(பகுதி-1) …நினைக்கத்தெரிந்த மனமே….!!!



“நினைக்கத் தெரிந்த மனமே..”
என்று துவங்கியவுடனேயே –

– “உனக்கு – மறக்கத் தெரியாதா..? ”

என்கிற கவிஞர் கண்ணதாசனின் அடுத்த வரி
தன்னாலேயே நினைவிற்கு வந்து விடுகிறது….

சில அந்த காலத்திய பாடல்கள் அப்படித்தான் –
எந்தவித முயற்சியும் இல்லாமலே அடுத்தடுத்த வரிகள்
நினைவிலிருந்து தன்னாலேயே வந்து விழுகின்றன.

இப்படி ஒன்றா, இரண்டா …?
எத்தனையோ பாடல்கள், எத்தனையோ படங்கள்,
அவற்றுடன் பின்னிப்பிணைந்த அந்தந்த சமயத்து
வாழ்க்கை நினைவுகள், அனுபவங்கள்…!!!

சில, பழைய திரைப்பட பாடல்களையோ, படங்களையோ –

நினைக்கையில், அந்த சமயத்தில் நம் வாழ்க்கையில்
நடந்த சில சம்பவங்களும் அத்துடனேயே ஒட்டி வந்து
விழுகின்றன. இது எனக்கு மட்டும் தானா அல்லது
மற்றவர்களுக்கும் உண்டா என்று தெரியவில்லை.

என் வயதையொத்தவர்கள் பலருக்கு இருக்கலாமென்று
தோன்றுகிறது.

நேற்று மதியம் என்ன சாப்பிட்டோம், போன வாரம்
என்ன படித்தோம் என்பதை சட்டென்று நினைவிற்கு
கொண்டு வர முடியவில்லை. ஆனால் 50 வருடங்களுக்கு
முன்னர் நடந்த சில நிகழ்ச்சிகள், அப்படியே திரைப்படம்
போல் கண்கள் முன் ஓடுகின்றன.

இதற்கு, என் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் சில கொடுத்து வைத்தவர்கள் 90 வயதில் கூட
நல்ல ஞாபகசக்தியுடன் இருக்கின்றனர் …
( புண்ணியாத்மாக்கள் ?? – 🙂 🙂 ).
அவர்களுக்கு அந்த பாக்கியம் தொடர வாழ்த்துகிறேன்..!!!

என் ஞாபக சக்தி இன்னும் குறையும் முன்னர்,
தலை சுத்தமாக blank ஆவதற்கு முன்னால் –

சிறுவயதிலிருந்து தொடங்கி – என் பல அனுபவங்களை
என் ரசனைகளுடன் சேர்த்து எழுதி இங்கே பதிவு
செய்துவிட விரும்புகிறேன்.

விமரிசனம் வலைத்தளத்தில், நான் பழைய படங்கள்,
பாடல்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை
எழுதும்போது, நடுத்தர வயதைத்தாண்டிய நண்பர்கள்
பலர் அதை உற்சாகத்துடன் வரவேற்று எழுதுகிறார்கள்
என்பதைப் பார்க்கிறேன். அவர்களுக்கு இந்த
இடுகைத்தொடர் பிடிக்குமென்று நிச்சயம் நம்பலாம்.

இந்த தலைமுறை இளைஞர்களுக்கு –

அவர்கள் அறியாத, அனுபவித்திருக்க வாய்ப்பில்லாத
பல விஷயங்கள் இங்கே பகிரப்படும்போது,
அவர்கள் அதை வித்தியாசமாக உணரலாம்.

அவர்களுக்கு முந்தைய தலைமுறை வாழ்ந்த விதம்,
சூழ்நிலை, ரசனைகள், வசதிகள் பற்றி அவர்கள்
தெரிந்துகொள்ள இந்த இடுகைத்தொடர் ஒரு வாய்ப்பாக
இருக்கலாம்.

என் ரசனைகள் என்று பார்த்தால், சிறு வயதிலேயே
என்னுடன் ஒட்டிக்கொண்டது – சினிமா, சினிமா பாடல்கள்….!
இது 6 வயதிலேயே துவங்கி விட்டது.

பின்னர், 10 வயது அளவில் சேர்ந்து கொண்டது வாசிப்பு…
அப்போதே நிறைய பத்திரிகைகள், வார/மாத இதழ்கள்
படிக்கத் துவங்கி விட்டேன். அப்போதே, ஆங்கில நாளிழில்
தலைப்புச் செய்திகளை மட்டும் படிப்பேன்… புரிந்து கொள்ள
முயற்சிப்பேன்…!!!

