…
…

…

…
‘திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல.
எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால்
அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு!
இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு
இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது
கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.
1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி
அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு
தரப்பட்டது.
பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா
ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு
இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது.
அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்… அன்பகம் ஸ்டாலினுக்கு.
இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்…
கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள்.
அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப்
பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது.
ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு
பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர்,
துணை முதலமைச்சராகவும் ஆனார்.
இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான்
நடக்கின்றன.
——————————————
மேலே இருப்பது – நான் எழுதியது அல்ல….
விகடன் ஆசிரியராக இருந்த –
திருவாளர் ப.திருமாவேலன் – முன்னொரு காலத்தில்,
விகடன் தளத்தில் எழுதியவை –
( https://www.vikatan.com/anandavikatan/2011-mar-30/politics/4078.html )
——————————————-
நேற்றைய மின்னம்பலம் செய்தியிலிருந்து சில பகுதிகள் கீழே –
( https://minnambalam.com/k/2019/06/02/34 )
திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், முரசொலி டிரஸ்டின் நிர்வாக
இயக்குனருமான உதயநிதியை கட்சியின் இளைஞரணி மாநிலச்
செயலாளராக நியமிக்க வேண்டும் என்று திமுகவின் பல்வேறு
மாவட்ட அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன.
அதன் அடிப்படையில் திமுகவின் தலைமைக் கழகத்தைச் சேர்ந்த
முக்கிய அமைப்பான சட்டத் திட்ட திருத்தக் குழு கூட்டத்திலும்
நேற்று (ஜூன் 1) தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் அது உதயநிதிக்கு பாராட்டுத் தீர்மானமாக
மாற்றப்பட்டிருக்கிறது.
இளைஞர்களின் ஈர்ப்பு நாயகன் –
திமுகவின் சட்ட திட்ட திருத்தக் குழு மாநில நிர்வாகிகள் கூட்டம்
நேற்று காலை 10 மணியளவில் அறிவாலயத்தில் நடந்தது. மாநில
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடந்த இந்தக்
கூட்டத்துக்கு சட்ட திட்ட திருத்தக் குழுவின் செயலாளர் மூத்த
வழக்கறிஞர் வில்சன், பாலவாக்கம் சோமு ஆகியோர் முன்னிலை
வகித்தனர். குழுவின் இணைச் செயலாளர்கள், உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்.
”இந்தக் கூட்டத்தில் முதலில் உதயநிதிக்கு மாநில இளைஞரணிச்
செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட இருந்தது. அதற்கான வாசகங்களும் எழுதப்பட்டன.
ஆனால் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘இப்போதைக்கு
வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுங்க’ என்று
ஆலோசனை வழங்க, அதன்படியே தீர்மானம் மாற்றப்பட்டது”
என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
பின், ‘தமிழகம் முழுதும் இரவு பகல் பாராமல்
பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை
திமுக கூட்டணிக்காக சூறாவளி பிரச்சாரம்
மேற்கொண்ட –
இளைஞர்களின் ஈர்ப்பு நாயகன்,
முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர்
உதயநிதி அவர்களுக்கு
இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியையும்
வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் சட்ட திட்ட திருத்தக் குழுவினர்.
( சட்ட திட்ட திருத்தக்குழுவுக்கும் இந்த தீர்மானத்திற்கும்
என்ன சம்பந்தம்……? இதுவும் அந்த குழுவின் பொறுப்புகளில்
ஒன்றோ…? )
அதேநேரம் தீர்மானத்தில் உதயநிதிக்கு இளைஞரணி
மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்ற வாசகங்கள்
இடம்பெறவில்லையே என்று உறுப்பினர்கள் சிலர்
வருத்தப்பட்டனர். 🙂 🙂
அந்தக் குறையைப் போக்க… ( 😉 )சட்ட திட்ட திருத்தக் குழுவின்
அனைத்து நிர்வாகிகளும் கையொப்பமிட்டு தனியாக ஒரு
கடிதத்தை கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி திமுக இளைஞரணிச் செயலாளர் பதவியை
உதயநிதிக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து
திமுக தலைவரின் முகவரியிட்டு கடிதம் தயாரித்தனர்.
மாலை 6.30க்கு ஸ்டாலின் அறிவாலயம் வந்தார்.
சட்ட திட்ட திருத்தக் குழு நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது
காலையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை
அவரிடம் கொடுத்தனர்.
படித்துக் கொண்டே வந்த ஸ்டாலின், ……சட்ட திட்ட திருத்தக்குழு
நிறைவேற்றிய தீர்மானத்தை வாசித்துவிட்டு, ’இது நல்லா இருக்கு’
என்று பாராட்டினார்.
அப்புறம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலினிடம்,
சட்ட திட்ட திருத்தக் குழுவின் செயலாளரான மூத்த வழக்கறிஞர்
வில்சன்,
‘தலைவரே… நம்ம சின்னவருக்காக ஒரு சின்ன கோரிக்கை…’
என்று சொல்லி அந்த கடிதத்தை ஸ்டாலின் கையில் கொடுத்தார்.
உதயநிதிக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவி கொடுக்க
வேண்டும் என்று தலைமையை கேட்டுக் கொள்ளும்
அந்த கோரிக்கைக் கடிதத்தைப் படித்துப் பார்த்த ஸ்டாலின்
நிமிர்ந்து, ‘இது சின்ன கோரிக்கையா? பெரிய கோரிக்கையாச்சே? ‘
என்று சொல்லி சிரித்திருக்கிறார்.
அதன் பிறகு, ‘நாங்க தம்பிய பார்த்துவிட்டு வந்துடுறோம் தலைவரே’
என்று குழுவினர் கேட்க புன்னகைத்தபடி விடை கொடுத்திருக்கிறார்
ஸ்டாலின்.
அதன் பின் நேற்று இரவு 7.30 மணிக்கு மேல் செனடாஃப் சாலையில்
உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு சட்ட திட்ட திருத்தக் குழுவினர் சென்றனர்.
சில நிமிடங்களில் அவர்களை வரவேற்ற உதயநிதியிடம்,
‘தலைவர் கலைஞருக்குனு ஒரு ஸ்டைல் இருக்கு.
அப்புறம் உங்க அப்பாவுக்குனு ஒரு ஸ்டைல் இருக்கு.
இப்ப இந்த தேர்தல் பிரச்சாரத்துல
உங்களுக்குனு இயல்பா ஒரு ஸ்டைல் அமைஞ்சிருக்கு.
அது எல்லாருக்கும் பிடிச்சிருக்கு’ என்று சட்ட திட்ட திருத்தக் குழு
உறுப்பினர் ஒருவர் சொல்ல நன்றிங்க என்றிருக்கிறார் உதயநிதி.
—————————————————————————
சங்கர மடத்தில் அடுத்த பீடாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு
என்று சில விதிமுறைகள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம்…
திமுக-வில்….???
– ஒரு வேளை … இது தான் விதிமுறையோ…???

