கும் அனுபவங்கள் தான்
அவர்களின் குணாதிசயங்களை உருவாக்குவதில் முக்கியத்துவம்
பெறுகின்றன.
இவரே, பின் எல்லோரும் எழுவதுமல்ல, காலில் விழுவதையும் ஊக்குவித்தாரே! அப்போ இது மனநோயா?
இதை மனநோய் என்றால், இது இல்லாத தமிழக அரசியல்வாதிகள் இல்லை, கருணாநிதி முதற்கொண்டு.
Now I understand why she wanted men to prostrate in front of her. “People like you made me tough!” Watch her interview with Thappar,
ஜெ. அவருடைய தாயாரை மிகவும் சார்ந்திருந்தார். இந்தத் தொடர் ஒரு சமயத்தில் எம்.ஜி.ஆரால் நிறுத்தப்பட்டது (எங்கே விவகாரமான விஷயங்களையும் சொல்லுவாரோ என்று)
இங்கு எழுதுபவர்கள் எல்லோரும், ஏதோ எம்ஜியாரும் ஜெ.வும் மற்றவர்களை மரியாதை கொடுக்கும்படி வற்புறுத்தியதுபோல் சொல்கிறார்கள். பொதுவா இந்த மாதிரி விஷயங்களை ஆரம்பிப்பது ‘அல்லக்கைகள்’. அவங்கதான் ‘ஒட்டுவாரொட்டி’யாக இருந்து தங்களுக்குத் திறமையில்லாமல், அடுத்தவர்களை அண்டிப்பிழைப்பவர்கள். இப்படி பில்டப் கொடுத்து, சாதாரணமாக இருப்பவர்களையும், ‘வேண்டுமென்றே மரியாதை கொடுக்கவில்லை’ என்று போட்டுக்கொடுத்து பிரச்சனையை உண்டாக்குபவர்கள். அதனால் படப்பிடிப்பும் தாமதப்படலாம் இல்லை நிறுத்தப்படலாம். இந்த விஷயங்களில் பல அந்த அந்த கதாநாயகர்களுக்கே தெரியாது.
ஜெ. பல முறை, தன் கால்களில் விழவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். விழுபவர்கள், அடுத்தவர்களைவிட தான் இன்னும் கவனிக்கப்படவேண்டும் என்று மரியாதையை அதிகப்படுத்திக்கொள்கிறார்கள். முதலில் வணக்கம், அப்புறம் கும்பிடு, அப்புறம் குனிந்து கும்பிடு, கண்ணாடி போன்ற சட்டைப் பாக்கெட்டில் ஜெ படம், பிறகு முதுகு வளைத்து கும்பிடுவது என்று கொஞ்சம் கொஞ்சமாக யோகா செய்திருக்கிறார்கள். இதற்கு ஜெ.வை எதற்கு குற்றம் சாட்டவேண்டும்? அவருக்குத் தெரியாதா, இவர்கள் ‘காரியக்காரர்கள்’ என்று.
ஜெயா 16 வயதில் எப்படி இருந்தாரோ அப்படியே 66 வயதிலும் .
நான் ஏன் எழுந்து நிற்கணும் ? என் இஷ்டமில்லைன்னா
எழுந்து நிற்க வேண்டியதில்லை ! – இது ஜெயா சொன்னது .
அம்மையார் அந்த வீம்பை கடைசி வரை கைவிடவில்லை .
அம்மே என்று அனைவரும் காலில் விழ வேணும் .
காலில் விழாதவர்கள் அத்தோடு காலி !
இதை பத்திரிக்கைகள் அம்மாவின் ஆளுமை என்று துதி செய்தன .
கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வார் –
ஆல் இன் ஆல் அழகுராஜா ஒரு நல்லவரு , ஒரு வல்லவரு ன்னு
சும்மா அடிச்சு விடனும் .
தலைவர்களுக்கும் ஒரு “இமேஜ் ” தேவை !
அது போல் புதியவன் சொல்வதில் உண்மை இருக்கிறது .
எல்லாம் கூட இருக்கும் அல்லக்கைகள் செய்யும் வேலை .
எடுபிடிதான் சொல்லும் – பின்ன தலைவரா வந்து சொல்வாரு ?
ஜெயா தன்னை புகழ்வதை ரசித்து பார்த்தவர் .
ஜெயா காலில் விழ வேண்டாம் என்றால் விழணும் என்று அர்த்தம்
தனக்கு அடங்காத எம் ஜி ஆர் விசுவாசிகளை ஒழித்து விட்டார் .
