
1951-ல் தமிழ், தெலுங்கு – இரண்டு மொழிகளிலும்
தனித்தனியாக எடுக்கப்பட்டு வெளிவந்த படம்
“பாதாள பைரவி”
இரண்டிலுமே மாபெரும் வெற்றி பெற்றது.
தெலுங்கில் 200 நாட்கள் ஓடிய முதல் படம்
என்று சரித்திரம் படைத்தது.
நாகிரெட்டி, சக்ரபாணி (விஜயா ப்ரொடக்ஷன்ஸ்)
தயாரிக்க, பிரபல பின்னணி பாடகர்
கண்டசாலா இசையமைக்க –
படத்தில் பாடல்கள் மிக நன்றாக வந்தன….
முக்கியமாக மெலடிக்கள் ..பெரும்பாலும் கண்டசாலாவே பாடினார்….
என்.டி.ஆர். அவர்களின் – இளமையான, அழகான தோற்றமும், நடிப்பும் –
கொடிய மந்திரவாதியாக எஸ்.வி.ரங்காராவின் வில்லன் வேடமும்
ஃபன்டசியாக இருந்தாலும் கூட படத்தை விறுவிறுப்பாக
கொண்டு சென்றன…
என்னுடைய 12-13 வது வயதிலிருந்தே என்னைக்கவர்ந்த இனிமையான மெலடிக்களிலொன்று – “அமைதியில்லாதென் மனமே….”
Song based on Naushad song
மெய்ப்பொருள்,
இதில் வேடிக்கை என்னவென்றால் –
“தில்லகி” படத்தின் பாடல்களை நான்
சிறுவயதிலேயே, 52-53-லேயே
நிறைய தடவை கேட்டிருக்கிறேன்….
அப்போது சிறு வயது என்பதால்,
எனக்கு இந்த பாடல் நன்றாக நினைவிருக்கிறது.
இருந்தாலும், இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை
எனக்கு தோன்றாமல் போய் விட்டது.
நீங்கள் போட்டபிறகு பார்த்தேன்… உண்மை தான்.
இந்த மாதிரி இன்னும் சில பாடல்கள் கூட உள்ளன
என்று எம்.எஸ்.வி., இளையராஜா ஆகியோர் கூட
கூறி இருக்கிறார்கள்…. இதை அவர்கள்
inspiration என்று எடுத்துக்கொள்கிறார்கள்….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா மை சார்
தமிழில் இது போல் நிறைய இந்தி பாடல்களில் இருந்து எடுத்தது இருக்கின்றன .
இது ஒரு பழைய பாடல் . இசை – வேதா என்ற வேதாச்சலம் .
And taken from here: