…………………………………

………………………………….
சென்ற மாத துவக்கத்தில், தவெக தலைவர் விஜய் அவர்களை “கூத்தாடி” என்று விமரிசித்த அதே விசிக ஆளூர் ஷா நவாஸ் இப்போது “அந்தர் பல்டி” அடிக்கும் ஜூனியர் விகடன் பேட்டி கீழே –
……………….
25 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம்’ எனச் சொல்லி, தி.மு.க கூட்டணிக்குள் பரபரப்பைப் பற்றவைத்திருக் கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இந்தச் சூழலில், அதன் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ-வைச் சந்தித்து, நடப்பு அரசியல் குறித்த சில கேள்விகளை முன்வைத்தேன்…
“அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் சீண்டல் விவகாரத்தில், எஃப்.ஐ.ஆர் லீக்கானது முதல், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு வரை பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுவரும் சூழலிலும், வி.சி.க கண்டன அறிக்கை எதுவும் வெளியிடவில்லையே?”
“அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இந்தத் துயரம் நடந்ததும், சில சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததும், பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களைக் காவல்துறை வெளியிட்டதும் அதிர்ச்சிக்கும் கண்டனத்துக்கும் உரியவைதான். இந்த அத்துமீறல் சம்பவத்துக்கு அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும்தான் பொறுப்பு என்றாலும், குற்றவாளி உடனடியாகக் கைதுசெய்யப்பட்டது ஆறுதல் தரும் செய்தி. பா.ஜ.க., அ.தி.மு.க சொல்வதுபோல இதன் பின்னணியில் வேறு நபர்கள் இருந்தால், அவர்களை நோக்கியும் விசாரணை விரிவடைய வேண்டும். இந்தச் சம்பவத்தைத் தாண்டி தமிழ்நாடு முழுக்கவே, தனிமனிதக் குற்றங்களைத் தடுப்பதற்கான கடமை அரசுக்கு இருக்கிறது. அவ்வாறு தடுக்கப்பட்டால்தான், சிறப்பான சட்டம்- ஒழுங்கு என்று சொல்ல முடியும்.”
“வேங்கைவயல் கொடூரம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ‘இன்னுமா தமிழ்நாடு காவல்துறையை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற விமர்சனம் எழுந்திருக்கிறதே?”
“இரண்டு ஆண்டுகள் கடந்தும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவில்லை என்பதுதி.மு.க அரசுக்குப் பெரும் பின்னடைவுதான். ஆனால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், கள்ளக்குறிச்சி மாணவி ஒருவரின் மரணம், கோவை காஸ் சிலிண்டர் வெடிப்பு ஆகிய விவகாரங்களில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டும்கூட, வழக்குகள் மத்தியப் புலனாய்வுத்துறையின் வசம் சென்றன. ஆனால், இதுவரை எந்தத் தீர்வும் இல்லாத வேங்கைவயல் பிரச்னைக்கு மட்டும் ஏன் இன்னும் சி.பி.ஐ வரவில்லை… கள்ளச்சாராய மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை கேட்டவர்கள், வேங்கைவயல் விவகாரத்துக்கு ஏன் சி.பி.ஐ விசாரணை கோரவில்லை… மேற்படி விவகாரங்களுக்குசி.பி.ஐ விசாரணை கோரியவர்கள் இதில் மெளனம் காப்பது ஏன் என்பதே என் கேள்வி…”
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் 2.27% வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கும் வி.சி.க., சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகள் கேட்பதில் லாஜிக் இருக்கிறதா?”
“2026-ல் எத்தனை சீட்டுகள் கேட்பது என்பது குறித்து எந்த முடிவையும் வி.சி.க எடுக்கவில்லை. ஆனால், மீண்டும் ஆறு சீட்டுகளுக்குக் கையெழுத்திட வாய்ப்பே கிடையாது. வி.சி.க-வை மையப்படுத்தித்தான் தமிழ்நாடு அரசியல் இருக்கிறது. குறிப்பாக வி.சி.க-வுக்கு உரிய இடம் என்னவென்பது அரசியலில் எல்லோருக்கும் தெரிகிறது. ஏன், `தி.மு.க-வினரே உங்களுக்கு ஆறு தொகுதிகள் கொடுத்தது குறைவுதான்’ என என்னிடமே பேசுகின்றனர்.”
“ ‘மதவாதச் சக்திகள் நுழைந்துவிடக் கூடாது’ என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லியே, கூட்டணிக் கட்சிகளைக் குறைந்த தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ள வைத்துவிடுகிறதா தி.மு.க?”
“2001-ல் கலைஞரிடமே 10 தொகுதிகள் பெற்ற கட்சி வி.சி.க. அடுத்தடுத்த தேர்தல்களிலும் அதே நிலையிலான எண்ணிக்கையைப் பெற்றிருக் கிறோம். ஆனால், 2021-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சியமைந்துவிட்டால், பா.ஜ.க தமிழ்நாட்டை நாசமாக்கிவிடும் எனக் குறைந்த தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம். இப்போது, அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். முதல்வரும் ‘2026-ல் தி.மு.க 200 தொகுதிகளில் வெல்லும்’ எனச் சொல்லிவிட்டார். ஆக, கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மதிப்பளிக்கும் நோக்கில்தான், ‘கூட்டணி வலுவாக இருக்கிறது’ என்கிறது தி.மு.க தலைமை.”
“அதிகாரப் பகிர்வை, குறைந்தபட்ச செயல் திட்டமாக்கும் முயற்சியில் வி.சி.க இருப்பதாகச் சொல்கிறார்களே… உண்மையா?”
“வி.சி.க-வைத் தவிர, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் எதுவும் அது பற்றிப் பேசாததால், கோரிக்கை வைப்பதற்கான காலம் கனியவில்லை!”
“அதிகாரப் பகிர்வை, `பொலிட்டிக்கல் பாம்’ என்றார் விஜய். அப்படியானால் அது 2026-ல் வெடிக்காதா?”
அதிகாரப் பகிர்வை விஜய் வரவேற்றதுபோல, அ.தி.மு.க-வும் வரவேற்றால்தான் அது உண்மையிலேயே `பொலிட்டிக்கல் பாம்.’ அப்போதுதான் தி.மு.க கூட்டணிக்குள்ளும் ‘அதிகாரப் பகிர்வு’ குரல்கள் வலுப்படும். ஆனால், ‘அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்றல்லவா அ.தி.மு.க சொல்கிறது!”
“அ.தி.மு.க அல்லது த.வெ.க கூட்டணியில் வி.சி.க இணையலாம் என்கிறார்களே..?”
“பா.ம.க., பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணியில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. ஜனநாயகச் சக்திகளான அ.தி.மு.க-வுடனும் விஜய்யோடும் சேர முடியாது என நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்… அதேசமயம், இப்போது அவர்களுடன் கூட்டணி அமைக்கவேண்டிய தேவை இல்லை. ஏனெனில், தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது.”
……………………………………………………………………………………………………………..



//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…