……………………………………………

……………………………………………….
எந்தவித சந்தேகமும் இல்லாமல், பாஜகவின் பிரதமர் வேட்பாளர்
திருவாளர் நரேந்திர மோடிஜி தான் என்கிற நிலையில் –
அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் –
எதிர்க்கட்சிகள் அனைத்துமே ஒன்றுபட்ட கருத்து உடையவர்கள்
தான் என்றாலும் கூட-
கேள்வி -1) அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கட்சிகளின்
சார்பாக, ஒரே அணியை உருவாக்க முடியுமா….?
கேள்வி -2) அப்படி ஒன்று உருவானால், அதில் பிரதமர் வேட்பாளராக
யாரை தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது…..?
முதல் கேள்விக்கான பதில், 2-வது கேள்விக்கான பதிலை
பொறுத்து தான் அடங்கி இருக்கிறது.
சரி – 2-வது கேள்விக்கான பதிலென்ன…..?
மில்லியன் டாலர் கேள்வி….!!!!
மமதா பேனர்ஜி, (மேற்கு வங்கம்)
சந்திரசேகர் ராவ், (தெலங்கானா)
அர்விந்த் கெஜ்ரிவால், (டெல்லி)
மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு)
ராகுல் காந்தி
surprisingly there could be Even – Sharad Pawar …!!!
-இவர்களில் எல்லாருக்குமே ஆசை இருக்கிறது
அந்த நாற்காலியில் அமர….
ஆனால், இவர்களில் யார் ஒருவர் முன்மொழியப்பட்டாலும்,
அதற்கு குறுக்கே வர – மற்றவர்கள் தயாராகவே இருப்பார்கள்….!!!
அப்படியானால், விடை தான் என்ன …???
அது அவ்வளவு சுலபமா என்ன …?
இது குறித்த விவரமான, தெளிவான, நடுநிலையான
ஒரு அலசலை மேற்கொண்டிருக்கிறார் பத்திரிகையாளர்
ராஜ்தீப் சர்தேசாய்….
பார்ப்போமா ..??? கீழே –
………………………………………………
…………
கபில் சிபல் காமெடி …..
டெல்லி: தனது இமேஜை கெடுக்க சிலர் ஒப்பந்தம் செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். ராஜ்யசபா எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், இது அரசின் ரகசியமாக இருக்க முடியாது என்றும் அப்படி இமேஜை கெடுக்க வேண்டும் செயல்படுபவர்களின் பெயர்களை பிரதமர் மோடி வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் மீது வழக்கு போட வேண்டும் என்றும் கபில்சிபல் வலியுறுத்தி உள்ளார்.
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/modi-ji-s-charge-this-cannot-be-a-state-secret-let-us-prosecute-them-says-kapil-sibal/articlecontent-pf890205-505593.html
…
முதல்வர் பதவிக்கே தகுதியற்றவர்கள் பிரதமர் பதவி வேட்பாளரா நல்ல நகைச்சுவை
ஜனநாயகத்தில் எதுவும் நடக்கும்
முதலில் பிஜேபியில் நரேந்திர மோடிக்கு அடுத்து யோகி ஆதித்யநாத்தா ,நிதின் கத்காரியா என்று சிண்டு முடித்து வழக்கம் போல் தோற்று போய் , இப்பொழுது எதிர்க்கட்சி வரிசையில் சிண்டு முடித்து கட்டுரை எழுத வேண்டியதுதான்.
..
ஆதிரையன்,
உங்கள் கட்சியும், தலைவர்களும் – விவாதத்திற்கு
அப்பாற்பட்டவர்கள் என்று சொல்லுகிறீர்களா….?
உங்களை போன்ற கட்சி சார்ந்தவர்களுக்கு
வேண்டுமானால், கட்சி விசுவாசம்,
கட்டுப்பாடு – எல்லாம் இருக்கலாம்.
ஆனால், நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல…
சுதந்திரமானவன் என்று பலமுறை இங்கேயே
எழுதி இருக்கிறேன்… எனவே, எழுதும் சுதந்திரம்
எனக்கு உண்டு. இன்றைக்கு பாஜகவை விமரிசித்தால்,
நாளையே காங்கிரசையும் விமரிசிக்கக்கூடும்…
எனவே, உங்கள் கட்டுப்பாட்டை எல்லாம்
உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த தளத்தின் பெயரே “விமரிசனம்” தான்
என்பதை மறந்து விடாதீர்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ட்ரெண்டிங் விஷயமெல்லாம் எப்படி உங்கள் கண்ணிலிருந்து தப்பிவிடுகிறது?
ராகுல் ஃபெரோஸ் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாது இருப்பதால், சமீபத்தில் ராபர்ட் வாத்ராவின் (பிரியங்காவின் கணவர்) பையனுக்கு ரேஹன் ராஜீவ் காந்தி என்று பெயர் சூட்டியிருக்கிறாராமே.
இனி என்ன… பேசாமல் அவரையும் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கலாமே. அடுத்த கவுல் பிராமணர் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருப்பது நம் எல்லோருக்கும் (திமுகவினர் உட்பட) நல்லதுதானே.