‘Who is the pappu now?’ – மஹுவா மொய்த்ரா-வுக்கு, ஒரு காங்கிரஸ் எம்.பி.சீட் பார்சேல்…!!!!

பாராளுமன்றத்தில் 13-ந்தேதியன்று திரினமூல் காங்கிரஸ் எம்.பி.
திருமதி மஹூவா மொய்த்ரா பொங்கியது
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. என்னை முக்கியமாக
கவர்ந்தது அவரது சரளமான, வேகமான ஆங்கில உரை.

பாராளுமன்றத்தில், தற்காலங்களில், ஆங்கில உரையை
கேட்பது அபூர்வமாகி விட்டது… முக்கால்வாசி வட இந்திய
எம்.பி.க்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது ஒரு காரணம்.

ஆனால், நன்கு ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆளும்கட்சி
எம்.பி.க்கள்/ மந்திரிகள் கூட எங்கே ஆங்கிலத்தில் பேசினால் தலைமையின் சீற்றத்திற்கு உள்ளாவோமோ என்கிற பயத்தில்,
ஹிந்தியில் வீர உரையாற்றுவதை காண்கிறோம்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் முழுக்க முழுக்க
ஹிந்தியிலேயே அமைகின்றன.ஹிந்தி தெரியாதவர்களுக்கு பாராளுமன்றத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து
கொள்ள உரிமை இல்லையா …?

சொந்த நாட்டிலேயே நாம் அந்நியராகி விட்டோமா…?
2-ம் தர குடிமக்களாகி விட்டோமோ என்கிற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

பாராளுமன்றமும், மத்திய அரசும் – ஹிந்தி வெறியர்களின்
கூடாரமாகி விட்டது எப்படி …? ஓரளவு ஹிந்தி தெரிந்த
எனக்கே இப்படி தோன்றுகிறது என்றால், சுத்தமாக
ஹிந்தி தெரியாதவர்களுக்கு எப்படி இருக்கும்…?

சாம்பிளுக்கு ஒரு 10 நிமிடம் நேரடி ஒளிபரப்பை
பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.

இந்த நிலையில், மஹூவா மொய்த்ராவின் கருத்துகளோடு
நாம் எந்த அளவுக்கு ஒன்றிப் போகிறோம் என்பதை விட,
அவர் பேசும் ஆங்கில உரையை நிச்சயம் ஒன்றிப்போய்
ரசிக்க முடிகிறது என்று சொல்லலாம்.

கீழே – முதலில் பாராளுமன்றத்தில் அவர் பேசும் காணொளி-
பின்னர், அதன் ஆங்கில செய்திச் சுருக்கம் ….

………

.
……………………..

Accusing the BJP government of being incompetent, Trinamool Congress MP Mahua Moitra Tuesday raised a series of questions, on industrial output,
manufacturing sector and the number of people
leaving India, to ask “Who’s the Pappu now?”.

The term had been coined by the ruling party “to denigrate, signify extreme incompetence”,
Moitra added.

The TMC leader, who was taking part in a debate
over the supplementary demand of grants in the
Lok Sabha, said these would amount to an additional expenditure of about Rs 4.36 lakh crore, which will raise the fiscal deficit above the provision in the Budget, and went against “the government’s own stated goal of containing the fiscal deficit”.

According to the NSO numbers released Monday,
industrial output shrunk by 4% in October to a
26-month low.

The manufacturing sector, the biggest generator
of jobs, contracted 5.6%, while 17 of the industry sectors that make up the Index of Industrial
Production recorded negative growth rates. Forex reserves have fallen by $72 billion in just under a year, Moitra said.

The MP also talked about data shared by the
government showing that the number of those
who have given up citizenship in the past
nine years of the Modi government is almost
12.5 lakh. “Is this the sign of a healthy
economic and tax environment?
Who’s the Pappu now?” Moitra said.

The TMC MP next questioned the investigations
initiated by government agencies such as the
Enforcement Directorate against Opposition leaders, including of her party. “The ruling party buys
lawmakers for hundreds of crores in cash and
yet members of the Opposition represent 95% of
lawmakers under investigation by the ED…

Is the objective of the ED just to harass citizens
or to actually track down and punish perpetrators
of financial crimes? What is this level of
incompetence?
Who’s the Pappu now?” Moitra said.

