
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் !!
மேலே காணப்படுவது –
இன்றைய தினம் (22/10/2009) தினமலர் பத்திரிகையில்
வெளியிடப்பட்டு இருக்கும் முழு பக்க வண்ண விளம்பரம் !
இந்த விளம்பரத்தின் மூலம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது –
1) காலன் என்பதற்கு பதில் காலம் என்று போட்டு விட்டால்
போதும். பிறகு தாராளமாக எமதர்மனின் படத்தையும்
எருமை வாகனத்தையும், பாசக்கயிற்றையும் கூட முழு பக்க
அளவிற்கு போட்டுக் கொள்ளலாம்.
அது பகுத்தறிவை மீறியதாகாது !
2) கலைஞரின் துணை இருந்தால் எமனையும் வெல்லலாம் !!
அரசாங்க செலவில் !
3) போன வாரம் கைது செய்யப்பட்ட அதே செய்தி
ஆசிரியரைக் கொண்ட அதே தினமலரில் இந்த வாரம் முழு பக்க
விளம்பரம் அரசு சார்பில் கொடுக்கலாம். இது கிரிமினல் குற்றம்
சாட்டப்பட்ட பத்திரிகைக்கு சாதகமான சமிக்ஞையாக காவல்
துறையால் நிச்சயம் எடுத்துக்கொள்ளப்படாது !!!
4) விவேக் மொழியில் – “ஒரே கல்லுல ரெண்டு மாங்கா “
நடிகைகள் கொதித்ததும், பத்திரிகை ஆசிரியரை கைது செய்து
அவர்களை குளிர்வித்தது;
பத்திரிகை ஆசிரியர் கொதிக்காமல் இருக்க
அரசு செலவில் அதே பத்திரிகைக்கு முழு பக்க வண்ண விளம்பரம் கொடுத்து பத்திரிகை
ஆசிரியரை குளிர்வித்தாகி விட்டது !
வாழ்க பகுத்தறிவுச்சிங்கம் ! வளர்க அவரது ராஜ (ச ?) தந்திரம் !



Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…