115 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ” பத்மாவதி ” நாவல் குறித்து சில சுவாரஸ்யங்கள்…

அ.மாதவையா

அ.மாதவையா

115 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் எழுதப்பட்ட ஒரு
நாவலின் எழுத்து நடையும், மையக்கருத்தும், கதாபாத்திரங்களும்
எப்படி இருந்திருக்கும்…?

————————-

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்,
1879-ல் வெளிவந்த “பிரதாப முதலியார் சரித்திரம்”.
இதை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
இதைப்பற்றி நிறைய செய்திகள் வெளிவந்து விட்டன.

இதையடுத்து இரண்டாவதாக வெளிவந்தது
கமலாம்பாள் சரித்திரம் என்கிற நாவல். இது முதலில்
1893-ல் ‘விவேக சிந்தாமணி’ என்கிற மாத பத்திரிக்கையில்
திரு.பி. ஆர். ராஜம் ஐயர் என்பவரால் தனது 21-வது வயதில்

தொடர்கதையாக எழுதப்பெற்று, 1895-ல் முடிவுற்றது.
பின்னர் அதுவே நாவலாக வெளிவந்தது. ராஜம் அய்யர்
1898 ஆம் ஆண்டில், தன்னுடைய 26-ஆம் வயதிலேயே
இறந்து போனார்.

—————————–

இதன் பின்னர் மூன்றாவதாக வெளிவந்த தமிழ் நாவல் தான்
” பத்மாவதி ” சரித்திரம்….இதை எழுதியவர் திரு.அ.மாதவையா.
இதன் முதல் இரண்டு பகுதிகள் 1898-1899-ல் எழுதப்பட்டன.
மூன்றாவது பகுதி 1924-ல் எழுதப்பட்டிருக்கிறது…. ஆனால்
1925-ல் அவர் இறந்து விட்ட காரணத்தால் முற்றுப்பெறவில்லை…

பத்மாவதி சரித்திரத்தை எழுதிய திரு.அ.மாதவையா
பற்றி சில விசேஷமான குறிப்புகள் கிடைத்திருக்கின்றன….

திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் (1872) பிறந்தார்.
அங்கு பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவக்
கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இவர் நீச்சலில் கில்லாடி. குற்றால அருவியின் உச்சியில்
மூன்று ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து
இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் துணிச்சலுடன் அருவியைக்
கடந்து சாதித்துக் காட்டி இருக்கிறார்.

கடமை வீரர், கடும் உழைப்பாளி, கொடையாளி,
நகைச்சுவை உணர்வு உடையவர். ‘மாதவையா களங்கமற்ற
அதிகாரி. ஒரு எலுமிச்சை பழத்தைக்கூடக் கொடுக்கவோ,
வாங்கவோ மாட்டார்’ என்பார்களாம் சக ஊழியர்கள். கர்னாடக
சங்கீதம், நாட்டுப்புற இசை இரண்டையும் விரும்பிக் கேட்பார்.

தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். தெலுங்கும் தெரியும்.
20 வயது முதல் பத்திரிகைகளுக்கு எழுதினார். விதவை
மறுமணத்தை ஆதரித்தார். சங்க இலக்கியம் முதல் அனைத்து
செவ்வியல் படைப்புகள், அரிய ஆங்கில இலக்கிய நூல்கள்
என ஒரு நூலகம் வைக்கும் அளவுக்கு நூல்களை
சேகரித்திருந்தார்.

‘இந்திய கும்மி’ என்ற கவிதைப் போட்டி 1914-ல் நடந்தது.
இதில்பாரதியாரும் கலந்துகொண்டிருக்கிறவர்….
ஆனால், மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது.
‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ பாடலுக்காக பாரதிக்கு
2-ம் பரிசு கிடைத்திருக்கிறது….!!!

‘பஞ்சாமிர்தம்’ என்ற பத்திரிகையை 1925-ல் தொடங்கினார்.
நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள்,
ஏராளமான கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும்
எழுதியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக
ஆட்சிமன்றக் கூட்டத்தில் –

தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக
சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து
அமர்ந்ததும், மாரடைப்பால் – அந்த இடத்திலேயே உயிர்
பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 53.

