…
…

…
திருவரங்கம் செல்லும்போதெல்லாம்,
கம்பன் தனது இராமகாதையை அரங்கேற்றிய
இடத்தில் 10 நிமிடங்கள் அமர்ந்து
1000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த
அந்த காட்சியை – கற்பனையில் நினைத்து,
ரசித்து விட்டுத்தான் வருவேன்…
ரொம்ப நாட்கள் ஆகி விட்டன…
டாக்டர் கலாம் அவர்களைப் பார்த்து…
திரு.அப்துல் கலாமுக்கும் –
கம்ப ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்…?
தமிழும், இலக்கியமும் –
அந்த அளவிற்கு அவரை கவர்ந்து இழுக்கின்றன…
சுகி சிவம் அவர்களின் உரையை
எவ்வளவு ஆர்வத்துடன் கவனிக்கிறார்
அப்போதைய ஜனாதிபதி கலாம் அவர்கள்…..!!!
கம்பனின் தமிழையும்,
கற்பனை வளத்தையும்,
கேட்டுக் கொண்டே இருக்கலாம்…
அதுவும் சுகி சிவம் அவர்களின் உரை என்றால் –
தேனோடு கலந்த தெள்ளமுது …!!!
கம்பன் சீதையை ஒவ்வொரு கட்டத்திலும்
வித்தியாசமாக வர்ணித்த விதமும்,
உலக அரங்கில், விவேகானந்தர்
சீதையை பெருமைப்படுத்திய விதமும்
மிக அழகாக இங்கே உரைக்கப்படுகின்றன….
…
…
தொடர்கிறது அடுத்த பகுதியில்….
…
…
.
——————————————————————————————————



Arumai