Besides, Moitra said, “Nearly Rs 2,000 crore supplementary demand is for large industries
whereas a mere Rs 233 crore is for MSME industries, which account for 90% of jobs in the industrial
sector. These are very distorted priorities.”

On Finance Minister Nirmala Sitharaman’s
statement Monday that the Opposition raised
questions regarding the economy “out of jealousy”, Moitra said: “I stand here today to tell the
Minister, the government and the ruling party,
that each of us here have given up our lives,
our jibon joubon (youth) in the service of this
great land and its people. We represent the
farthest corners of India, from Karimpur to Kutch, Kashmir to Kanyakumari. It is our inalienable
right to question your incompetence. And it is
raj dharma that should make you sit down,
listen to our voices, and not react like the
proverbial khisiyani billi.”

Moitra took jibes at the political leadership of
the BJP too, referring to the recent Assembly
elections in Gujarat and Himachal Pradesh,
and the Delhi civic polls.

“You fought in three states with all your might,
your resources, you won in only one. The president
of the ruling party (J P Nadda) could not hold on
to his own home state. Who’s the Pappu now?”

Moitra accused the ruling party of “repeating
falsehoods about the benefits of demonetisation
ad nauseam”, and said it had not achieved
any goals such as a cashless digital economy
or phasing out of fake currency. “Cash is
still king. Demonetisation did not achieve any
of the objectives it set out to do.
Who’s the Pappu now?” she said.

Amidst loud cheering from Opposition benches,
Moitra recited a couplet:
“Sawaal yeh nahin ki bastiyan kisne jalaayi.
Sawaal yeh hai ki paagal key haath mein maachis
kisne di (The question is not who lit the fire,
the question is who handed the matchbox to a
crazy person)?”

.
……………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to ‘Who is the pappu now?’ – மஹுவா மொய்த்ரா-வுக்கு, ஒரு காங்கிரஸ் எம்.பி.சீட் பார்சேல்…!!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  இவர் காங்கிரஸுக்குத் தாவப்போகிறாரா? இல்லை, அவர்களின் ஆதரவு ஏதோ காரணத்துக்காக இவருக்குத் தேவைப்படுகிறதா?

  //ஹிந்தி வெறியர்களின் கூடாரமாகி விட்டது எப்படி …? ஓரளவு ஹிந்தி தெரிந்த எனக்கே இப்படி தோன்றுகிறது என்றால், சுத்தமாக ஹிந்தி தெரியாதவர்களுக்கு எப்படி இருக்கும்…?// இது உண்மைதான். ஒரு மொழியை எதிர்ப்பவர்களுக்கும் ஏளனம் செய்பவர்களுக்கும் வட இந்தியர்கள் பதிலடி கொடுக்கிறார்கள் என்று நினைத்தால் மாத்திரம் சந்தோஷம் பொங்குது. குறிப்பாக திமுக, மதிமுக, விசிக கும்பல்களுக்கு நல்ல எனிமா இது. அவர்கள்தானே மொழி வெறியர்கள், சாதி வெறியர்கள், இந்து எதிர்ப்பாளர்கள்.

  //Cash is still king. Demonetisation did not achieve any of the objectives it set out to do.// பண நோட்டு புழங்குவதற்கு முக்கியமான காரணம் வரி ஏய்ப்புச் செய்வதற்கும் கருப்புப் பணத்திற்காகவும்தான். இங்கேயே நாம் டிஜிடல் எகானமியைப் பற்றி ஏளனமாகப் பேசியிருக்கிறோம். 5 வருடங்களில் போன் பே, ஜி பே… என்று அதன் உபயோகம் பலப் பல மடங்குகள் அதிகரித்திருக்கின்றன. சாதாரண தள்ளுவண்டிக்காரர்கள் கூட இதனை உபயோகிக்கின்றனர். மாற்றம் சாதாரணமாக வந்துவிடாது. அதனால் மொய்த்ரா சொல்வது தவறு.

  //objective of the ED just to harass citizens or to actually track down and punish perpetrators of financial crimes? // இதைச் சொல்ல மொய்த்ராவிற்கு என்ன தகுதி இருக்கிறது? மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸை வைத்துத்தானே மேற்கு வங்கத்தில் அராஜகத்தில் அவர் கட்சி ஈடுபட்டது. அதுபற்றி ஏதேனும் அவர் கேட்டமாதிரித் தெரியவில்லையே. தமிழகத்தில் எத்தனை யூடியூபர்கள் மற்றும் அரசைக் கேள்வி கேட்பவர்களை, திமுக அரசு உள்ளே வைத்தது.

