உயிருள்ளபோதே – திரும்பிப் போய் விடு ….!!!

….

அசுரனின் அழிவு வேலைகள் துவங்கி ஒரு மாதம் நிறைந்து
விட்டது. இன்னும் அவன் பசி அடங்கவில்லை;

ஆனால், இந்த ஒரு மாதத்தில் உலகம் எப்படி
மாறி விட்டது….!!!

உலகம் முழுவதும் உக்ரேனின் பக்கம் நிற்கிறது….

உக்ரேன் முதல் முதலாக, ரஷ்ய ராணுவ தளவாடங்களை
ஏற்றிச்செல்லும் ஒரு கப்பலை, ராக்கெட்டுகளை ஏவி
தகர்த்து விட்டது….
(வீடியோ கீழே )

உக்ரேன் அதிபர் – அப்பீல் செய்கிறார் … இந்த முறை
நாடுகளுக்கோ, அவற்றின் பார்லிமெண்டுகளுக்கோ அல்ல….
(வீடியோ கீழே )

நேரடியாக உலக மக்களை வேண்டுகிறார்…
ஆங்கிலத்தில் அறைகூவல் விடுக்கிறார் –
” அலுவலகங்களை, கல்லூரிகளை, கடைகளை, வீடுகளை
விட்டு வெளியேறி உலக மக்கள் அனைவரும் வீதிக்கு வாருங்கள்….

இந்த கொடும் ராட்சதனை –
அவனது அழிவுச்செயல்களை – எதிர்த்து குரல் கொடுங்கள்…
உக்ரேனில் மட்டுமல்ல ….
உலகம் முழுவதுமே சுதந்திரம் காப்பாற்றப்பட
இது மிக மிக அவசியம்….
உங்கள் உரத்த குரல் எங்களுக்கு உத்வேகம் கொடுக்கும்…..”

உக்ரேனின் தேசிய கீதத்தில் உள்ள – எழுச்சியூட்டும்
சில வரிகள் கீழே –

The Ukrainian national anthem contains
the following lines:
……….

Our enemies shall vanish

Like dew in the sun

We too shall rule

In our beloved country.

Soul and body shall we lay down

For our freedom

……….

கீழே – சில காணொலிகள் ….
…………….

Huge chaos in Russian army:
The troops surrender to Ukraine one by one!

…….
Russian warship destroyed in
occupied port of Berdyansk, says Ukraine –
BBC News
…..

…………..

Ukraine war enters second month
as Zelensky calls for protests – BBC News

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to உயிருள்ளபோதே – திரும்பிப் போய் விடு ….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    போர் என்பது மிகக் கொடியது. அதனால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுகிறார்கள். போரை எப்போதுமே தவிர்க்கவேண்டும். இதில் சந்தேகமே இல்லை. போரினால் பாதிக்கப்படும் ஏதிலிகள் மீது மிகுந்த பரிதாபமும் இரக்கமும் வருகிறது (ரஷ்ய மற்றும் உக்ரைன் இரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதும்தான்)

    ஆனால் உக்ரைன் ரஷ்ய போர் எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம் என்று பார்க்கவேண்டும்.
    உலக நாடுகள் ரஷ்யாவை எதிர்க்கின்றன என்பதெல்லாம் பெரிய விஷயமல்ல. ஒரு ஆயுதமும் வைத்திருக்காத சதாம் ஹுசைனின் ஈராக் மீது, தங்களுக்கு எண்ணெய் சப்ளை செய்யவில்லை என்பதற்காக பொய் குற்றச்சாட்டு கூறி போர் தொடுத்து, சதாமைக் கொன்று, தாங்கள் சொல்லியதுபோல ஈராக்கில் ரசாயன ஆயுதங்களே இல்லை என்று பிறகு அமெரிக்கா கூறியபோது இந்த உலக நாடுகள் என்ன செய்துகொண்டிருந்தன? இன்றைக்கு பிரிட்டன் மற்ற நாடுகள் மீது நேசம் பாராட்டும் நாடாகிவிட முடியுமா? இவர்கள் யோக்கியதை நமக்குத் தெரியாதா?

    இன்றைக்குப் பிரச்சனை, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ரஷ்யாவின் எண்ணெய் வளம் (ஈரான் ஈராக் எண்ணெய் வளம் தவிர) வேணும். அதே சமயம் ரஷ்யாவிற்கு எதிராக தாங்கள் மறைமுகமாக உக்ரைனுக்குக் கொடுத்த தைரியத்துக்காக அவர்கள் கூடவும் நிற்கவேண்டும். அமெரிக்க எஜமானர்களுக்கு வாலாட்டவும் வேண்டும் என்று பல சிக்கல்கள்.

