போகும்போது இந்த பிரம்மாண்டமும் இவர் கூடவே வரும்….!!!

அதற்கான லக்கேஜ் சார்ஜ் – அட்வான்சாகவே கொடுத்து,
புக்கிங் செய்து விட்டாரென்று கேள்வி … !!!

…….

…..

பொறுமையாக, வயிற்றெரிச்சல் கொள்ளாமல், முழுமையாகப்
படிக்கவும்….

( எல்லாவற்றையும் படித்த பிறகு, கடைசியில் ஆதிசங்கரரின் “பஜகோவிந்தம்” பாடலையும் தமிழில் அர்த்தத்தோடு
ஒரு முறை படிக்கவும்…!!! -அப்போது தான் மனம் “சாந்தி” அடையும்…. !!! )

“வளமான இந்தியா” என்பதை மெய்ப்பிப்பதற்கு
இவர் போன்ற சுமார் ஒரு டஜன் பெரும்பணக்காரர்கள் இன்று
இந்தியாவில் இருக்கிறார்கள்…

இவர்களது “வளம்” இன்னமும்
வளர்ந்து கொண்டிருக்கிறது…!!!

2021 -ஆம் வருட கணக்குப்படி, இவரது சொத்து மதிப்பு
சுமார் 41,000 கோடி ரூபாய் (தான்..)

இந்த பிரம்மாண்டத்தின் சொந்தக்காரர் –
திருவாளர் ராகேஷ் ஜுஞ்ஜூன் வாலா….
கேள்விப்பட்டிருப்பீர்கள் … அரசுக்கு மிகவும் வேண்டியவர்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர்.
பல பெரிய கம்பெனிகளில் முதலீடுகள் செய்திருப்பவர்.

ஆறும் ஆறுமாக மொத்தம் பன்னிரெண்டு
லக்சரி அபார்ட்மெண்டுகளை 371 ரூபாய் கோடி கொடுத்து,
ஒட்டு மொத்தமாக வாங்கி, இப்போது அத்தனையையும்
இடித்து விட்டு, இவரது கற்பனையில் உருவான –
13 மாடிகளோடு, சுமார் 70,000 சதுர அடி கொண்ட
ஒரு பிரம்மாண்டமான மாளிகையை கட்டி வருகிறார்…

இந்த கட்டிடத்தின் –

The 4th floor has a banquet hall wherein
the family can host large gatherings.

The 8th floor has amenities like a gym and
massage.

The 10th floor has 4 large
guest bedrooms.

The 11th floor is dedicated for his children.

It is the 12th floor where Jhunjhunwala and
his wife aim to live life –
Every part of the floor has spacious rooms.
The size of his bathroom exceeds that of
the average 1BHK sold in Mumbai.

His master bedroom of 731 square feet is
20% bigger than the average 2BHK sold by
builders today.

And his living and dining room
is larger than the size of 3BHK apartments
in most luxury projects.

  • இவர் இந்த இடத்தை எப்படி திட்டம் போட்டு – வளைத்து – வாங்கினார்,
    எப்படி இந்த 70,000 சதுர அடி, 13 மாடி பிரம்மாண்டத்தை
    எழுப்பிக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி – இன்னமும்
    முழுமையாக தெரிந்து கொண்டு வயிறெரிய விரும்புபவர்களுக்கு
    லிங்க் கீழே ….

How Rakesh Jhunjhunwala built his
13-floor home in Mumbai –
…………
https://www.moneycontrol.com/news/business/real-estate/how-rakesh-jhunjhunwala-built-his-new-13-storey-home-in-mumbai-8254991.html/amp?utm_campaign=fullarticle&utm_medium=referral&utm_source=inshorts

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

9 Responses to போகும்போது இந்த பிரம்மாண்டமும் இவர் கூடவே வரும்….!!!

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    பஜகோவிந்தம் – என்ன சொல்கிறது….?

    பஜகோவிந்தத்தின் சாரமாக நான் எடுத்துக் கொள்வது –

    ……

    நீ இறுதியில் இந்த உலகைவிட்டு போகும்போது உன் கூட
    என்ன வரும் என்று நினைக்கிறாய் …?