சசிகலா ஜெயாவை ஒரு நாளும் எதிர்த்து பேசியதில்லை .
அதனால்தானோ என்னவோ அவ்வளவு நாள் குப்பை கொட்ட முடிந்தது .
மெய்ப்பொருள் – உங்கள் பின்னூட்டத்தை இப்போது படித்துப்பார்த்தேன்.
//அம்மாவின் ஆளுமை என்று துதி செய்தன .//
இதில் ஜெ.வைத் தனித்துச் சொல்ல ஒன்றும் இல்லை. அரசியல் செய்வது என்பது சுலபமல்ல. விசுவாசிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களை அல்லது ரெகமெண்ட் செய்யப்பட்டவர்களை எம்பி கேண்டிடேட்டுகளாகவும் எம்.எல்.ஏ கேண்டிடேட்டுகளாகவும் தேர்ந்தெடுத்து, தன் ஆளுமையை வைத்து கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாவின் துணிச்சல், சாமர்த்தியம், ஆ ளு மை, சுலபமானது அல்ல. அது எதனால் சுலபமானது என்றால், ‘மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்’ என்ற ஒற்றைச் சொல்லினால்தான் சுலபமானது. அப்படியும் அவரை எதிர்த்து வீழ்ந்தவர்களில் தாமரைக்கனி, வலம்புரி போன்ற பலர் உள்ளனர். கடைசி காலகட்டத்தில் ‘திமுக திருச்சி எம்பியுடன் தனிப்பட்டமுறையில் அநாகரீகமாகப் பேசப்பட்ட தற்போதைய அதிமுக எம்பியும்’ இதில் உண்டு.
ஜெ.வைப் பற்றித் தவறாகச் சொன்னவர்கள் எல்லோரும், ஜெ.வின் காலடியில் வீழ்ந்துகிடந்தது வரலாறு. ஜெ.வுக்கு கட்சியும் அதை வழிநடத்திச் செல்ல தனக்கான வீரர்களும் முக்கியம் என்பதால், அவர்களின் பழங்காலப் பேச்சுக்களைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் சேர்த்துக்கொண்டார் (ஜானகி அம்மையாரைப் பார்த்தால் கும்பிடத் தோன்றுகிறது, ஜெ.வைப் பார்த்தால் கூப்பிடத் தோன்றுகிறது என்று பேசிய காளிமுத்து, ஜெ தலைமை தாங்கிய அதிமுகவில் பெட்டிப்பாம்பாக தலையாட்டி பொம்மையாக இருந்தது வரலாறு. ஜெ.வை மிகத் தீவிரமாக எதிர்த்து அரசியல் செய்யத் துணிந்த, அதற்காக அதிமுக கட்சியையே பிளவாக்கவும் துணிந்த ஆர்.எம்.வீ அவர்கள், பிறகு ஜெ. காலடியில் இருந்ததும், ஜெ. அவர் மீது எப்போதும் சந்தேகப் பார்வை வைத்திருந்ததால் வேறு வழியில்லாமல் கருணாநிதி காலடியில் இருந்ததும் வரலாறுதான். இதைப்போல எல்லா முன்னாள் அதிமுக தலைவர்களையும் சொல்லலாம்).
திமுக, பாமக, விசி, தேதிமுக போன்ற கட்சிகளில் மாத்திரம் இந்த மாதிரி இல்லையா? மூர்த்தி பாராளுமன்ற உறுப்பினராக சிறப்பாகச் செயல்பட்டதால், எங்கே அன்புமணி ப்ரொஜெக்ட் செய்வது சரியாக வராமல் போய்விடுமோ என்று மூர்த்தியை டம்மியாக்கியது பாமக. இப்போதும் துரைமுருகன் ஸ்டாலின் அருகில் கூனிக் குறுகி இருப்பதையும் ஸ்டாலின் சொல்லும் தவறான விவரங்களைக் கேட்டுக்கொண்டும் பம்முவதையும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்களே. இன்னும் கருணாநிதி பற்றி எழுதினால் நீண்டுவிடும். கருணாநிதியினால், ஆசைப்பட்டும் செய்யமுடியாததை ஜெ. செய்துகாண்பித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. கட்சி நடத்த இத்தகைய தைரியம், வீரம் மிக முக்கியமானது. (கா.மை. சாரின் ‘பெண்கள்’ இடுகையையும் நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஜெ. வெகு அபூர்வப் பிறவி)