பின்னர் 18-20 வயதில் சேர்ந்து கொண்டது –
அரசியல், சமூக அக்கறை/பொது நலம், நிறைய பயணங்கள்…
உலக இயல்பு பற்றிய பொது அறிவு, தேடல்கள்…

எனவே, நான் எழுதும் இந்தத் தொடரில், இவை எல்லாமே
கலந்து வரும்… ஒவ்வொரு சமயத்தில், ஒவ்வொன்று
தூக்கலாக இருக்கும். ஆனால், இவை அனைத்துமே
என்னோடு, என் ரசனைகளோடு/விருப்பங்களோடு ஊறியவை.
உங்களில் பெரும்பாலானவர்களுக்கு நிச்சயம்
பிடிக்கும்படியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இன்றைய துவக்கமாக – என் வாழ்வில்,
எனக்கு நினைவு தெரிந்து,

நான் முதன் முதலாகப் பார்த்த ஒரு திரைப்படம் பற்றி
கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்.

….
அந்த வயதில் என் மனதில் ஆழப்பதிந்த –
குழலூதும் இரட்டையர்கள் –


….

…..


……

தொடரும் …
.
——————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to (பகுதி-1) …நினைக்கத்தெரிந்த மனமே….!!!

  1. Gopi சொல்கிறார்:

    நல்ல தொடக்கம் கே.எம்.சார்.
    அடுத்த பகுதிக்கு அதிகம் காக்க வைத்து விடாதீர்கள்.

  2. D. Chandramouli சொல்கிறார்:

    Dear KM

    How come almost exactly you got my own experience, tastes, forgetfulness of recent events,etc? Look forward to YOUR interesting narrations over the years.

  3. புதியவன் சொல்கிறார்:

    நல்ல துவக்கம். தொடர்ந்து எழுதுங்கள்.

    எனக்கும் பதின்ம வயதில் கேட்ட பாடல்களைத் திரும்பக் கேட்கும்போது மனம் உடல் உணர்வு எல்லாம் அந்தக் காலத்துக்குச் சென்றுவிடும்.

  4. D. Chandramouli சொல்கிறார்:

    When did I see Chandralekha, the one starring the swashbuckling/ and stylish Ranjan, as Villain and M.K.Radha as the hero,. It might have been when I was in my First Form in Hindu High School Triplicane. My mother’s sister and )her husband were living in Chingleput (this was how Chengalpattu was speltt then). My uncle was the Head Master of Borstal School (Reformative institution for young offenders), On a weekend, my elder cousins took me to Chingleput. While staying there,,my auntie said that once a month, the school children were taken to a movie, a, free entertainment and the movie happened to be Chandralekha! I remember that I walked along the street with the children. I enjoyed the fighting scenes. A few years later,, my auntie, an elementary school teacher after the demise of my uncle, said that she heard that she was entitled to claim pension as my uncle was a government servant. I took her to Chingleput school and in the hall, my uncle’s photo was prominently displayed. My auntie was overwhelmed with tears. After a long wait, the pension was granted and she also got retired but that pension helped her pull through the rest of her life till she passed away in her eighties.

    God knows how I could recall such details of an event that happened decades earlieer!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      சந்திரமௌலி சார்,

      இதையே தான் நான் இந்த தொடரை எழுத
      ஆரம்பித்த போது நினைத்தேன். வாழ்க்கையில்
      கடந்த காலங்களில் நடந்த பல முக்கியமான
      விஷயங்களை, நம்மால் எதாவது ஒரு
      பழைய சினிமா அல்லது பாடலின் மூலம்
      மீண்டும் நினைவிற்கு கொண்டு வர முடிகிறது.

      இதே மாதிரி அனுபவங்கள், நம் வயதையொத்த
      மற்றவர்களுக்கும் இருக்கும் என்பது என்
      அனுமானம்.

      உங்கள் பதில் அதை உறுதிப்படுத்துகிறது.
      நண்பர் புதியவன் கூட அதை உறுதிப் படுத்துகிறார்.

      I am very Happy.

      இந்த இடுகைத்தொடர், இதை தொடர்ந்து
      வாசிக்கும் பல நண்பர்களுக்கும்
      இதே போன்ற உணர்வைக்
      கொடுக்கும் என்று நம்புகிறேன்.

      விரைவில் இன்னும் சில நண்பர்களும்
      இதே போல் கருத்து தெரிவிப்பார்கள்
      என்பது என் நம்பிக்கை.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.