    நீ சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளா…?
    வாரிசு என்று நினைத்திருக்கும் – உன் பிள்ளைகளா, பெண்களா…?

    என்றும் உன்னுடன் இருப்பேன் என்று அக்னி சாட்சியாக
    ஏற்றுக்கொண்ட மனைவியா …?
    மிகவும் வேண்டியவர்கள் என்று நீ கருதும் – உன் உறவினர்களா….?
    உன்னோடு பழகும் – உயிர் நண்பர்களா …?

    முட்டாள் மனிதனே – இவற்றில் எதுவும் உன்னுடன் வராது…
    வர முடியாது….
    வர விரும்பவும் மாட்டார்கள்…!!!

    பின் செத்த பின் எது உன்கூட வரும்….?

    நீ செய்யும் நல்ல-தீய செயல்கள், பாவ-புண்ணியங்கள் –
    ஆகியவற்றின் பலன்கள் மட்டுமே, நீ விரும்பினாலும்
    விரும்பாவிட்டாலும் உன் கூடவே தொடர்ந்து வரும்….

    பாவங்கள் – எதுவென்று உனக்கே தெரியும்….

    புண்ணிய பலன்களை எப்படி சம்பாதிப்பது …..?

    அன்பு, கருணை, இரக்கம் – ஆகிய குணங்களை
    அடிப்படையாகக் கொள். பெண்களுக்கு, குழந்தைகளுக்கு,
    ஏழைகளுக்கு, இயலாதவர்களுக்கு எப்போதும்
    உதவி செய்… அவர்கள் துன்பம் அறிந்து, அந்த துன்பம் போக்க
    உன்னால் இயன்றதைச் செய்.

    வசதியற்றவர்களுக்கு உதவி செய்…
    அவர்களுக்கென்று, சிறப்பான,
    இலவச மருத்துவ மனைகளை உருவாக்கு.
    அநாதைச் சிறுவர்களுக்கு, ஆதரவற்ற பெண்களுக்கு,
    உதவ யாரும் இல்லாத முதியோருக்கு – அடைக்கலமாக இரு.
    கருணை இல்லங்களை உருவாக்கு.

    படிக்க விருப்பம் இருந்தும், வசதியற்ற இளைஞர்களுக்கு,
    தொடர்ந்து படிக்க உதவி செய்.

    எந்தெந்த விதத்தில் எல்லாம், உன் செல்வத்தை – பிறருக்காக
    பயன்படுத்த முடியுமோ – அந்தந்த விதத்தில் எல்லாம்
    அவற்றை பயன்படுத்து.

    கடவுள் உனக்கு செல்வத்தை அளிப்பது – உனக்காக அல்ல…
    உன் மூலம் அதன் பலன் தேவைப்படும் எல்லாருக்கும்
    கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

    ” YOU ARE ONLY CUSTODIAN OF THE PROPERTY –
    NOT ITS OWNER ….!!! ” – என்பதை புரிந்து,
    செயல்பட வேண்டும்…. அதுவே, அந்த புரிதலின் விளைவே –
    நாம் போகும்போது கூட வரும்…!!!

    .
    ………………………………………………

  2. புதியவன் சொல்கிறார்:

    //” YOU ARE ONLY CUSTODIAN OF THE PROPERTY – NOT ITS OWNER ….!!! ”// I used to ask my பெரியப்பா (who was HOD Maths in college but was leading very very ordinary life, walking avoiding bus, eating very very simple food, without having fridge mixie etc. and not even gas stove) why he should live such a life without spending (he won’t allow us to spend as well), he used to say ‘We are custodian of funds’. When I was elevated to CIO, my boss who was Group GM told me, I will have to take decision for million dollars for the company… Always remember, we are custodian of funds and not owners. இதைத்தான் பஜகோவிந்த வரிகள் நினைவுபடுத்துகிறது.

