87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக
வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி !

ஆச்சரியமாக இருக்கிறதா ?
அந்த அளவிற்கு போய் விட்டதா –
ராகுல் காந்தி இவ்வளவு நேரடியாக கலைஞரை
தாக்கிப் பேசுகின்றாரா என்று கேட்கிறீர்களா ?
இது ராகுல் காந்தி கேரளாவில் நேற்று
முதல்வர் அச்சுதானந்தத்தை குறித்துப் பேசியது.
இதே கருத்து அப்படியே கலைஞருக்கும்,
தமிழ்நாட்டிற்கும் பொருந்தும் தானே ?
சில சமயங்களில் தலைப்புகளும்,செய்திகளும்
என்னமாய் பொருந்துகின்றன !
கீழே கொடுத்திருப்பது நக்கீரன் செய்திகளில் இன்று
வந்துள்ளது. (தலைப்பும் அவர்களுடையதே தான் !)
(முதிர்ச்சி இன்மை என்று இதற்கு தலைப்பு
கொடுத்திருக்கலாம் அல்லவா ! )
———————————–
87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக
வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி !
87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும்
கேரள முதல்வராக வேண்டுமா? என்று மக்கள்
யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக
வாய்ப்பு தந்துள்ள காங்கிரசை ஆதரிக்க
வேண்டுமென ராகுல் காந்தி பிரச்சாரம்
மேற்கொண்டுள்ளார்.
கேரளத்திலும் தமிழகத்தைப் போல வரும்
13-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலை
முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக
ராகுல்காந்தி, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கொச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர்
பேசும்போது,‘’சட்டப் பேரவைத் தேர்தலில்
இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால்,
அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும்
முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்)
உங்கள் முதல்வராக இருப்பார்.
இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா?
———————————–



நிஜமான சாமியாரா இல்லை ….