
சவுக்கு சங்கரின் பேட்டி ( கீழே ) சொல்லும் செய்திகளைத் தவிர
எனக்கு வேறு சில சந்தேகங்கள் உண்டு.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக திரு, வெங்கையா நாயுடு
நிச்சயம் போட்டி இடுவார்… பாஜக-வுக்கு முழுமையான
மெஜாரிடி இல்லாததால் வெளியிலிருந்தும் ஆதரவு தேவைப்படும்.
எனவே வெங்கையா நாயுடு அவர்கள் தனிப்பட்ட முறையில்
திரு.ஸ்டாலின் அவர்களை அணுகி இருக்கக்கூடும்.
அவரை ஆதரிப்பதால் திமுக-வுக்கும் சில ( வெளியே சொல்ல
முடியாத ) ஆதாயங்கள் உண்டு.
பாஜக வேட்பாளரை எப்படி திமுக ஆதரிக்கிறது என்று
நிச்சயம் விமரிசனங்கள் எழும். அதை சமாளிப்பதற்காக
வெங்கையா நாயுடு அவர்கள் தனிப்பட்ட முறையில்
திமுக-வின் நண்பர் என்பதால் அவரை ஆதரிக்கிறோம்
என்கிற தற்காப்பு வேலியை திமுக முன்னதாகவே
அமைத்துக் கொள்கிறது என்று தோன்றுகிறது….
இதை விட்டால் –
பகுத்தறிவுச் சூரியன்,
சுயமரியாதைச் சிங்கம் கலைஞரின் சிலையை –
ஒரு ஊரறிந்த ஆர்.எஸ்,எஸ்.காரரைக் கொண்டு திறந்து வைக்க
வேறு காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை…….
அது சரி – இது குறித்து நமது இனமானத் தலைவர்
வீரமணியார் வாயே திறக்காமல் இருப்பது எப்படி …?
….
.
………………………………………………………….
//பகுத்தறிவுச் சூரியன், சுயமரியாதைச் சிங்கம் கலைஞரின் சிலையை // – இது யார் கண்டுபிடித்தது?
//இனமானத் தலைவர் வீரமணியார் // – ஏதேது புதிது புதிதாக நிறைய பட்டங்கள் வாரி வழங்கப்படுகின்றனவே..
BJP is keeping communication links open. Otherwise they wouldn’t have allowed this.
bjp will get full majority dont worry no need to Dravidian support
சிங்காரச் சென்னை 2.0 என்று சென்னையில் சாலையில் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டு வருகிறது.
இப்போது கலைஞர் அவர்கள் இந்த சிலையின் கீழ் திறந்து வைத்தவர் வெங்கையா நாயுடு என்று இருக்கிறது.
இந்த நாயுடு என்கின்ற பெயர் என்ன செய்யப்படும்?
கடந்த 50 60 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆண்ட அவர்கள் எல்லோரும் திருடர்கள் கேட்டார்கள் கெட்டவர்கள் அயோக்கிய மாணவர்கள் மோசமானவர்கள் அவர்களால்தான் தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆகிவிட்டது என்று சொல்லிக்கொண்டே இருக்கும் அண்ணாமலை அவருடைய கட்சியினர் அனைவருக்குமே தெரியும் திரு வெங்கையா நாயுடு அவர்கள் பிஜேபி கட்சியின் மிகப்பெரிய தலைவர் துணைக் குடியரசுத் தலைவர் இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நீங்கள் இவ்வாறு குறைகூறும் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக திருடர்கள் திருடர்கள் செய்த ஒரு கட்சியின் தலைவரின் உருவ சிலையை திறக்க ஏன் சென்றீர்கள் அப்படி திருடன் என்று தெரிந்துகொண்டே உங்களுடைய கட்சியின் முதுபெரும் தலைவர் துணைக் குடியரசுத் தலைவர் சிலையை திறக்க செல்கிறார் என்றால் நல்லவனுக்கு திருடன் இடத்தில் என்ன uravu vendum.
திருடர் கூட்டத்தின் தலைவனின் சிலையை திறக்க பாஜகவின் மூத்த தலைவர் செல்கிறார் என்றால் ஒரு துணை குடியரசுத்தலைவர் செல்கிறார் என்றால் அது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்று திருஅண்ணாமலையை சார்ந்த கட்சியினர் கூறினால் ஒரு தலைவனின் சிலையை திறக்க சென்றவர் மீது ஏன் உங்களால் கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கமுடியாது முடியும் ஆனால் எடுக்க மாட்டீர்கள் ஏனென்றால் உங்களுக்கும் திருடர்களின் தயவு தேவை திருடன் திருடன் என்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள் அவர்கள் தங்களுக்கு தேவை ஏனென்றால் இப்பொழுது குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிய போகிறது குடியரசுத் தலைவர் தேர்தல் வரப்போகிறது அதுவும் ஒரு காரணம் தானே என் முடிந்தால் கேட்டிருக்க வேண்டியதுதானே திருடனின் சிலையை திறக்க நீங்கள் ஏன் சென்றாய் தனிப்பட்ட விஷயமாக இருந்தால் கூட அப்படி என்று அண்ணாமலையார் இதைக் கேள்வி கேட்க முடியுமா கேட்டால் அவர் தான் இருக்க முடியும்