

………………………
திருச்சி, உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு,
இத்தனை வருடங்களில், குறைந்த பட்சம் 100 முறையாவது
மலையேறிச் சென்றிருப்பேன்…..
மேலே, முக்கால்வாசி தாண்டிய பிறகு இடது புறத்தில்
இருக்கும் பல்லவரின் குகையை பார்த்திருக்கிறேன்…
ஆனால், கம்பிக் கதவுகளின் வழியாகத்தான்…
அதை எப்போதுமே பூட்டி வைத்திருப்பார்கள்…
உள்ளே நுழைய சாதாரணமாக அனுமதி இல்லை.
கீழே இருப்பதாகச் சொல்லப்படும் குகையைப்பற்றி
அநேகமாக யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை;
நான் இப்போது தான் முதல் தடவையாக கேள்விப்படுகிறேன்.
கீழேயுள்ள வீடியோ, அந்த குகையையும், அந்த மலையில்
இருக்கும் இன்னும் சில சரித்திர சம்பந்தமுள்ள இடங்களையும் கூடக் காட்டுகிறது… வர்ணனையுடன்….
அவசியம் காண வேண்டிய ஒரு காணொளி –
……………..
.
………………………………………….
Amazing 🤔
இவர் வரலாற்றையும் சொல்லி, அந்த இடங்களையும் விளக்குவதில் வல்லவர். இதேபோன்று திருமயம் (திருமெய்யம், சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த ஊர்) குடைவரைக் கோவில், விஷ்ணு ஆகியவற்றைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். நாம் (தமிழர்கள்) பெருமைப்படத்தக்க விஷயம்
இந்த மாதிரி கருங்கற்கள் இல்லாத இடங்களில், ஹொய்சாளர்கள் கர்நாடகத்தில் கோவில்கள் உருவாக்கியிருக்கின்றனர். அதில் உள்ள சிற்ப வேலைப்பாடு நம்மைப் பிரமிக்க வைக்கும்.
கேரளாவில் (குறிப்பாக திருவட்டார் ஆதிகேசவன் கோவில்) மரத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டுபோகும்.
மிகச் சமீபத்தில் விஷ்ணு விக்ரஹம் ஒன்றை நெருங்கிப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது (தஞ்சைப் பகுதியில்). பஞ்சலோகத்தில் எவ்வளவு அருமையான கலைப்படைப்பு. இவையெல்லாம் பத்துப் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. அதன் நுணுக்கங்கள், சிரிப்பு, கண், உடலமைப்பு போன்றவற்றைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் (சிலையின் பின்பக்கமும் வெகு அழகு)