
…………………………
இணையத்தில் ஒருவர் தெரிவித்திருக்கும் சில
வித்தியாசமான, விசித்திரமான விவரங்களையும்
கருத்துகளையும் கீழே தந்திருக்கிறேன்….
எந்த அளவிற்கு இந்த கருத்தை நீங்கள் ஏற்பீர்கள் ….?
………………
கட்டுப்பாடுகள் எதற்கு …?
- டிரெட்மில்லை ( TreadMill )
கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார். - ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்
57 வயதில் இறந்தார். - உலக உடற்கட்டமைப்பு சாம்பியன்
41 வயதில் இறந்தார். - உலகின் சிறந்த கால்பந்து வீரர்
மரடோனா தனது 60 வயதில் காலமானார்.
ஆனால்..
- KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில் தான் இறந்தார்.
- Nutella பிராண்ட் கண்டுபிடிப்பாளர்
88 வயதில்தான் இறந்தார். - சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன்
102 வயதில் தான் இறந்தார். - அபின் கண்டுபிடிப்பாளர் 116 வயதில்
அதுவும் – பூகம்பத்தில் இறந்தார். - ஹென்னெஸியின் உலகப் புகழ்பெற்ற பிராந்தி
பிராண்டை கண்டுபிடித்தவர்
98 வயதில் இறந்தார் - MDH மசாலா கொண்ட மனிதர்
97 ஆண்டுகள் வாழ்ந்தார்
பிறகு உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும்
என்ற முடிவுக்கு இந்த மருத்துவர்கள்
எப்படி வந்தனர்?
முயல் எப்பொழுதும் மேலேயும் கீழேயும்
குதித்துக் கொண்டே இருக்கிறது …,
ஆனால் 2 வருடங்கள் மட்டுமே உயிர் பிழைக்கிறது.
ஆனால் உடற்பயிற்சியே செய்யாத ஆமை
400 வருடங்கள் வரை உயிர் பிழைக்கிறது.
எனவே,
ஓய்வெடுங்கள் ….
அமைதியாக இருங்கள்….
குளிர்ச்சியாக இருங்கள் ….
பிடித்த உணவை நன்றாக சாப்பிடுங்கள் ….
நிறையாக தண்ணீர் குடியுங்கள் …
பிடித்த பாடல்களை எப்போதும் கேளுங்கள்
முடிந்த வரை பிறருக்கு உதவுங்கள்
உங்கள் வாழ்க்கையை
முழுமையாக அனுபவித்து வாழுங்கள்…
.
……………………………………………….
இந்தச் செய்தியை ஓரிரு வருடங்களுக்கு முன்பு வாட்சப்பில் வாசித்தேன். இதெல்லாம் சரியான தரவுகள் இல்லை. இதற்கு முன்பு ஒரு இடத்தில் வாசித்தேன், தினம் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கணும் என்று முதன் முதலில் சொல்லியவரிடம், ஏன் அவ்வாறு சொன்னீர்கள், இதற்கு எந்த விதமான ஆராய்ச்சிகள் உபயோகமாக இருந்தன என்று கேட்டதற்கு, பலரும் 40 நிமிடங்கள், 1 மணி நேரம் நடக்கணும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தபோது, நான் வித்தியாசமாக ஏதேனும் சொல்லி எல்லோர் கவனத்தையும் திருப்பலாம் என்பதற்காக அவ்வாறு சொன்னதாகச் சொன்னார். யானை நடந்துகொண்டே இருக்கிறது ஆனால் குண்டாக இருக்கிறது, ஒட்டகச்சிவிங்கி சிங்கம் போன்றவை அவ்வாறு நடப்பதில்லை ஆயினும் குண்டாவதில்லை என்று சொல்லமுடியுமா?
/டிரெட்மில்லை ( TreadMill ) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார்.
ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர் 57 வயதில் இறந்தார்.
உலக உடற்கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில் இறந்தார்.
உலகின் சிறந்த கால்பந்து வீரர் மரடோனா தனது 60 வயதில் காலமானார்.//
ட்ரெட்மில்லில் இவ்வளவு நேரம்தான் நடக்கணும், ஓடணும், இவ்வளவு வேகத்தில்தான் என்று சாதாரண மனிதர்களுக்கு, ப்ரொஃபஷனல்களுக்கு என்று அளவீடுகள் இருக்கின்றன. நான் முன்பு 1 1/2 மணி நேரம் (சில நேரங்களில் 90, 90 நிமிடங்கள் என்றெல்லாம்) ட்ரெட்மில் உபயோகித்திருக்கிறேன் 6.4 வேகத்தில். ஆனால் அவையெல்லாம் தவறு என்பதைப் பின்புதான் புரிந்துகொண்டேன். சாதாரண மனிதர்களுக்குத் தேவை குறைந்தபட்சம் 40 நிமிட வேக நடை (தினமும்).
ஒன்றொன்றையும் கண்டுபிடிப்பதிலேயே காலத்தைச் செலுத்தியதால் அவர்கள் இறந்தனர் என்று கொள்ளலாமா?
நிறைய நாட்கள் உயிர் வாழவேண்டும் என்றால், முதலில் மூச்சை நிதானமாக விடணும். (எல்லாம் தியரிதான். முன்பு ப்ராக்டிஸ் செய்து உணர்ந்துமிருக்கிறேன்). நிமிடத்துக்கு விடும் மூச்சின் அளவு குறையக் குறைய ஆயுள் அதிகரிக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாவிட்டால் நோயும் அண்டாது. ஆமை மிகக் குறைந்த அளவு மூச்சுதான் விடுகிறது. அதனால் ஆயுள் அதிகம்.