    ஒரு பெரிய நாட்டைத் தன்மீது போர் புரியும்படித் தூண்டினால், அந்தப் பெரிய நாடு போரை நிறுத்த ஏதேனும் ஒரு காரணம், வாய்ப்பு (face saving) தர வேண்டும். இல்லையென்றால் அதனால் போரை நிறுத்த இயலாது. இப்போதும் காசு கொடுத்து ரஷ்யர்களை மேற்குலக புலம் பெயர்தலுக்கு உக்ரைன் உதவுகிறது. உக்ரைனின் தந்திரங்கள் எதுவும் போரை நிறுத்தக்கூடியதல்ல. பி பி சி யின் தந்திரங்களும் எடுபடாது என்றே நான் நினைக்கிறேன் (அது அமெரிக்கா அல்லது பிரிட்டனின் aggressions பற்றி நடுநிலைச் செய்திகளை என்றும் வெளியிட்டதில்லை). When a face saving option arises, I believe Russia will conclude the war.

  2. R KARTHIK சொல்கிறார்:

    “When a face saving option arises, I believe Russia will conclude the war.”
    Will America and Brittan let that happen? Boris Johnson’s UK has a golden opportunity to escape brexit issues. Joe Biden’s US has an opportunity to make its people forget the issues of historic interest rate raise.

    ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.

    Yes, it would be good if these wars end and prosperity prevails for the betterment of humanity.

  3. bandhu சொல்கிறார்:

    இது அமெரிக்காவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.

    கொரோனா காரணமாக அமெரிக்கா நிறைய பணத்தை அச்சடித்து தன் மக்களுக்கு கொடுத்தது. 2000 வருடத்தில் புழக்கத்தில் இருந்த மொத்த டாலர் மதிப்பு 5 ட்ரில்லியன். 2019 கடைசியில் 15 ட்ரில்லியன். இன்றைய தேதியில் 22 ட்ரில்லியன். உண்மையில் பார்த்தால் டாலரின் மதிப்பு பாதாளத்துக்கு போயிருக்க வேண்டும். ஏன் போகவில்லை என்றால் அது அனுபவிக்கும் global reserve currency ஸ்டேடஸ்.

    இதற்க்கு உலகெங்கும் இருக்கும் ஆயில் வர்த்தகம் டாலரில் மட்டுமே நடப்பதால் எல்லா நாடுகளும் டாலரை வைத்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் இருப்பதால் டாலருக்கு எப்போதும் டிமாண்ட் இருக்கிறது.

    இந்த சண்டையினால் அதை இழக்கும் வாய்ப்பு இருக்கிறது. ரஷ்யா இனி ரூபிளில் மட்டுமே ஆயிலை விற்கப்போகிறோம் என்று சொல்லிவிட்டது. நட்பு நாடுகளுக்கு (இந்தியா போன்ற ) அவரவர் கரன்ஸியிலேயே வர்த்தகம். இது நமக்கு மிக மிக சாதகம்.

    சவுதி அரேபியாவும் சீனாவும் தங்களுக்குள் இனி யுவனை (சீன கரன்ஸி) கொண்டு வர்த்தகம் செய்யலாம் என்று பேசிக்கொண்டிருக்கின்றன. இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய ஆயில் இம்போர்ட்டர் சீனா என்பதால் இது நடக்கும் சாத்தியம் அதிகம்.

    சவுதி அரேபிய இளவரசருக்கு பைடனுக்கும் ஏழாம் பொருத்தம். இதை பற்றி சமீபத்தில் ஒரு நிருபர் கேட்டபோது இளவரசரின் பதில் ‘I simply don’t care!’ என்பதிலிருந்தே தெரியும் எந்த அளவு இந்த உறவு கசந்திருக்கிறது என்று.

    தற்போது அமெரிக்காவில் inflation 8% க்கும் அதிகம். இது கடந்த 40 வருடங்களில் மிக அதிகம். பற்பல வருடங்கள் 2% அளவே இருந்து வந்தது.

    இப்போது யோசித்துப் பாருங்கள். இது எந்த அளவு அமெரிக்காவை பாதிக்கும் என்று?

    இந்த சண்டை மூலம் புதிய சூப்பர் பவர்கள் உருவாகும். ரஷ்யா , இந்தியா, சீனா ஓரணியில் இருக்கும். அதுவே உலகின் பலசாலியாக இருக்கும் என நினைக்கிறேன்!

