திரு.ஸ்டாலினுக்கு – இதுவும் கூட உதவலாம் …!




இந்த காலத்தில் ஒவ்வொரு கட்சியும்
தனித்தனியே தொலைக்காட்சி
சேனல்களை வைத்திருக்கின்றன.

தங்கள் தலைவரின் பெருமையை
பேசுவதற்கு மட்டுமல்லாமல்,
தங்களுக்கு விரோதமான கட்சித்தலைவர்களின்
பலவீனங்களை வெளிப்படுத்துவதற்கும்
அவற்றை பெரிய அளவில் பயன்படுத்துகின்றன.
Main stream தொலைக்காட்சிகள் தவற விடும்
காட்சிகளை இவை படம்பிடித்து வெளியிடுகின்றன….

அத்தகைய ஒரு காட்சி… அண்மையில்
விஜய்காந்த்தின் கேப்டன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
விஜயவாடாவில், நிகழ்ந்த ஜெகன்மோகன் ரெட்டியின்
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின்
குறித்த காட்சி தான் அது…

நீங்களே பாருங்களேன் – புரியும்…!!!

தர்மசங்கடமான நிலை திரு.ஸ்டாலினுக்கு…
அழிப்பதா… வேண்டாமா…?
இறுதியில் அப்படியே விட்டு விட்டு, உரையும் நிகழ்த்துகிறார்.

இங்கே ஒன்றை சொல்லியாக வேண்டும்..
நெற்றியில் குங்குமப் பொட்டு தகதகக்க ஒளிரும்
இந்த புகைப்படத்தை ஸ்டாலின் – அடுத்த தேர்தலின்போது
பயன்படுத்துகிற விதத்தில் பயன்படுத்தினால்,
இன்னும் சில ஓட்டுகளை
கூடுதலாக பெற அது உதவக்கூடும் ….. !!!

இல்லையா… 🙂 🙂 🙂

.
———————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திரு.ஸ்டாலினுக்கு – இதுவும் கூட உதவலாம் …!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… இந்தத் தேர்தலில் ஸ்டாலின், முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ வாக்குகள் முழுவதுமாகத் தான் பெறவேண்டும் என்பதனால் மதவாதமாக நடந்துகொண்டார். இந்துமதத்தை இழிவுபடுத்தினார். பாஜகவை ‘இந்துத்துவா’ கட்சி என்று பிரச்சாரம் செய்தார் (அதில் தவறில்லை. பாஜக இந்துத்துவா கட்சிதான், திமுக/காங்கிரஸ் ‘சிறுபான்மை தத்துவ’க் கட்சி என்பதால்).

    இங்கு ‘மதத்தைப் பற்றி’ எழுதவேண்டாம் என்பதால் நான் தமிழகத்தில் ‘மத’ சம்பந்தமாக என்ன நடக்கிறது என்று எழுதவில்லை. நீங்கள் ‘ஓகே’ என்று சொன்னால்தான் எழுதுவேன். இங்குள்ள திமுக அரசு, எந்த அளவு இந்து விரோதத்தைக் கடைபிடிக்கிறது என்றால் (அதாவது இன்னொரு மதத்தவரை please செய்வதற்காக, அவங்க கேட்டுக்கொண்டதனால்), தாமிரவருணி புஷ்கரம் நிகழ்ச்சிக்கு ‘தமிழக அரசு’ எந்த விதமான உதவியும் செய்யக்கூடாது என்று அரசை திமுக வலியுறுத்தியது. (இதனால் அந்த அந்த லோகல் பஞ்சாயத்துகள் பணம் வசூலித்து ஏற்பாடுகளைச் செய்தன. இதன் காரணம் ‘இந்து’ நிகழ்ச்சிகள் தென் தமிழகத்தில் நடக்கக்கூடாது என்ற காரணம்தான். நான் நேரில் கேட்டறிந்த சில நிகழ்வுகள் இருக்கின்றன-நம் கோவில்களில் வேலை பார்ப்பவர்கள், அதன் இன்சார்ஜுகள்…இதெல்லாம்தான் என் ‘இந்துத்துவ’ ஆதரவுக்குக் காரணம். எப்படி ஹிந்தித் திணிப்பை நாம் எதிர்ப்போமோ அதேபோல, இந்து எதிர்ப்பை மிக வலிமையாக எதிர்ப்பேன், நாம் எதிர்க்கவேண்டும்)

    வாட்சப்பில் உலாவிய செய்தியையும் எழுதுகிறேன். கர்னாடகா, ஆந்திராவில் கன்னடர், தெலுங்கர் அல்லாதவர்களுக்குச் சலுகை இல்லாததுபோல, தமிழகத்திலும் 72ல் கருணாநிதி சட்டநாதன் கமிஷனை அமைத்து இதனை ஆராயச் சொன்னதில், சட்டநாதன் கமிஷன் எந்த எந்த சாதிகள் ‘தமிழ்’ தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று லிஸ்ட் போட்டு 300 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. அதனைப் பார்த்த கருணாநிதி, தன்னுடைய ‘சின்ன மேளம்’-இசை வேளாளர்’ சாதி, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டதால் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதை அறிந்து இது புதுப் பிரச்சனையைக் கிளப்பும் என்று அறிக்கையையே குப்பைக் கூடையில் எறிந்துவிட்டாராம்.

    இப்போது தெரிகிறதா, ஏன் ஸ்டாலின் அந்த மீட்டிங்கில் தெலுங்கில் சில வார்த்தைகள் பேசினார் என்று. “திராவிடன்” என்று சொல்லி, தமிழகத்தைச் சுரண்டியது கருணானிதி குடும்பம். அவங்கள்ட நேர்மையை எதிர்பார்ப்பது, கல்லில் நார் உரிப்பதைவிடக் கடினமானது.

    திமுக அல்லக்கைகள் (இதைவிட மோசமான வார்த்தை எனக்குக் கிடைக்கவில்லை) வீரமணி, சுப.வீ போன்றவர்கள், இந்த மாதிரி விஷயத்தைக் கண்டுகொள்ள மாட்டார்கள். காரணம், இதனைப் பற்றிச் சொன்னால், ஒரே நாளில் தமிழகத்தில் அவர்கள் களமாட முடியாதபடி ஸ்டாலின் அவர்களைக் கவனித்துக்கொள்வார்.

  2. Robin's avatar Robin சொல்கிறார்:

    If you explain What is denied for NonKannadigas in Karnataka, it would strengthen your arguments.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.