எடப்பாடியார் லஞ்ச ஊழல் கோப்பில் 8 மாத தாமதம் ஏன்….? இடையில் நடந்தது என்ன ….???

……………………………………………………………

……………………………………………………………..

தமிழ் செய்தி வலையில் தற்போது பரபரப்பான செய்தியொன்று
வெளியாகி இருக்கிறது….. கீழே –

https://tamil.news18.com/tamil-nadu/enquiry-against-aiadmk-chief-edappadi-palaniswami-tn-govt-approves-932581.html

  • ஆகஸ்ட், 22-ல் உருவான கோப்பில்
  • ஏப்ரல், 23-ல்

  • ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
  • அனுமதியளிக்க 8 மாதங்கள் தேவைப்பட்டதன் ரகசியம் என்ன ….?
  • இடையில் என்னென்ன நடந்தன ….??? !!!

…………………………………..

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீதான அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் கட்டுவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் உள்பட 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் 4 ஆயிரத்து 80 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்படவில்லை என்றும், மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதில் மிகப் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அனுமதி அளிக்குமாறு தமிழ்நாடு

  • அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில்
  • கடந்த ஆகஸ்ட் மாதத்தில்
  • கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையேற்று, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதான முறைகேடு புகார் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விசாரணையை சிறப்பு புலனாய்வுக்குழு வசம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படலாம் என்றும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to எடப்பாடியார் லஞ்ச ஊழல் கோப்பில் 8 மாத தாமதம் ஏன்….? இடையில் நடந்தது என்ன ….???

  1. புதியவன் சொல்கிறார்:

    ஆளுநர் திமுக அரசு அனுப்பியவற்றைக் கிடப்பில் போட்டுள்ளார் என்று வாய்க்கு வந்தபடி பேசவேண்டியது. எடப்பாடியின் மீதான நடவடிக்கை மாத்திரம் 8 மாதம் தூங்கினால் இந்த ஊடகங்கள் வாய் திறக்காது (பின்ன எப்படி வரவு பார்ப்பது?). இத்தகைய நம்பிக்கையற்ற ஊடகங்களால்தான் எந்தச் செய்தியும் நம்பிக்கைக்கு உரியதாகப் படிக்கப்படுவதில்லை. ஊடகங்கள்தான் இப்படி என்றால், ஊடகவியலாளர்களின் லஞ்சம் பல்லிளிக்கிறது.

    அது சரி….லஞ்ச ஒழிப்புத் துறை என்றால் என்ன? அது இதுவரை என்ன செய்திருக்கிறது உருப்படியா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s