மாடுகளுக்காக மனிதரை வதை செய்யும் வெறி பிடித்த கூட்டம்….

..
..

மாடுகள் பத்திரமாக இருந்தால்,
மனிதர்களும் பத்திரமாக இருப்பார்கள்
என்று கருத்து முத்துகளை சிதறும் – இந்த நாட்டின்
மிகப்பெரிய மாநிலத்தின் முதலமைச்சர்….

..

..

மக்கள் பசுமாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால்,
நாட்டில் ஆங்காங்கே நடக்கும் அப்பாவிகளை
அடித்துக்கொல்லும் குற்றத்தையும் தடுக்க முடியும்
என்று சொல்லும் ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார்…

..

..

ராம் கர்ஹ் -ஐச் சேர்ந்த அலிமுத்தீன் அன்சாரியை அடித்துக் கொன்ற
வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, பின் ஜாமீனில் வெளிவந்துள்ள
கொலைக் குற்றவாளிகளுக்கு மாலையிட்டு, வரவேற்கும் …..
மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா –
..

..

21 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது என்று
மார் தட்டிக்கொண்டது மறந்து போய் –
சட்டம், ஒழுங்கு மாநில அதிகாரத்திற்குட்பட்ட விஷயம்…
இதற்கு மத்திய அரசு எப்படி பொறுப்பாகும்…?
இதில் மோடிஜியை எப்படி குறை சொல்ல முடியும்
என்று வெட்கமில்லாமல் கேட்கும் அதே வாய்கள்…!!!

“இங்கே மனிதராக பிறப்பதை விட, மாடாகப் பிறந்தால் பத்திரமாக
இருக்கலாம்” என்று யாராவது சொன்னால், அதிலென்ன தவறு….?
அதை உண்மை என்று தானே நிரூபித்துக் கொண்டிருக்கின்றன
இந்த மனித விலங்குகள்…

” பேய்கள் ஆட்சி செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள் “….

.
———————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to மாடுகளுக்காக மனிதரை வதை செய்யும் வெறி பிடித்த கூட்டம்….

  1. பிங்குபாக்: மாடுகளுக்காக மனிதரை வதை செய்யும் வெறி பிடித்த கூட்டம்…. – TamilBlogs

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    Add to dictionary.

    மனித விலங்குகள் = ஆர்எஸ்எஸ்/பாஜக பயங்கரவாதிகள், வெறியர்கள்.

  3. Nalini's avatar Nalini சொல்கிறார்:

    The only way to keep people safe, ” Keep away BJP and RSS” they are more dangerous than animals.

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    தந்தி டிவி கருத்து கனிப்புகள்: பாஜக/மோடி தீண்டத் தகாதவர்கள் தான் தமிழகத்தில் என்று மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

    இதுகள் கூட தமிழகத்தில் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படப் போகிறது.

    இது இந்திய அளவிலும் எதிரொலிக்கனும்.

    அதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நடிகர்களுக்கு அதிகம் ஆதரவு இல்லை என்பது தான்.

      பாமக நிலையும் பரிதாபமாக தான் இன்னும் இருக்கிறது.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      இந்த அசெஸ்மெண்ட் சரியில்லை. தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக்கட்சிகளுக்கு இடம் இல்லை. இங்கு மாநிலக் கட்சிகள் கோலோச்சும்.

      முன்பு திமுக, அதிமுக கட்சிகள் எப்படி தேசியக் கட்சிகளை ஒழித்தனவோ அதேபோன்று பாமக, வி.சி, நாம் தமிழர் போன்ற பல்வேறு கட்சிகள், திமுக அதிமுகவின் வாக்குவங்கியைப் பகிர்ந்துகொள்கின்றன.

      இது இந்திய அளவில் எதிரொலிக்காது. எப்போது காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை மீண்டும் வருகிறதோ, அப்போதுதான் இரு கட்சி ஆட்சியில் இந்தியா சிறப்பாக இருக்க வாய்ப்பு.

      • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

        ///எப்போது காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை மீண்டும் வருகிறதோ…///

        காங்கிரஸ் மீது நம்பிக்கை வரும் முன்னர், மக்கள் பாஜக மீது அதீத வெறுப்படைந்தால் காங்கிரஸ் வந்தாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வர வாய்ப்பிருக்கு.

        ராகுல் காந்தியின் பாராளுமன்ற பேச்சுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும் போது மக்கள் அந்த முடிவிற்கு வந்துவிட்டார் போல் தான் தெரிகிறது.

        நல்லதே நடக்கட்டும்.

  5. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பாஜக, மக்களுக்கான கட்சி என்ற நிலையை மாற்றி, இந்துக்களையும் மனதில் வைத்திருக்கும் கட்சி (காங்கிரஸ், திமுக போன்று சிறுபான்மையினர் என்று சொல்லி இந்துக்களுக்கு எதிராக இருக்காமல்) என்ற நிலையிலிருந்து, ஓவாயிஸ் போன்ற கருத்துக்களைப் பின்பற்றினால், அல்லது அத்தகைய நபர்களை ஊக்குவித்தால் (உடனே நடவடிக்கை எடுக்காமல்), பாஜக அபிமானிகளும் அவர்களைவிட்டு விலகிவிடுவார்கள். மக்களுக்குத் தேவை fair government, முடிந்த அளவு ஊழலில்லாத கட்சி.

    பல்வேறு செய்திகளைப் படிக்கும்போது, பாஜக, ஓவையிஸ் பாணியில் இறங்கி, காங்கிரசை மிதவாதக் கட்சி என்று ஆக்கிவிடும்போல் தெரிகிறது.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      ஓவாயிஸ் என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. வெறுப்பு பேச்சுக்கு வெறுப்பான பேச்சு என்று இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது தான்.

      ஆனால், அவர் சார்ந்த கட்சி, அமைப்பு எதிர் தரப்பினர் மீது வன்முறையில் இறங்குகிறதா….? எதிர் தரப்பினரை கொன்று குவிக்கிறதா…?

      அறிய தரவும்.

      பதில் அப்படி இல்லை என்றால்….ஒப்பீடு சரியாக இருக்குமா….?

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        ஓவாயிஸ் எப்போதும் வெறுப்பு உமிழும் பேச்சு பேசுபவர். நீங்கள் கூகிளிட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதைப்பற்றி மேலும் நான் எழுதப் போவதில்லை. (தேவையில்லாமல் மத reference வந்துவிடும்)

        பாஜக ஆட்சிக்கு வந்தபின்பு, பாஜகவின் ஓவயிஸுகளுக்குத் துளிர் விட்டு, வெறுப்பு உமிழும் பேச்சுக்களைப் பேசுகின்றனர். பொதுவா இந்து மதத்தில் சகிப்புத் தன்மை உள்ளவர்கள் மிக அதிகம். அதனால், பாஜகவின் ஓவயிஸுகளினால் பாஜகவின் ஆதரவுத்தளம் குறையவே வாய்ப்பு அதிகம்.

        நமக்கு முதல் தேவை, உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றுக்கே பெரும்பாலானவர்களுக்குக் கஷ்டம். விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது. இதனைக் கவனிக்காமல், மதங்களைப் பற்றிப் பேசினால் வாக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்று பாஜக கருதுமானால், அதற்கு சுத்தமாக வாய்ப்பு இருக்காது.

  6. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இன்று காங்கிரஸ்,

    ///பாஜக.வை வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே நோக்கம்; மாநில கட்சியின் பிரதமர் வேட்பாளரை ஏற்போம்: காங்கிரஸ் மேலிடம் திடீர் அறிவிப்பு.///

    என்று அறிவித்து உள்ளது.

    மிகவும் வரவேற்கத்தக்க முடிவு. நாட்டின் இன்றைய அரசியல் அவலம் கருதி ராகுலின் மன முதிர்ச்சியை வெளிப்படுத்தும் முடிவு. இவர் உண்மையில் வளர்ந்து வருகிறார்.

    இவர் அரசியலில் இப்படிப் பட்ட அனுகுமுறையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவாராகில் நாளை மக்களே இவரை அழைக்கும் நிலை ஏற்படும்.

    Well done Rahul.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.