“பத்மாவதி” எழுதப்பட்ட காலகட்டங்களில் பெரும்பாலான
கதைகளில், பிராம்மணர்களே கதாபாத்திரங்களாக
உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்….. கதாசிரியர்களும்
பெரும்பாலும், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவே
இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

இந்த கதையும், பிராம்மண கதாபாத்திரங்களையே சுற்றி
வருகிறது. கதாநாயகன் “நாராயணன்”… நாயகி “பத்மி”
என்கிற பத்மாவதி. நாராயணின் அப்பா பாத்திரம்
ஒரு மோசடி பேர்வழியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், நாராயணன் – உத்தமன். அவன் விரும்பும்
( காதலிக்கும்…? ) பத்மாவை சிறு வயதிலேயே வேறு
ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
ஆனால், 12 வயதுச்சிறுமியாக இருக்கும்போதே,
அந்த கணவன் இறந்து, பத்மா விதவையாகி தாய் வீடு
திரும்பி விடுகிறாள்.

அதன் பிறகு அந்த காலத்திலேயே புரட்சிகரமாக,
நாராயணன், பத்மாவை விதவைத்திருமணம் செய்து
கொள்கிறான்….

– இப்படி போகும் இந்த கதையில் கதாசிரியர் மாதவையா
வலியுறுத்தி சொல்வது, பெண் கல்வியின் அவசியம்
பற்றியும், விதவா விவாகத்தை ஆதரித்தும் தான்.

இந்த நாவலின் நடை சுமார் 115 வருடங்களுக்கு முன்னர்
தமிழ்நாட்டில் இருந்து வந்த பேச்சு, எழுத்து, சமூக நிலை
குறித்து விளக்குகிறது.

நமது நண்பர்கள் படித்து ரசிக்க நாவலிலிருந்து ஒரு சிறு
பகுதியை கீழே தந்திருக்கிறேன். அதுவே ஒரு சுவையான
சிறுகதையாகத் தோன்றுகிறது. பிற்காலத்தில்
எடுக்கப்பட்ட பல தமிழ் சினிமாக்களின் கோர்ட் சீன்-களுக்கு
முன் உதாரணம் இங்கேயே கிடைக்கிறது….!!!

இந்த சம்பவத்தில் சிறுவனாக வரும் நாராயணன் தான்
இந்த கதையின் நாயகன்….!!!

————–

இந்த நாவலிலிருந்து ஒரு பகுதி –
அதுவே ஒரு சிறுகதையாக அமைந்திருக்கிறது-
நண்பர்கள் ரசிக்க, கீழே –

pe-1

pe-2

pe-3

pe-4

pe-5

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to 115 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ” பத்மாவதி ” நாவல் குறித்து சில சுவாரஸ்யங்கள்…

 1. Prasad சொல்கிறார்:

  Mr.K.M.

  Your writing Skill is astonishing.
  the interest, involvement and the pain you undertake
  to collect the data, information are really appreciable.
  No wonder you stand high on the hits.
  Congratulations and please continue.

 2. Yogi சொல்கிறார்:

  Dear Sir

  Thanks for sharing

  This was one of the books for teacher training in Sri Lanka those days

  One of those teachers gave that book and I read it

  Some 30 years ago

  Madhavaiyars mother tongue is telugu

  He prefered him to be called Madhavaiyah

  It’s a great loss he passed away at 53

  Loss to tamils

  The details given by you are so interesting

  If possible one day give us an article on

  Devaneyap Paavaanar

  Thank you again maindhan sir

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பிரசாத் மற்றும் யோகி,

   உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. புதியவன் சொல்கிறார்:

  நடை புதியதாக இருக்கிறது. அந்தக் காலத்து எழுத்து. இருந்தாலும் ரசிக்க முடிந்தது. மாதவையா பற்றிக் கேள்விப்பட்டதில்லை.

  வேத நாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்துக்கு முன்பே வேறு ஒரு நாவல் தமிழில் வந்ததாகவும், அது வெளியிடப்படவில்லையாதலால் (புத்தகமாக), பிரதாப முதலியார் சரித்திரம் முதல் நாவல் என்ற பெருமை பெற்றுவிட்டது என்று படித்திருக்கிறேன்.

  நாவல்கள், காலத்தைக் காட்டும் கண்ணாடிகள். அந்தக் காலத்தில் ‘போலீஸ் காசு’ இருந்திருக்கிறது. நாமக்கல் கவிஞர், ரெயில்வேயில் வேலை பார்ப்பவர்கள், பார்சலிலிருந்து பொருட்களைத் திருடுவது சாதாரண வழக்கம் என்றும், ரெயில்வே ஸ்டேஷனில் வேலை பார்ப்பவர்கள் வீட்டில் இப்படித் திருட்டுத்தனமாக வந்த பருப்பு, காய் வகைகளுக்கு ஒரு குறைவுமிராது என்று எழுதியுள்ளார்.

  வித்தியாசமான செய்திகளைப் படிப்பது நன்றாக இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.