.
———————————————————————————————————–



கா.மை. சார்… என்னுடைய வியூ, இதில் நம் கருத்துக்கு வேலை இல்லை. திமுக மடத்தின் அடிமைகள்தான் இதனைப் பற்றி கருத்துச் சொல்லணும். அவங்களுக்கே தன் மானம் இல்லாதபோது, ஓட்டமாக ஓடிச்சென்று உதயநிதி மகனுக்கு பேம்பர்ஸ் மாட்டிவிட போட்டிபோடும்போது, நமக்கு அதில் என்ன கருத்து இருக்கமுடியும்?
இன்றைக்கு சபரீசன், உதயநிதி கடைக்கண் பட்டால்தான் இந்த அல்லக்கைகளின் வாழ்க்கை ஓடும். அதற்கு என்ன செய்யணுமோ அதைச் செய்யத் துடிக்கிறாங்க. அவங்க என்ன பாரதி பரம்பரையா, ‘சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’ என்று எண்ணுவதற்கு?
புதியவன்,
நாளைய ஆளும் கட்சி என்கிற நிலையில்
திமுக இருக்கும்போது, அவர்களைப்பற்றி
நாம் எப்படி “கவலைப்படாமல்” இருக்க முடியும்…?
சொல்லுங்கள்….!!!
“அவர்கள்” நன்றாக இருந்தால் தானே
தமிழ்நாடு நன்றாக இருக்க முடியும்…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//நாளைய ஆளும் கட்சி என்கிற நிலையில்
திமுக இருக்கும்போது, அவர்களைப்பற்றி
நாம் எப்படி “கவலைப்படாமல்” இருக்க முடியும்…?
சொல்லுங்கள்….!!!//
Pagal Kanvu kanatheergal KM Sir.
It is not a surprise and no point worrying because it is well known factor
// திமுக ஜெயிச்சதுக்கு உதயநிதிதான் காரணமா? இதெல்லாம் எவ்வளவு அசிங்கம்? புகைச்சலில் சீனியர்கள் //
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/dmk-seniors-upset-over-udhayanidhi-s-elevation-352734.html … என்று இப்படி ஒரு செய்தியும் வரும் — இடுகையில் உள்ளது போலவும் செய்திகள் வரும் –!
சூப்பரா பில்டப் கொடுத்து நாடகம் ஆட வந்துவிட்டார்கள் … ! இப்படி ஆதரவு — எதிர்ப்பு என்று கூறுவதெல்லாம் சும்மா ஒரு பம்மாத்து வேலை — அடிமட்ட தொண்டர்களை ஏமாற்றும் வேலை — இரண்டையும் செய்வது ஒரே கூட்டம் தான் — ! இவர்களின் வரலாறே அப்படிதான் …! கனிமொழி என் மகளே அல்ல என்று சொன்ன வாய்தான் இவுங்க தலைவரோட வாய் … எப்பா கில்லாடிகள் … ? ” மூன்றாம் கலைஞர் ” என்று பல மாதங்களுக்கு முன்பே டைட்டில் கொடுத்து தூக்கிப் பிடித்தவர்களும் இவர்களே … ! மடம் அல்ல — குடும்ப கட்சிக்கூடம் ,,, ?