    அம்பானி அத்தனை மாடிக் கட்டடம் கட்டி, அதைப் பராமரிக்க நூற்றுக்கணக்கான வேலை செய்பவர்கள்..ஆனால் அவர் படுத்துக்கொள்வது (அதற்கு நேரம் இருந்தால்) 6க்கு 5 அடி படுக்கையில். அவர் ஷேவ் செய்ய உபயோகிப்பதும் நான் உபயோகிக்கும் ஜில்லட்டின் பிராண்ட்தான் இருக்கும். அப்புறம் எதற்கு இவ்வளவு ஆடம்பரம் என்று தோன்றும் (எங்க யார் இருக்கா என்றே அவருக்குத் தெரியாது)

    ஆனால் பாருங்க… சிலருக்கு நடை, சிலருக்கு சைக்கிள், சிலருக்கு (ஓசியில் வந்த 50 000 ரூ விலையுள்ள) ஸ்போர்ட்ஸ் சைக்கிள், சிலருக்கு டாட்டா நேநோ கார், மாருதி, மெர்சிடிஸ்……, தனி வீடு, ஒரு பெட்ரூம் ஃப்ளாட், இரு பெட்ரூம், நாலு பெட்ரூம்.. இல்லை பெரிய பங்களா-எலெக்‌ஷன் சமயத்தில் ரெய்டு விட்ட பங்களாதான். .இப்படி ஒவ்வொருவருக்கும் ஆசையின் அளவு மாறுபாடடைவதால் ஒருவேளை இவர்களுக்கெல்லாம் பத்து மாடிக் கட்டடம் கேட்கிறதோ என்னவோ. இதில் எல்லாம் அர்த்தம் இருக்கிறதா என்றே தெரியவில்லை.

    சொந்தமாக நேர்மையாகச் சம்பாதித்த காசு என்றாலும், ஏதோ தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார் என்று நினைத்துக்கொள்ளலாம். அடுத்தவன் காசு, அல்லது ஆட்டையைப் போட்ட காசு. சந்தனமும் பெர்ஃப்யூமும் ரொம்ப அதிகமாக மிஞ்சிவிட்டது என்று … அங்கு பூசிக்கொள்வார்கள் போலிருக்கு.

    கல்ஃபில் சொல்லப்படும் ஒரு நிகழ்வு எனக்கு நினைவுக்கு வருகிறது. கேரள பணக்காரர் (கல்ஃபில் சம்பாதித்தது), ஆறு வாசல் வைத்து பெரிய பங்களா கேரளாவில் கட்டினார், ஒவ்வொரு வாசலிலும் ஒரு மெர்சிடஸ் போன்ற கார். இவர் கடைசியில் ஊரைப் பார்த்து நடையைக் கட்டும்போது, கேரளா ஏர்போர்ட்டில் (அல்லது பாதி வழியிலேயே) இறந்துவிட, இவருக்காக வந்த புதுக்காரில், பாடியை ஏற்றக்கூடாது என்று பிண ஊர்திக்குச் சொல்லியனுப்பினார்கள்.

    • சதாசிவம் சொல்கிறார்:

      சம்பாதிப்பதை அனுபவிக்க கூடாது என்ற பழைய சித்தாந்தங்கள் நவீன காலத்திற்கு ஏற்புடையதா என்று பார்க்க வேண்டும். சம்பாதிப்பதை அனைவரும் செலவழிக்காமல் , சேர்த்து வைத்து கொண்டு இருந்தால் மட்டும், அவை இறந்த பின்பு நம்முடன் வந்துவிடுமா என்ன …
      அப்படி உயந்த சிந்தனை உள்ளவர் ஏன் CIO வாக , லட்சங்களில் சம்பளம் பெரும் வேலையை செய்ய வேண்டும் . எளிமையான வாழ்க்கையை வலியுறுத்துபவர் , எளிமையான விவசாய வேலையை ஏற்கலாமே….
      மேலும் எது எளிமை என்பதும் காலத்தை சார்ந்த சொல்லாடல் தான்.இன்று ஆட்டோ வில் போகின்றவனை ஆடமபர பிரியன் என்று கூற முடியாது. ஆனால் இதுவே 30 வருடங்களுக்கு முன் ஆடம்பரம் என்று தான் கருதப்பட்டது.
      சம்பளத்திற்கு ஏற்ற வசதி வாய்ப்புகளை அனுபவிக்க வேண்டிய நிலையம் உள்ளது.
      மேனேஜர் ஆக மிக பெரிய கம்பெனியில் அமர்ந்து கொண்டு, மாருதி 800 வண்டியில் எவ்வாறு பயணிக்க முடியும், அதே போன்று அவர் எப்படி single bedroom aprtment இல் வசிக்க முடியும்.பதவிக்கு ஏற்ற பங்களாவிற்கு தான் அவர் செல்லுவார். இதுவும் நவீன எளிமைத்துவம் தான்.
      வசதியில்லாதவர்கள் , இது போன்று காலத்திற்கு ஒவ்வாத எளிமைகளை மற்றவர்களுக்கு புகட்டி கொண்டு தான் இருப்பார்கள்