  /who have given up citizenship in the past nine years of the Modi government is almost 12.5 lakh.// – இதன் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்தவேண்டும். இரட்டைக் குடியுரிமை என்ற பெயரில் தேசவிரோதிகள் கூடாரம் போட நினைத்தது நடக்கவில்லையா? இல்லை..இங்கே சொத்து வாங்கி, இரட்டை லாபம் அடைய நினைத்தது தடுக்கப்பட்டதா? இன்னும் ஊடுருவியிருக்கும் வங்கதேச முஸ்லீம்களையும் விரட்டினால் கோடிகளைத் தொடும். முதலில் why citizenship is given up என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே அவரது உறவினர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றனர். மேற்கத்தைய நாடு பணம், சௌகரியங்களைத் தருகிறது. அங்கு வேலைக்குச் சென்றவர்கள் பொதுவாக அங்கே செட்டில் ஆவதுதான் வழக்கம் (99.999999 சதம்). திரும்பி இங்கே அவர்களால் வரவோ வாழவோ முடியாது. அவர்கள் கிளைகள் அங்கே பரவியிருக்கும். ஆனானப்பட்ட சோனியா குடும்பமே/கும்பலே இத்தாலி குடியுரிமையை விடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளணும்.

  //ought in three states with all your might, your resources, you won in only one. // மேற்கு வங்கத்தில் ஆட்சி அதிகாரம், பணபலம், சிறுபான்மையினரின் பலம் என்று எல்லாம் இருந்தும் ஏன் அவர் கட்சியால் நூறு சதம் வெற்றிபெற முடியவில்லை?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // ஒரு மொழியை எதிர்ப்பவர்களுக்கும்
   ஏளனம் செய்பவர்களுக்கும் வட இந்தியர்கள்
   பதிலடி கொடுக்கிறார்கள் என்று நினைத்தால்
   மாத்திரம் சந்தோஷம் பொங்குது. //

   உங்கள் வியாக்கியானம் சகிக்கவில்லை ….

   பாஜக தலைமை விமர்சிக்கப்படுவதை
   உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை
   என்பதை மட்டுமே உங்கள் பின்னூட்டம்
   வெளிப்படுத்துகிறது…

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்
   .

   • புதியவன் சொல்கிறார்:

    எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும். எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும். (அடித்தால்.) எற்று சால் எண்ணாயிரம் பொன்.

    ஏதோ காங்கிரஸ் இருந்தபோது வட இந்தியர்கள் அனைவரும் தமிழில் பேசிய மாதிரியும், பாஜக வந்தவுடன் இந்தித் திணிப்பு நடைபெறுவது மாதிரியுமான பம்மாத்து அரசியலுக்குள் நான் புக விரும்பவில்லை. இதில் பாஜக தலைமை எங்கிருந்து வந்தது?

    பிஎஸ் என் எல் புகழ் தயாநிதி மாறன், மத்திய அமைச்சராக ஆனதற்குக் காரணமே ஹிந்தி மொழி என்கிறபோது, எதற்கு ஹிந்தியைப் பார்த்துப் பயப்படவேண்டும்?

    • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

     என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க
     காங்கிரஸ் ஆட்சியில இந்தியை திணிக்கவே இல்லை இல்லை இல்லை இல்லை….
     இவ்வள பேசுறவங்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்து இந்தியை பரப்புவதை தடுக்கலாமே

     • புதியவன் சொல்கிறார்:

      இவங்க, திருவள்ளுவர், வள்ளலார் மதச்சார்பற்றவர்கள் என்று வலிந்து திணிக்கும்கோது கலாச்சாரத்தில் கை வைக்கறாங்களே என்று யாரும் பொங்கவில்லை. இந்திப் படம் வெளியிடும்போது, பாடல்கள் பாடும்போது, இவங்க கட்சிக்காரங்க இந்தியைத் திணிக்கறாங்கன்னு தோணலை. வந்துட்டாங்க பேசறதுக்கு. மேற்கு வங்கத்தில் இதுமாதிரி என்ன என்ன அட்டூழியங்கள் பண்ணறாங்களோ.

      ஊழல், திருட்டுச் சொத்து, இந்துக் கலாச்சார அழிப்பு ஆகியவையே மிக முக்கியப் பிரச்சனைகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.