Category Archives: பொது

ஒருவழியாக சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பால் தவிக்கும் மக்களுக்கு விடிவு பிறந்தது……

This gallery contains 5 photos.

பொறுப்பில்லாத சில இயக்கங்களின் அர்த்தமற்ற பிடிவாதம், ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மை காரணமாக பல வருடங்களாக பொதுமக்கள், குறிப்பாக சிறுவர், சிறுமிகள் அனுபவித்து வந்த கொடிய தொல்லைகளிலிருந்து உச்சநீதிமன்றம் மிகப்பெரிய விடிவைக் கொடுத்திருக்கிறது. திருவனந்தபுரத்தில், பொதுமக்களின் தொடர்ந்த வலியுறுத்தல் காரணமாக – மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தெரு நாய்களை பிடித்து அழிப்பது என்று மாநகராட்சி நிர்வாகம் முடிவு … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நூறு ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் பல்பு – நாமே தயாரிக்கலாம்….!!!

. . சாதாரணமாக – மனிதன் தன் மூளையின் சக்தியில் பத்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறான் என்று சொல்வது வழக்கம். இது முழுவதுமாக உண்மை இல்லை என்றாலும், சிந்தனைத்திறனை சாணை தீட்டினால் – மனிதன் வாழ்க்கையில் இயற்கையின் துணையுடனேயே பல அற்புதங்களை நிகழ்த்தி அன்றாட வாழ்க்கையை சௌகரியமானதாக செய்து கொள்ளலாம் என்பதை நிரூபிக்கின்றன இந்த இடுகையில் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

( பகுதி -6 – மோசடி மன்னர் ) -சிவராசன் தப்பிக்க சந்திராசாமி உதவியா …?

This gallery contains 1 photo.

( இணைபிரியாதிருந்த இரண்டு “சாமி”கள்…) செக்கச்செவேலென்ற உருவம். கன்னங்கரேலென்று “டை”அடித்த தலைமுடி. எப்போதும் சிரித்த முகம். பல மொழிகளில் பேசும் திறமை – தானே உருவாக்கியுள்ள தீவிரமான தேசபக்தர் – இந்துமதத்தை உய்விக்க வந்திருக்கும் ஒரு உன்னதத்தலைவர் என்கிற புதிய பிம்பம்…. ( 25 வருடங்களுக்கு முந்தைய தோற்றத்தினையும், முகபாவனைகளையும் இன்றைய தோற்றத்துடன் ஒப்பிட்டு பார்த்தாலே … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

தொண்டு உள்ளங்களே எங்கே போனீர்கள்…? கிளம்புங்கள் செயல்படுவோம்….!

This gallery contains 1 photo.

தமிழகத்தில் தொண்டு உள்ளங்களுக்கு பஞ்சமே இல்லை… ஆனால், என்னவோ தெரியவில்லை இந்த தடவை மட்டும் இன்னமும் செயல்படத்துவங்காமல் இருக்கின்றன. அரசியல்வாதிகளை எண்ணி அச்சம் கொண்டு விலகி இருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழகத்தின் ஒரு வருடத்திற்கான சராசரி மழையான சுமார் 440 மி.மீ. அளவு மழையை கடந்த ஒரே வாரத்தில் தொடர்ந்து பொழிந்து, வானமும் – … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இவர்கள் மனித இனமே அல்ல…. !!!

This gallery contains 7 photos.

.   எவ்வளவு கொடிய மனம் இருந்தாலும் கூட – மனிதர்களால் இத்தகைய செயலில் ஈடுபடவே முடியாது…. எந்த பாவமும் அறியாத – 129 மனித உயிர்கள் குடிக்கப்பட்டிருக்கின்றன…. 352 பேர் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்… வீடு வாசல், உடைமை பொருட்கள் அத்தனையையும் அப்படியே விட்டு விட்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நாடு … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

வானிலை அறிவிப்பு -சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!!

This gallery contains 3 photos.

. . வானிலை அறிவிப்பு இன்றைய நாட்களில் நம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது… கவனிக்கப்படுகிறது. அது எத்தகைய பின்னணியில் தயாராகிறது என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் கீழே – ( தகவல்களுக்கு நன்றி – திரு ரமணன், திரு.அன்பு வேலாயுதம் மற்றும் ஜனனம் )

More Galleries | 6 பின்னூட்டங்கள்

சென்னையில் ஒரு அற்புதக் காட்சி ….!!! ( இரண்டரை நிமிட வீடியோ )

. . இயந்திரத்தனமாக இயங்கும் சென்னை என்கிற நரகத்தில் – ( நரகம் தானே …! ) அசுர வேகத்தில் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கும் நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் – ராயப்பேட்டையில் – கருணை, அன்பு – என்றால் என்ன என்று ஒரு மனிதர் நடைமுறையில் செயல்படுத்திக் காட்டுகிறார்…..பாருங்களேன்…!!!

More Galleries | 7 பின்னூட்டங்கள்