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சதாசிவம்,

    இந்த இடுகை மற்றும் இதன் பின்னூட்டங்களின் கருத்தை
    நீங்கள் உள்வாங்கவில்லை அல்லது அதனை
    புரிந்துகொள்ளும் சக்தியோ, மனப்பக்குவமோ
    உங்களுக்கு இல்லை என்பதைத்தான் உங்களது
    பின்னூட்டம் சொல்கிறது.

    சம்பாதிப்பதை அனுபவிக்க வேண்டாமென்று
    யாரும் சொல்லவில்லை;

    நிறைய சம்பாதிக்கிறீர்கள் என்பதற்காக
    ஒரு நாளைக்கு 50 தடவை சாப்பிடுவீர்களா….?

    அல்லது வசதி இருக்கிறது என்பதற்காக,
    ஒரே இரவில் 5 படுக்கைகளில் மாற்றி மாற்றி
    படுப்பீர்களா….?

    மனிதன் தான் சம்பாதிப்பதை அனுபவிக்கக்கூடாது
    என்பதல்ல இங்கே சொல்லப்படுவது.

    உங்களிடம் தேவைக்கு மேல் இருப்பதைக்கொண்டு –
    இல்லாதவர்களுக்கு, ஏழைகளுக்கு, வறியவர்களுக்கு
    உதவுங்கள் என்பது தான் வலியுறுத்தப்படுகிறது.

    “வசதியில்லாதவர்கள் , இது போன்று காலத்திற்கு
    ஒவ்வாத எளிமைகளை மற்றவர்களுக்கு புகட்டி கொண்டு
    தான் இருப்பார்கள்..”

    உங்கள் நோக்கில் –
    இந்த மாதிரி கருத்தை சொல்பவர்கள் எல்லாரும்
    – வக்கற்றவர்களா, வசதியற்றவர்களா….? முட்டாள்களா…?

    ” ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு….”
    ( பொருள் – பொதுநல நோக்குடன் வாழ்கின்ற
    பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள்
    அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த
    ஊருணியைப் போன்றதாகும்….)

    – என்று சொன்ன திருவள்ளுவர் கூட உங்கள் பார்வையில்
    வடிகட்டிய முட்டாள் ஆகிறார்….

    முட்டாள்தனமான, முதிர்ச்சியற்ற சிந்தனை உங்களுடையது.

    நீங்கள் பிறக்கும்போது எதை கொண்டு வந்தீர்கள்….?
    இன்று நீங்கள் அனுபவிக்கும் அத்தனையும்
    இந்த சமூகம் உங்களுக்கு கொடுத்தது… அதற்காகவாவது,
    நீங்கள் இந்த சமூகத்திற்கு கடன் பட்டிருக்கிறீர்கள்.

    அந்த சமூகத்திற்கு பதிலுக்கு நீங்கள்
    என்ன செய்தீர்கள்….?