  4. bandh சொல்கிறார்:

    அமெரிக்கா செய்த மிகப்பெரிய தவறு, என்னைப்பொறுத்தவரை, அமெரிக்கன் கம்பெனிகளை ரஷ்யாவை விட்டு விலக ஊக்குவித்தது. ஒரு நாடு இந்த கம்பெனிகள் கொடுக்கும் சர்வீஸ்களை நம்பி இருப்பது எவ்வளவு தவறு என்று இந்த போர் தெளிவு படுத்தியிருக்கிறது. சீனா போன்ற நாடுகள் முன்பிருந்த அளவு இந்த கம்பெனிகளை ஊக்குவிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி!

    இதுவும் மிகப்பெரிய அளவில் அமெரிக்காவை பாதிக்கும்!

  5. bandhu சொல்கிறார்:

    அமெரிக்கா செய்த மிகப்பெரிய தவறு, என்னைப்பொறுத்தவரை, அமெரிக்கன் கம்பெனிகளை ரஷ்யாவை விட்டு விலக ஊக்குவித்தது. ஒரு நாடு இந்த கம்பெனிகள் கொடுக்கும் சர்வீஸ்களை நம்பி இருப்பது எவ்வளவு தவறு என்று இந்த போர் தெளிவு படுத்தியிருக்கிறது. சீனா போன்ற நாடுகள் முன்பிருந்த அளவு இந்த கம்பெனிகளை ஊக்குவிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி!

    விசாவை மட்டுமே நம்பியிருக்காமல் rupay மூலம் வர்த்தகத்தை செய்யும் இந்தியாவின் முனைப்பு எவ்வளவு முன்யோசனையுடன் செய்திருக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

    இதுவும் மிகப்பெரிய அளவில் அமெரிக்காவை பாதிக்கும்!

  6. bandhu சொல்கிறார்:

    புதியவன் கருத்தோடு ஒத்துப்போகிறேன். உலக நாடுகள் அனைத்தும் எதிர்க்கிறன்றன என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. எல்லா நாடுகளும் தங்களுக்கு எது ஆதாயம் தருமோ அதை செய்கின்றன. பெரும்பாலோருக்கு அமெரிக்காவின் தயவு தேவை. அதனால் வால் ஆட்டுகிறார்கள்!

    நாளை ரஷ்யா / சீனா பெரிய அளவு வளர்ந்தால், பெரும்பாலான நாடுகள் வாயை திறக்காது! சிரியாவில் 11 வருடங்களாக போர் நடந்து வருகிறது . எவன் கவலைப்பட்டான்? அங்கும்தான் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்!

  7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    என்னுடைய பார்வைக்கும்,
    உங்களுடைய பார்வைக்கும் –
    கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை…

    நான் அய்யோவென்று மனிதாப கோணத்தில்
    பார்க்கிறேன்… மனம் நொந்து எழுதுகிறேன்.

    நீங்கள் இதிலும் கூட லாப நஷ்ட கணக்கு
    பார்க்கிறீர்கள்.
    .

    • bandhu சொல்கிறார்:

      அப்படி இல்லை சார். எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்ற வழியில் யோசிக்கிறேன்.
      மக்கள் பெருமளவு கொல்லப்படுவது அநியாயம். இதிலிருந்து எப்படி வெளிவருவது.. யார் இதை இயக்குவது என்ற வகையில் யோசித்தேன்.. அவ்வளவுதான்.

      இப்போதைய உலக பொருளாதாரத்தில், ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு வகையில் மற்றொரு நாட்டை சார்ந்து இருக்கிறது. உலகத்தேவையில் பெரும்பாலான கோதுமை / ரசாயன உரங்கள் / சூரியகாந்தி எண்ணை உக்ரைன் மற்றும் ரஷ்யாவிடமிருந்து வருவதாலும், நிலக்கரி / பெட்ரோல் போன்றவை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா மூலம் வருவதாலும், இந்த போர் பொருளாதார பேரழிவை பல நாடுகளுக்கு தரும் என பயப்படுகிறேன். உணவுப்பொருட்களின் விலை பல நாடுகளில் பல மடங்கு அதிகரிக்கும். நடக்கக்கூடாது என வேண்டுகிறேன். நடந்துவிடுமோ என்று பயப்படுகிறேன்.

      சரியாக இதை வெளிப்படுத்தவில்லை!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.