    இப்படிச் சொல்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
    இப்பேற்பட்ட வடிகட்டிய சுயநலவாத சிந்தனையாளர்
    ஒருவரும் இந்த தளத்தின் வாசகராக இருக்கிறாரே
    என்பதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

    பில் கேட்ஸிலிருந்து – ஷிவ் நாடார் வரை,
    உலகின் பல பெரும்பணக்காரர்கள் –
    ஏழைகளுக்கு உதவ நிதியமைப்புகள் (ட்ரஸ்ட் )
    அமைத்திருப்பது எதைக் காட்டுகிறது…?

    அவர்களின் முட்டாள்தனத்தையா ….?

    அவசர அவசரமாக, பதிலுக்கு எதையாவது
    எழுதிக்கொட்டி, உங்கள் எதிர்மறை எண்ணங்களை
    மேலும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

    நிதானமாக யோசியுங்கள்…
    உங்களது தவறான பார்வையும்
    அணுகுமுறையும் உங்களுக்கே புரியும்.

    .
    வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  4. புதியவன் சொல்கிறார்:

    //சம்பாதிப்பதை அனைவரும் செலவழிக்காமல் , சேர்த்து வைத்து கொண்டு இருந்தால் மட்டும், அவை இறந்த பின்பு நம்முடன் வந்துவிடுமா என்ன …// – சதாசிவம் சார்… அதற்கு அது அர்த்தமல்ல. எதையும் செலவழிக்காமல் சேமித்துவைத்துக்கொள் என்பதல்ல. நம் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு முடிந்தவரை எளிமையாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான். இதுபற்றி நிறைய எழுதினால் தம்பட்டம் அடித்துக்கொள்வதைப்போல ஆகிவிடும். ஆபீஸில் இருக்கும் பொஸிஷனுக்கு ஏற்ற கார்தான் வைத்துக்கொள்ளவேண்டியிருக்கும். அதற்கு ஏற்ற வீட்டில்தான் குடியிருக்கவேண்டியிருக்கும்.

    அதற்கும் ஆடம்பரத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

    அசிம் ப்ரேம்ஜி (விப்ரோ) அவருடைய கிராமத்தில் இருந்தவர்கள் பலருக்கும் ஷேர் பற்றிய அறிவை ஊட்டி, பலரையும் விப்ரோ ஷேர் வாங்கவைத்து கோடீஸ்வரராக்கிவிட்டார். நிறைய நல்ல காரியங்கள் செய்திருக்கிறார் (இதுபோல பல தொழிலதிபர்கள் செய்கின்றனர்). அளவுக்கு மீறிய ஆடம்பரம் (அதாவது அரசு முறைப் பயணம் என்று தனி விமானம் வைத்துக்கொண்டு, பேரன் பேத்திகளோடு அரசுப் பணத்தில் வெளிநாட்டிற்கு ஊர்வலம் செல்வது போன்று) கூடாது என்பதைத்தான் பதிவு சொல்கிறது.

    • சதாசிவம் சொல்கிறார்:

      ஐயா,
      லட்சக்கணக்கில்,கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டு , ஆனாலும் நான் எளிமையாக இருப்பேன், மாதத்திற்கு 5000-10000 க்கு மேல் செலவழிக்க மாட்டேன் என்பது என்னவிதமான எளிமைத்துவம் என்பதுதான் எனக்கு புரிவதில்லை.
      அதற்க்கு பதிலாக, ஏன் நாம் அந்த 5000-10000 வருமானம் உள்ள எளிய தொழிலையே மேற்கொண்டு , மேலும் எளிமையாகவே வாழலாமே.ஏன் அனாவசியமாக நாம் நம்மை நாமே சிரமப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் கோடிக்கணக்கில் சம்பாதித்திக்கொண்டும்,இதுபோல் எளிய வாழ்க்கை வாழ்கிறேன் என்று தம்பட்டம் அடிப்பவர்களும், தங்களது வாங்கி கணக்கில் லட்சக்கணக்கான கோடிகளை இருப்பு வைத்து கொண்டு, பாதுகாப்பாத்தானே தங்களை முதலில் நிலை நிறுத்திக்கொள்கிறார்கள்.யாரும் தங்கள் வங்கி இருப்பு முழுவதையுமே, தானமாக வழங்கி விட துணிய முடியாது அல்லவா…
      ஆடம்பரமாக செலவு செய்பவர்களை நாம் ஏன் இது போல் விமர்சனம் செய்ய வேண்டும்.அவர்கள் தான் உண்மையில் தங்களது செலவு செய்யும் குணத்தால், பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் இது போல் தான் வாரி வழங்கும் கொடை தன்மையுடன் நடந்து கொள்வார்கள்.கடைசியில் அதனால் அவர்கள் ஏழ்மை நிலையை கூட அடையலாம் .ஆனால் எளிமையாக வாழும் கோடீஸ்வரர்கள் யாரும், இது போல் கொடை தன்மையுடன் தான் இருப்பார்கள் என்று நம்புவதற்கில்லை ..ஏனெனில் அவர்கள் பணத்தின் மதிப்பு அறிந்தவர்கள்.அதனை அவர்கள் சேமித்து வைக்கத்தான் முயல்வார்கள். அவர்களின் பாதுகாப்பான வங்கி இருப்பிலிருந்து , எப்பொழுதும் இது போன்று வாரி வழங்கிவிட முயலாது.
      எனவே தான் கோடிக்கணக்கில் சொத்துக்களை கொண்ட, இதுபோன்ற செலவழிக்கும் செயலை நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்.இதில் ஆயிரம் பேர்களுக்கு வருமானம் அல்லவா ஏற்படும்.அவர் ஒன்றும் பணத்தை எரித்து விட வில்லையே.
      நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் …

      .

      • புதியவன் சொல்கிறார்:

        சதாசிவம்… ஆடம்பரத்துக்கும் எளிமைக்கும் வித்தியாசத்தை நீங்க புரிஞ்சுக்கலை. நான் இருந்த ஊர்ல, 1000 ரூபாய் கொடுத்தால் எவ்வளவு பிட்சா வேணுமோ அவ்வளவும் சாப்பிடலாம் என்று வருடத்தில் இருபது நாட்கள் ஆஃபர் போடுவாங்க. அப்போ வரும் கஸ்டமர்களில் சிலர், பிட்சாவின் ஓரப்பகுதிகளைச் சாப்பிடாமல், சீஸ் மற்றும் டாப்பிங்ஸ் இருக்கும் இடத்தை மட்டும் சாப்பிட்டு, அதன் மூலம் நிறைய பிட்சா சாப்பிட முயல்வார்கள். எனக்கு மனதில் அது அநியாயம் என்று தோன்றும்.

        என்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக ஆடம்பரமாக எல்லா உணவுப் பொருளையும் வாங்கி வீணாக்கினால், நான் வாங்குவதன் மூலம் பலரது வாழ்க்கைக்கு உதவுகிறேன் என்பீர்களா இல்லை உணவின் அருமை தெரியாமல் வீணாக்குகிறேன் என்பீர்களா?

        பணம் இருக்கிறது என்பதற்காக 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு 25 மாடிக் கட்டடம் கட்டி வாழ்வது ஆடம்பரம் என்பதைத்தான் இந்தப் பதிவு சொல்கிறது. இருக்கும் பணத்தையெல்லாம் தானம் பண்ணிவிட்டு, ரோட்டு ஓரத்தில் துண்டை விரித்துப் பிச்சையிடு என்று இந்தப் பதிவு சொல்லவில்லை.

        நாம் வாழும் வாழ்க்கை யார் கண்ணையும், அதிலும் ஏழைகளின் கண்ணை உறுத்தும்படியாக இருக்கக்கூடாது. மற்றவர்கள் வயிரெறிய வாழ்ந்து என்ன சாதிப்போம்?

        • சதாசிவம் சொல்கிறார்:

          நீங்கள் உணவு பொருளை வீணாக்குவதை, கடைசியில் இதனுடன் இணைத்துவிடீர்கள்.
          மேற்கண்ட கோடீசுவரர், இது போன்று, பணத்திமிரினால், உணவு பொருட்களை வாங்கி குவித்து, அவற்றை வீணாக்கவில்லையே. உண்மையில் சில ஆயிரங்களே சம்பாதிக்கும் நாமுமே இதுபோன்ற மிச்சமாகிய உணவை, இரவினில் சாக்கடையினில் தான் கொட்டுகிறோம் .ஆனால் கிராமங்களில் அவற்றை, மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி உண்பதை கண்டிருக்கிறேன்.அப்படி பார்த்தால் நாமும் தான் பணத்திமிர் பிடித்தவர்கள் என்று கிராமத்தினர் வர்ணிக்க கூடும்.
          மேற்கண்ட கோடீசுவரர் தன்னிடம் உள்ள அபரிதமான சொத்தை வைத்து, சொகுசாக வாழ்கிறார்.அவர் எதையும் வீணாக்க வில்லையே. அதனால் வேலை வாய்ப்புகள் பெருகும்.அவர் எளிமையாக வாழும் மற்ற கோடீசுவர்கள் போல் (ஆசிம் பிரேம்ஜி, இன்போசிஸ் நாராயண மூர்த்தி) போன்று சேமித்து வைத்து மகிழ தெரியாதவர்கள்.இவர்களுடைய பணத்தால் யாருக்கு தான் லாபம்.அவர்களுக்கு அள்ளி கொடுக்க மனம் வராது, ஏனெனில் அவர்கள் பணத்தின் அருமையை அறிந்தவர்கள்.நாம் அவர்களை எளிமை என்கிறோம். அவர்கள் செய்யும் தான தர்மங்களும், அவர்களுடைய ஆடிட்டர் களின் அறிவுரைப்படி , வரியை குறைப்பதற்காக செய்யும் செயலாகவும் இருக்கலாம் .
          மேலும் மேற்கண்ட கோடீசுவரரும், மற்றவர்களுக்கு ஈயாதவர் என்று எவ்வாறு கணிக்கிறீர்கள்.அவர் செய்யும் தர்மங்களை வெளியில் காட்டி கொண்டுதான் ஆக வேண்டுமா என்ன….
          அவரிடம் உள்ளது எடுக்க எடுக்க, அல்ல அல்ல குறையாத பணம். தாங்கள் யாருக்குமே பயன்படாமல் வங்கியில் வைத்து பூட்டி மகிழ சொல்கிறீர்கள்.ஒருவேளை அவர் யாருக்கும் ஈயாதவராக இருந்தாலும், அவரின் இந்த ஆடம்பர குணத்தினால் நிச்சயம் ஆயிரக்கணக்கானவர் பலன் பெற்றிருப்பர்.வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். அவரை நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்.
          என்னிடமும், 2 பைக்குகள் ,2 செல்போன்கள் ,, 1 சைக்கிள், 1 கார் உள்ளன.நானும் ஆடம்பர பிரியன் தானோ ?
          ஏழைகளை நினைத்து நானும் இனிமேல், அவற்றை விற்று விடலாமா ?அல்லது நானும் பணத்திமிருடன் கடைசி வரை அலைய தான் போகிறேனோ ?

  5. காவிரிமைந்தன் சொல்கிறார்:

    அய்யா சதாசிவம்,

    உங்கள் சிந்தனைக்கு முன்
    நாங்கள் எல்லாம் தூசு…….

    தயவுசெய்து அறியாத பாலகர்களாகிய
    எங்களை விட்டு விடுங்கள்…

    இந்த வலைத்தளமே உங்கள் தகுதிக்கு
    ஏற்றதல்ல.
    உங்கள் தகுதிக்கேற்ற வலைத்தளம்
    வேறு எங்காவது கிடைக்கிறதா என்று பாருங்கள்.

    என் கண்ணில் தென்பட்டால், அவசியம்
    நானும் உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன்…!!!

    (இதை என் சார்பாக மட்டும் தான் சொல்கிறேன்…
    நண்பர் புதியவனுக்கு இன்னமும் தெம்பிருந்தால் –
    தொடர்வார்…!!! )

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.